Published:Updated:

200 தொகுதிகளைக் கைப்பற்றுவோம்..! மன்னார்குடியில் டி.டி.வி.தினகரன் சூளுரை

200 தொகுதிகளைக் கைப்பற்றுவோம்..! மன்னார்குடியில் டி.டி.வி.தினகரன் சூளுரை
200 தொகுதிகளைக் கைப்பற்றுவோம்..! மன்னார்குடியில் டி.டி.வி.தினகரன் சூளுரை

`தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க 200 தொகுதிகளில் வெற்றி பெறும். இங்கு (மன்னார்குடி) ஒரு பவர் சென்டர் இருந்து வந்தது. அது இப்போது பீஸ் போய்க் கிடக்கிறது' என திவாகரனைத் தாக்கி டி.டி.வி தினகரன் பேசினார்.

200 தொகுதிகளைக் கைப்பற்றுவோம்..! மன்னார்குடியில் டி.டி.வி.தினகரன் சூளுரை

மன்னார்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் தினகரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது, 'என் சொந்த ஊர் கூட்டம் என்பதால் மிகவும் மகிழ்ச்சியோடு கலந்துகொள்ள வந்தேன். பொதுச்செயலாளர் சின்னம்மா இல்லாமல் தனியாக வந்திருப்பதுதான் வருத்தமாக உள்ளது. அம்மா  மறைவுக்குப் பிறகு நம்மால் முதல்வர் ஆனவர்கள் துரோகம் செய்து விட்டார்கள்.  முட்டை, பருப்பு, சாலை என அனைத்திலும் ஊழல் நடக்கிறது. ஊழல் செய்வதற்காகவே பல திட்டங்கள் உருவாக்கப்படுகிறது.

200 தொகுதிகளைக் கைப்பற்றுவோம்..! மன்னார்குடியில் டி.டி.வி.தினகரன் சூளுரை

தூர்வாருதலுக்காக ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாய் நிதி முழுவதும் ஊழல் செய்யப்பட்டுள்ளது. காட்டிலிருந்து வந்தவர் போலவும், இதுவரையில் மனிதர்களைப் பார்க்காதவர் போலவும் முதலமைச்சர் பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி அவர்களுடைய உறவினர்களுக்கே காண்ட்ராக்ட் கொடுத்திருக்கிறார். எல்லாம்  2,000 கோடி, 4,000 கோடி டெண்டர்தான். இது குறித்து வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

திருப்பறங்குன்றம் தொகுதி எனக்குச் சொந்த ஊரான மன்னார்குடி போன்றது. எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம். மன்னார்குடியில் ஒரு பவர் சென்டர் இருந்தது. அது தற்போது பீஸ் போய் உள்ளது. அ.ம.மு.கவில்  உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தான்டப் போகிறது. தாய் எட்டு அடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாயும் என்பதற்கு ஏற்றார் போல் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். 

விவசாயிகளை குறிவைத்து மத்திய, மாநில அரசுகள் தாக்குதல் நடத்துகிறது. டெல்டா மாவட்டங்களில் 2.5 லட்சம் ஏக்கரை அழிக்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் தீட்டி வருகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தால் அதில் 200 தொகுதியில் நாங்கள் வெற்றி பெறுவோம். நீங்கள் ஓட்டுக்கு 10,000 ரூபாய் கூட கொடுங்கள். சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்கள் ஒன்றாக வரும். அதில் வெற்றி பெற்ற பிறகு அ.ம.மு.கவின் முதல் வெற்றிப் பொதுக்கூட்டம், எனது சொந்த மண்ணான மன்னார்குடியில் நடக்கும்.

 டெல்டா  மண்ணில் வைரமே கிடைத்தாலும் எங்களுக்கு வேண்டாம். காவிரிப் படுகையில் விவசாயத்தைத் தவிர வேறு எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தினகரன் சிரித்துக்கொண்டே இருக்கிறான் என்று எண்ணிவிடாதீர்கள். உங்கள் பினாமி யார் என்பது குறித்த ரகசியம் அத்தனையும் தெரியும். செய்த ஊழல்கள் குறித்த ஆதாரங்களும் உள்ளது. இப்போது போலீஸ் பாதுகாப்போடு வரும் நீங்கள், நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஜெயிலுக்குச் செல்வது உறுதி. 

அமைச்சர் ஆர்.காமராஜ் மாற்று வேட்டிக்குக் கூட வழியில்லாமல் இருந்தார். இன்றைக்கு எப்படி இருக்கிறார். அவரும் முதல்வரைப் போல அக்கா மகன், மாமா மகன் என உறவினர்களுக்கு டெண்டரைக் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் யாருமே விரும்பாத ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்துகிற நேரம் வந்து விட்டது' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு