தான் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தபோது அடைந்த சந்தோஷத்தைவிட, சங் பரிவாரைச் சேர்ந்த ஒருவரை முதல்முறையாக ஜனாதிபதியாக ஆக்கியபோது அடைந்த மகிழ்ச்சியைவிட, அதிக உற்சாகத்தில் இப்போது இருக்கிறார் நரேந்திர மோடி. காரணம், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் பி.ஜே.பி கூட்டணிக்கு வந்தது. புதன்கிழமை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வியாழக்கிழமை மீண்டும் பி.ஜே.பி ஆதரவுடன் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டிருக்கிறார் நிதிஷ் குமார்.

பிரதமர் ஆன நிமிடத்திலிருந்து எல்லா களங்களிலும் வெற்றிகளையே குவித்துக் கொண்டிருக்கும் மோடிக்கு நிகழ்ந்த சறுக்கல்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று, டெல்லி சட்டசபைத் தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் கிடைத்த படுமோசமான தோல்வி. இரண்டாவது, பீகார் சட்டசபைத் தேர்தலில் கிடைத்த தோல்வி. டெல்லி தோல்விகூட அவ்வளவு ஆபத்தானது இல்லை. ஆனால், பீகார் அப்படிப்பட்டது இல்லை.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, பி.ஜே.பி-க்கு எதிராக பல கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்க திரும்பத் திரும்ப முயற்சி செய்கிறது காங்கிரஸ். அதில், காங்கிரஸுக்குப் பெரிய வெற்றி கிடைத்தது பீகாரில்தான். எதிரெதிர் துருவங்களாக இருந்த ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமாரையும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவையும் கைகோக்கச் செய்து, காங்கிரஸ் ஒரு மகா கூட்டணியை உருவாக்கியது. இந்தக் கூட்டணி தேர்தலில் வென்றது; கூட்டணி ஆட்சியை அமைத்தது.

இதற்குமுன் 17 ஆண்டுகள் பி.ஜே.பி கூட்டணியில் இருந்தவர் நிதிஷ். இணக்கமான கூட்டணியாகவும் அது இருந்தது. மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியை முறித்தார் நிதிஷ். நாடாளுமன்றத் தேர்தலைத் தனித்து சந்தித்தார். அதில் படுதோல்வி கிடைத்தது. எனவே, லாலுவுடனும், காங்கிரஸுடனும் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார். தேர்தலில் லாலு கட்சிக்கு 80 இடங்கள் கிடைத்தன; நிதிஷ் கட்சிக்கு 71 இடங்கள்தான் கிடைத்தன. ஆனாலும், நிதிஷ்தான் முதல்வர் ஆனார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் ஆனார். இன்னொரு மகன் தேஜ் பிரதாப், சுகாதார அமைச்சர் ஆனார்.

இந்தக் கூட்டணி வெற்றியடைந்த பிறகு, நிதிஷை மோடியோடு ஒப்பிட்டுப் பலரும் பேச ஆரம்பித்தனர். இருவருமே பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த, செல்வாக்கான தலைவர்கள். ஊழலுக்கு எதிராக உறுதியான மனநிலை கொண்டவர்கள். அதனால், ‘அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்து, எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் முன்னிறுத்தப்படுவார்’ என்றெல்லாம் யூகங்கள் கிளம்பின. இதை நிதிஷ் குமாரும் ரசிக்கவே செய்தார்.

ஆனால், எல்லாமே இரண்டரை ஆண்டுகளில் தலைகீழாகிவிட்டன. கூட்டணி நிகழ்வுகளில் பங்கேற்க மறுப்பது, ஜனாதிபதி தேர்தலில் மோடியின் வேட்பாளருக்கு ஆதரவளித்தது என முரண்டு பிடித்தார் நிதிஷ் குமார். லாலு வீட்டில் சமீபத்தில் நிகழ்ந்த சிபி.ஐ ரெய்டுதான் இதன் க்ளைமாக்ஸ். ரயில்வே கான்டிராக்ட் வழங்குவதில் நிகழ்ந்த ஊழலில், துணை முதல்வர் தேஜஸ்வி பெயரில் முறைகேடாக சொத்துகள் வாங்கப்பட்டது அம்பலத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் நடந்த உரசலில், ‘‘ஆட்சி நிலைக்க வேண்டும் என்பதற்காக தப்பான விஷயத்தை என்னால் ஆதரிக்க முடியாது’’ என்று அறிவித்துவிட்டு ராஜினாமா செய்தார் நிதிஷ். சில நிமிடங்களில் பிரதமர் அவரைப் பாராட்டியதும், பி.ஜே.பி உடனே ஆதரவு தெரிவித்ததும், இதற்காக பொறுப்பு கவர்னர் கேசரிநாத் திரிபாதி பாட்னாவுக்கு வந்து காத்திருந்ததும்... எல்லாமே ‘தற்செயல்’ போலவே நடந்தேறின.

நிதிஷின் இந்த முடிவுக்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். பி.ஜே.பி-யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவருடன் லாலு டீல் பேசினாராம். ‘எங்கள் குடும்பத்தினர் மீது இருக்கும் வழக்குகளைச் சரி செய்யுங்கள். நிதிஷைக் கவிழ்த்துவிட்டு, பி.ஜே.பி-யைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவதற்கு ஆதரவு தருகிறேன்’ என்றாராம். ‘‘இதை நிதிஷிடம் பி.ஜே.பி போட்டுக்கொடுத்துவிட்டது. அதனால் அவர் முந்திக்கொண்டார்’’ என்கிறார்கள் சிலர். இன்னொரு தரப்பினர், ‘‘நிதிஷ் கட்சியை உடைத்து, அவர்களைத் தன் கட்சியில் சேர்த்து, தன் மகனை முதல்வர் ஆக்குவதற்கு லாலு ஏற்பாடு செய்தார். அது நிதிஷுக்குத் தெரிந்துவிட்டது’’ என்கிறார்கள்.

பீகார் கூட்டணி போல உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவையும் மாயாவதியையும் இணைத்து மெகா கூட்டணியை அமைக்கிறது காங்கிரஸ். சமீபத்தில் தனது ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்த மாயாவதி, புல்பூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் இந்தக் கூட்டணியின் வேட்பாளர் ஆவார் என யூகங்கள் கிளம்பியுள்ளன. ஒருவேளை அவர் ஜெயித்தால், அதை வைத்து உ.பி., பீகார் என 120 எம்.பி தொகுதிகள் கொண்ட இந்தியாவின் மைய நிலத்தில் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் திட்டமிட்டது. ஆரம்பத்திலேயே அதை வீழ்த்திவிட்டார் மோடி.

- அகஸ்டஸ்