Published:Updated:

கோவையில் காங்கிரஸ் கொடிகளுக்கு தீ வைப்பு; 50 மாணவர்கள் கைது!

கோவையில் காங்கிரஸ் கொடிகளுக்கு தீ வைப்பு; 50 மாணவர்கள் கைது!
கோவையில் காங்கிரஸ் கொடிகளுக்கு தீ வைப்பு; 50 மாணவர்கள் கைது!

கோவை: திருச்சியில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக கோவையில் நட‌ந்த மாணவர் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சிக் கொடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனையடுத்து 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் தனி தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராடி வருவது நாம் அறிந்ததே. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடந்த மாணவர் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் மாணவர்கள் பலர் பலத்த காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ,  இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும் கோவை டவுண் ஹால் பகுதியில் மறியல் நடந்தது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு நடத்திய இந்த போராட்டத்தில்காங்கிரஸ் கட்சிக் கொடிகள் சாலையில் வைத்து தீ வைத்து எரிக்கப்பட்டன.

கோவையில் காங்கிரஸ் கொடிகளுக்கு தீ வைப்பு; 50 மாணவர்கள் கைது!

மேலும் தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்களின் மறியல் போராட்டம் காரணமாக டவுண் ஹால் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.