Published:Updated:

ஜெயலலிதாவுக்கு, திருமாவளவன் திடீர் பாராட்டு

ஜெயலலிதாவுக்கு, திருமாவளவன் திடீர் பாராட்டு
ஜெயலலிதாவுக்கு, திருமாவளவன் திடீர் பாராட்டு
ஜெயலலிதாவுக்கு, திருமாவளவன் திடீர் பாராட்டு

சென்னை: இலங்கை பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரலாற்று சிறப்பு மிக்கது என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், மாணவர்களும் ஈழச்சிக்கல் தொடர்பாக வலியுறுத்தி வந்த கருத்துகளை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமாக முன்மொழிந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அதனை நிறைவேற்றி தந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்தீர்மானத்தில் இடம்பெற்றிருக்கும் பொது வாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை முதலான கருத்துகள் ஏற்கனவே ‘டெசோ’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் முன் வைக்கப்பட்டு அதற்காக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. என்றாலும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் மூலம் அவை இன்னும் அதிகமான வலிமையை பெற்றிருக்கின்றன.

##~~##
சிங்கள அரசின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவர இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் இந்திய அரசுக்கு மேலும் அழுத்தம் தருவனவாக அமைந்துள்ளன. தக்க நேரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளும் உலகறிய செய்யப்பட்டுள்ளன.
வரலாற்று சிறப்பு வாய்ந்த இத்தீர்மானத்தை தமிழக முதல்வர் தாமே நேரில் சென்று பிரதமரிடம் அளித்து விளக்க வேண்டும். அத்துடன் பிற மாநில முதல்வர்களையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து இத்தீர்மான நகலை அளித்து அவர்களது ஆதரவையும் திரட்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.