Published:Updated:

80 வருட அரசியல்... 50 வருட தி.மு.க தலைவர்... கருணாநிதி எனும் சகாப்தம்! #Timeline #MissUKarunanithi

80 வருட அரசியல்... 50 வருட தி.மு.க தலைவர்... கருணாநிதி எனும் சகாப்தம்! #Timeline #MissUKarunanithi

60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல்வாதிகளின் பட்டியலில் இவருக்கு எப்போதும் ஓர் இடம் இருந்திருக்கிறது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, கருணாநிதி என்ற பெயரை அவ்வளவு எளிதில் தவிர்த்துவிட முடியாது.

Published:Updated:

80 வருட அரசியல்... 50 வருட தி.மு.க தலைவர்... கருணாநிதி எனும் சகாப்தம்! #Timeline #MissUKarunanithi

60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல்வாதிகளின் பட்டியலில் இவருக்கு எப்போதும் ஓர் இடம் இருந்திருக்கிறது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, கருணாநிதி என்ற பெயரை அவ்வளவு எளிதில் தவிர்த்துவிட முடியாது.

80 வருட அரசியல்... 50 வருட தி.மு.க தலைவர்... கருணாநிதி எனும் சகாப்தம்! #Timeline #MissUKarunanithi

ந்திய அரசியலில் ஒரு சகாப்தம் கருணாநிதி. இவர், பிரதமராக இருந்ததுமில்லை; அதற்கு ஆசைப்பட்டதுமில்லை. இவரது கட்சியோ மாநிலக் கட்சிதான். ஆனால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல்வாதிகளின் பட்டியலில் இவருக்கு எப்போதும் ஓர் இடம் இருந்திருக்கிறது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, கருணாநிதி என்ற பெயரை அவ்வளவு எளிதில் தவிர்த்துவிட முடியாது.

கருணாநிதி மட்டும் அரசியலுக்கு வராமல் போயிருந்தால், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசனகர்த்தா இவர்தான். கிட்டத்தட்ட சுதந்திரத்துக்கு முன் கடவுள் பற்றியதாகவும், தூய தமிழிலும், எல்லா உணர்வுகளையும் பாடல்கள் வழியாகக் கடத்திவந்தது தமிழ் சினிமா. இந்த ட்ரெண்டை மாற்றி, ``மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. இப்போது உங்களுக்குத் தேவை, நல்ல சமூகக் கருத்துகள்தான்'' என்று சமூக அக்கறையுள்ள, சமூக பிரச்னைகளைப் பேசும் படங்கள் நிறைய வெளிவந்தன. இந்த மாற்றத்தில், சினிமா வசனம்தான் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.  கருணாநிதியின் `பராசக்தி',  `மந்திரிகுமாரி' பட வசனங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. காரணம், அதைச் சாமான்ய மக்களாலும் புரிந்துகொள்ள முடிந்ததது என்பதுதான். கருணாநிதியின் வசனங்கள் தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கின. அரசியலில் நொடித்துப்போனால், நான் சினிமாவையும், இலக்கியத்தையும் கையிலெடுத்துவிடுவேன் என்று கருணாநிதியே சொல்லியிருக்கிறார். அவரின் வசனங்கள்தான் அன்றைய அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆயுதமாக இருந்தது. தி.மு.க-வை பட்டிதொட்டி எங்கும் கொண்டுசென்ற பெருமையில் கருணாநிதியின் வசனங்களுக்கு நிச்சயம் பெரிய பங்குண்டு.

1957-ம் ஆண்டு, முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகக் குளித்தலை தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கே.ஏ.தர்மலிங்கத்தை 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். தனது முதல் சட்டசபை உரைக்கு கருணாநிதி ஒத்திகைபார்த்துவிட்டுப் போய் சட்டமன்றத்தில் பேசினாராம். செய்யும் விஷயத்தைத் தெளிவாகவும், திட்டமிட்டும் செய்ய வேண்டும் என்பதைத் தன் முதல் உரையிலிருந்து செய்யத் தொடங்கியவர் கருணாநிதி. ஆரம்பத்திலிருந்தே பேச்சில் வல்லவர்... கையெழுத்துப் பத்திரிகை நடத்தியது, கற்பனைத் திறன், சாதுர்யமாக எதிரியின் பேச்சுக்குப் பதிலளிப்பது, பேச்சில் உள்ள நக்கல், நையாண்டி எனக் கருணாநிதிக்கு எல்லாமே ப்ளஸ்.

1962-ல் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர், 1967-ல் பொதுப்பணித்துறை அமைச்சர். அண்ணா மறைவுக்குப் பின் 1969-ல் முதலமைச்சராகிறார் கருணாநிதி. அடுத்து, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதியை மக்கள் ஒருமுறைகூட தோற்க அனுமதித்ததில்லை. 

