Published:Updated:

திமுக முடிவு: கருத்து கூறுவதில் காங்கிரஸ் நிதானம்!

Vikatan Correspondent

புதுடெல்லி, மார்ச்.5,2011

மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவது, சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி முறிவு உள்ளிட்ட திமுகவின் முடிவு குறித்து கருத்து கூறுவதில் நிதானம் காட்டி வருகிறார்கள், காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள். ##~~##
 
திமுகவின் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரியிடம் கேட்டதற்கு, " இந்தப் பிரச்னை தொடர்பாக தற்போதைக்குக் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. உரிய நேரத்தில் கட்சியின் கருத்து ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும்," என்றார்.

மிக நிதானமாக பேட்டியளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி,  "தற்போதைய சூழ்நிலையில் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தைக்கு இடையே இப்படி ஓர் நிகழ்வு. இந்தச் சூழலிலும் தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எல்லாம் முடிந்துவிடவில்லை," என்றார்.

இதனிடையே, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் உறவை புதுப்பிப்பதற்கு சாத்தியம் உள்ளது என்றும்,  காங்கிரஸ் தரப்பில் இருந்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். எனினும், கட்சித் தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ கருத்து இன்னும் வெளியிடப்படவில்லை.