Published:Updated:

திருச்சியில் ராமஜெயம் சிலைத் திறப்பு! (படங்கள்)

திருச்சியில் ராமஜெயம் சிலைத் திறப்பு! (படங்கள்)
திருச்சியில் ராமஜெயம் சிலைத் திறப்பு! (படங்கள்)

திருச்சி: தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் சிலை திருச்சியில் இன்று திறக்கப்பட்டது.
 

திருச்சியில் ராமஜெயம் சிலைத் திறப்பு! (படங்கள்)

திருச்சியில் தி.மு.க.வில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான ராமஜெயம். இவர் கடந்த வருடம் மார்ச் 29ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

திருச்சியில் ராமஜெயம் சிலைத் திறப்பு! (படங்கள்)

ஓராண்டை கடந்துவிட்ட நிலையில் கொலைக்குக் காரணமானவர்களை காவல்துறையினர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்த வழக்கை இப்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ராமஜெயம் உருவாக்கிய கல்லூரியான கேர் பொறியியல் கல்லூரியில் அவரது முழு உருவ வெண்கல சிலையைத் திறந்துவைத்து, மாலை மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நேரு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும், ஏராளமான கட்சிக்காரர்களும் கலந்துகொண்டனர்.

செய்தி& படங்கள்: ப்ரீத்தி கார்த்திக்