1972-ல், எம்.ஜி.ராமச்சந்திரன் கருணாநிதியிடம் அமைச்சர் பதவி கோரினார். அதைக் கட்சித் தலைமை மறுத்தது. அதனால் கட்சியிலிருந்து வெளியேறி, அ.தி.மு.க-வை ஆரம்பித்தார் எம்ஜிஆர். அவர்தான் கருணாநிதியின் நேரடி அரசியல் எதிரியாக உருவாகினார். கருணாநிதியின் பலம் அவரது பேச்சு, எதிர்த்து கேள்வி கேட்பவர்களை சாதுர்யமான பதிலால் அசர வைப்பதில் வல்லவர்

ஒருமுறை,“அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் காங்கிரஸின் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ``இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!” என்று.  தர்க்கம் செய்வது கருணாநிதிக்குக் கைவந்த கலை... தலைக்கு மேல் பிரச்னை வந்தாலும் சர்வ சாதாரணமாக எதிர்கொள்வார் கருணாநிதி. இதற்குக் காரணம் அவர் அதிகம் படிப்பதுதான். 

எதிரியைப் பாராட்டி நெகிழவைப்பதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான். அழகாகத் திட்டிப் பாராட்டுவார். ``தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில் இருந்தும் என்ன பயன்? நீங்கள்தான் ஏற்கெனவே தமிழர்களை மொட்டையடித்துவிட்டீர்களே!” - இந்தக் கவிதையைத் தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, ``தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவிவிட” என்றார். அதன்பின் பீட்டர் அல்போன்ஸுக்குப் பேச வாயே வரவில்லை.

1996 - 2001 வரையிலான ஆட்சி, தி.மு.க தலைவரின் ரிப்போர்ட் கார்டில் மிக முக்கியமான காலம். 1976 முதல் 1989 வரை 14 ஆண்டுகள் ராமர் வனவாசம் போனதுபோல கருணாநிதியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அப்போது மிகவும் சோர்ந்துபோனவர், 1996 - 2001ல் ஐந்தாண்டுக் காலம் முழுமையாகக் கிடைத்தபோது, ஒரு சிறந்த ஆட்சியைக் கொடுத்தார். அந்த ஐந்து வருடம்தான் கருணாநிதி முதல்வராக இருந்ததிலேயே சிறந்த காலம். ராமானுஜம் கமிஷன் அமைத்தார்; அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்து தனித்தனியாகக் கூட்டம் நடத்தினார். அலுவலகம் செல்வதுபோல சின்சியராக சட்டசபையில் இருந்து பணிகளைக் கவனித்தார். கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட்போல சட்டசபையை நடத்தினார் . 

கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் வராத அரசியல்வாதிகளே கிடையாது. 80-களில் இந்திரா காந்தி வந்தார், 90-களில் வாஜ்பாய்,        2000-த்தில் சோனியா, கடைசியாக மோடியும் வந்தார். இவருக்காகக் காத்திருக்காத டெல்லி வாலாக்களே இல்லை. தமிழ்நாட்டில் கருணாநிதிதான் தவிர்க்க முடியாத அரசியல்வாதி... இந்தியாவின் முதல் 10 அரசியல்வாதிகளில் கருணாநிதிக்கு எப்போதும் இடமுண்டு.

2016-ம் ஆண்டு முதல் கருணாநிதியின் உடல்நிலை சீராகவே இல்லை. 2016 செப்டம்பரில் நெஞ்சு சளி காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 1-ம் தேதி உடல்நிலை மோசமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, உடல்நிலை தேறி டிசம்பர் 7,2016ல் வீடு திரும்பினார். பின்னர் அடிக்கடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதி, முரசொலி 75-ம் ஆண்டு கண்காட்சியையும், ஒருமுறை அறிவாலயத்தையும் பார்வையிட்டார். கடந்த ஜூலை 18-ம் தேதி ட்ரக்கியோஸ்டமி  கருவி மாற்றத்துக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, ஐசியூ-வில் தொடர் கண்காணிப்பில் இருந்தார். ஜூலை 29-ம் தேதி உடல்நிலை மோசமடைந்துவிட்டது என டாக்டர்கள் கூறும்போதே இதயத்துடிப்பும் குறைந்தது. ஆனால் கருணாநிதியின் உடல்நிலை மீண்டு, மீண்டும் இதயத்துடிப்பு சீரானது. இதை மருத்துவர்களாலேயே நம்ப முடியவில்லை. இந்த தன்னம்பிக்கை கருணாநிதிக்கு எப்போதும் உண்டு. 

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் கண்கள் காவேரி மருத்துவமனையிலும், கோபாலபுரம் வீட்டிலும்தான் இருந்தன. கருணாநிதி எனும் மூத்த அரசியல்வாதி மறைந்துவிட்டார் என்ற செய்தி தமிழகத்தின் இதயத்துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்திப் பார்த்தது. சாதுர்யமாகப் பதில் சொல்வது, விமர்சனத்தை ஒரே வார்த்தையில் விளாசுவது என எல்லா நிகழ்விலும் கருணாநிதி வாழ்வார்.  ''என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'' எனும் கருணாநிதியின் குரலை தி.மு.க-வும், தமிழகமும் இழந்து தவிக்கிறது. கருணாநிதி விட்டுச் சென்றது 80 வருட அரசியல். இது இன்னமும் 100 வருடங்களுக்கு மேல் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். ஆதவனே போய் வா!