Published:Updated:

``இது ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு நேர் எதிரானது!’’

``இது ஜெயலலிதாவின்  எண்ணங்களுக்கு நேர் எதிரானது!’’
பிரீமியம் ஸ்டோரி
``இது ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு நேர் எதிரானது!’’

ஆ.பழனியப்பன், சி.மீனாட்சி சுந்தரம் - படம்: பா.காளிமுத்து - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

``இது ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு நேர் எதிரானது!’’

ஆ.பழனியப்பன், சி.மீனாட்சி சுந்தரம் - படம்: பா.காளிமுத்து - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
``இது ஜெயலலிதாவின்  எண்ணங்களுக்கு நேர் எதிரானது!’’
பிரீமியம் ஸ்டோரி
``இது ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு நேர் எதிரானது!’’

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்திய மக்கள் வீறுகொண்டு எழுந்த காலத்தில், மதுரை மண்ணில் தொடங்கியது சங்கரய்யாவின் போராட்ட வாழ்க்கை. விடுதலைப் போராட்டக் காலத்தில் நான்கு ஆண்டுகள், விடுதலைக்குப் பின்னர் நான்கு ஆண்டுகள் என எட்டு ஆண்டு காலம் சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர்; மூன்று ஆண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்; இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் ஆளாய் பங்கேற்றவர்; மக்கள் பிரச்னைகளுக்காக நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தியவர் என்ற பெருமைகளுக்குரிய சங்கரய்யா, 96-வது வயதிலும் ஒரு மூத்த போராளியாய் இன்றைக்கும் போராட்டக் களத்தில் நிற்கிறார். அவரது கணீர் குரல், மக்கள் பிரச்னைகளுக்காக இன்னும் சுதி குன்றாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தெளிவான கூர்மையான பதில்கள் வந்துவிழுகின்றன. மூன்று முறை எம்.எல்.ஏ-வாகவும் இரண்டு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் இருந்த எளிமையான தலைவரை தி. நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம்.

``இது ஜெயலலிதாவின்  எண்ணங்களுக்கு நேர் எதிரானது!’’

“விடுதலைப் போராட்டம் தொடங்கி, பொது வாழ்க்கையில் நீண்டகால அனுபவம் கொண்டவர் நீங்கள். 95 வயதைக் கடந்த நிலையில், வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?”

“பல கஷ்டங்களுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினோம். அன்றைக்கு, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையாக இருந்தது என்றால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் தோழர்கள், ஃபார்வர்டு ப்ளாக்  எனப் பலருடைய நோக்கமும் சுதந்திரத்தை நோக்கியே இருந்தது. மிகப்பெரிய மக்கள் கூட்டத்துக்குக் காந்தி தலைமை தாங்கினார். இளைஞர் இயக்கத்துக்கு பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்றவர்கள் பெரும் உந்துசக்தியாக இருந்தனர். எல்லாருமே போராடினோம். அந்த ஒற்றுமைதான், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை இங்கிருந்து விரட்டியடித்தது. அதைப்பற்றி பேசவேண்டுமென்றால், பேசிக்கொண்டே இருக்கலாம். கடந்த காலத்தையே பார்த்துக்கொண்டு இருப்பதைவிட, இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் முக்கியம்.”

“அப்போது இருந்த ஒற்றுமை...”

(கேள்வியை முடிக்கும்முன்னே பேச ஆரம்பிக்கிறார்) ``தற்போது அந்த ஒற்றுமை, முக்கியத் தேவையாக இருக்கிறது. அதற்கு அச்சுறுத்தலாக நிறைய விஷயங்கள் வந்துவிட்டன. இந்தியா என்பது, பல மதங்களைச் சேர்ந்த மக்களுக்குச் சொந்தமான நாடு. எல்லோருமே இங்கு சமத்துவமாக நடத்தப்பட வேண்டியது அவசியம். இந்திய அரசியல் சாசனத்தின்படி, அனைத்து மக்களின் மதம் சார்ந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒற்றை மதத்தின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பன்முகக் கலாசாரம் கொண்ட இந்தியாவில், ஒற்றைக் கலாசாரத் திணிப்பை அனுமதிக்க முடியாது. இந்தியாவில், எல்லா மொழிகளும் சமமானவை. அதில், பாரபட்சமே இருக்கக்கூடாது. சிறுபான்மை மக்களின் மனதில், இரண்டாம் தரக் குடிமக்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதுபோல, அவர்களுக்கு எதிரான அடக்குமுறை நடக்கிறது.”

“பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் கொலைகளை ஏற்க முடியாது என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே?”


“எந்தக் குற்றமும் செய்யாத ஒரு மனிதனை, கூட்டமாகச் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிக் கொலைசெய்வது பயங்கரவாதம் இல்லையா? இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? எந்தத் தைரியத்தில் இத்தகைய பயங்கரவாதச் செயலில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்? ‘இந்தக் கொலைகளை ஏற்க முடியாது’ என்பதெல்லாம் ஒரு பேச்சா? நீங்கள் தானே ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறீர்கள். அப்படிப் பேசிவிட்டால் மட்டும் போதுமா? இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு இல்லையா? குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டாமா? மத்தியப்பிரதேசத்தில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த கொலையில், வழக்குக்கூட பதிவுசெய்யாததால், குற்றவாளிகள் தப்பிவிட்டனர். அதைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற அசாதாரண நிலையை மாற்றுவதற்கு மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டியது அவசியம்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``இது ஜெயலலிதாவின்  எண்ணங்களுக்கு நேர் எதிரானது!’’

“தமிழகத்தில் ஆளும்கட்சியான அ.தி.மு.க., பல அணிகளாகப் பிரிந்து கிடந்தாலும், பி.ஜே.பி. ஆதரவு என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்களே?”

“உண்மைதான். அ.தி.மு.க. அணிகள் பி.ஜே.பி-யை விழுந்து விழுந்து ஆதரிக்கின்றன. ஆனால், அ.தி.மு.க-வின் தலைமைப்பொறுப்பில் இருந்த செல்வி ஜெயலலிதாவின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும். 2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான், பி.ஜே.பி-யால் ஜெயிக்க முடிந்தது.

பி.ஜே.பி-க்கு எதிராக ஜெயலலிதா வகுத்த அரசியல் வியூகமே அதற்குக் காரணம். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரு எம்.எல்.ஏ சீட்டைக்கூட பி.ஜே.பி-யால் பிடிக்க முடியவில்லை. பி.ஜே.பி வெற்றிபெறக் கூடாது என்பதற்காக, ஜெயலலிதா வகுத்த வியூகம் அது. ஆனால், இன்றைக்கு அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள், பி.ஜே.பி-யின்  பிற்போக்குத்தனமான திட்டங்களுக்கு  ஓடி ஓடி ஆதரவு தருகிறார்கள். இது, ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு நேர் எதிரானது. இதைப்பற்றி அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.”

“புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் அதிரடியான செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அங்கே,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருக்கிறது. அந்த அரசைக் கேட்காமலேயே, பி.ஜே.பி-யைச் சேர்ந்த மூன்று பேரை எம்.எல்.ஏ-க்களாக ஆளுநர் நியமிக்கிறார். பாண்டிச்சேரியில் மட்டுமல்ல, பி.ஜே.பி. அல்லாத அரசுகள் உள்ள மாநிலங்களில், தன்னால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மூலம் அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளிலும் பி.ஜே.பி. ஈடுபடுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. அங்கேயும் ஆளுநரை வைத்துக் குழப்பம் செய்கிறார்கள். கோவாவில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றிபெற்றபோதிலும், காங்கிரஸை ஓரங்கட்டிவிட்டு, குறுக்கு வழியில் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கிறது. மணிப்பூரிலும் இதே நிலைமைதான். பி.ஜே.பி-யின் இந்த ஜனநாயக விரோதப்போக்கு ஆபத்தானது.”

 “விடுதலைப் போராட்டம், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் என ஏராளமான போராட்டங்களைச் சந்தித்த நீங்கள், தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அது வரவேற்கத்தக்கப் போராட்டம். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம் என்று கருதி பெருமளவில் மக்கள் திரண்டனர். அந்தப் போராட்டம் வெற்றிபெற்றது. அது மக்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி. ஜல்லிக்கட்டுக்காகத் தமிழக மக்கள் எப்படி ஒற்றுமையோடும் அக்கறையோடும் போராடினார்களோ, அதைப்போலவே சாதிக்கொடுமைகளுக்கு எதிராகவும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவாகவும் தமிழக மக்கள் அணிதிரள வேண்டும். கல்வி, தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு எனத் தமிழகத்தின் மற்ற முக்கியப் பிரச்னைகளிலும் அதே அக்கறையை, ஒற்றுமையைத் தமிழக மக்கள் காட்ட வேண்டும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism