Published:Updated:

லாரி உரிமையாளர்களுடன் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை

லாரி உரிமையாளர்களுடன் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை
லாரி உரிமையாளர்களுடன் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை

புதுடெல்லி: அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 3ஆம் கட்டமாக இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

டீசல் விலை உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

##~~##
இந்த நிலையில், மத்திய தரைவழி போக்குவரத்து துறை செயலருடன், அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியி்ல் முடிவடைந்தது.
இதையடுத்து திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. இதையடுத்து, டெல்லியில் நேற்று 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.
இந்த நிலையில், வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன் டெல்லியில் இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
தரைவழி போக்குவரத்து செயலருடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படுமா? அல்லது வேலை நிறுத்தம் தொடருமா? என்பது பேச்சுவார்த்தை முடிவுக்கு பிறகே தெரியவரும். க்