Published:Updated:

காங்கிரசை தனிமைப்படுத்த முயற்சி : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

காங்கிரசை தனிமைப்படுத்த முயற்சி : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
காங்கிரசை தனிமைப்படுத்த முயற்சி : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
காங்கிரசை தனிமைப்படுத்த முயற்சி : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

சென்னை: "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்தும் முயற்சி நடக்கிறது" என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று அளித்த பேட்டி:

காங்கிரஸ் கட்சி குறித்து அடிப்படையற்ற, ஆதாரமற்ற குற்றாச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். மக்களிடம் இருந்து காங்கிரசை தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. கற்பனைகள், யூகங்கள், அடிப்படையில் வலம் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

காங்கிரசை பலவீனப்படுத்தும் வகையில் தீவிர பிரசாரங்கள் நடைபெறுகின்றன. உண்மையை கூறி, பொய் பிரசாரங்களை முறியடிப்போம். காங்கிரஸ் மீது பழிசுமத்தி ஒட்டப்படும் பிரசுரங்களை தமிழக மக்கள் நம்ப வேண்டாம். பொய் பிரசாரம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனக்கு எதிராக சதி செய்து வெளியிடப்பட்ட போஸ்டர் விவகாரத்தில் எந்த உண்மையும் இல்லை. அத்தகைய எண்ணமும் எங்களுக்கு கிடையாது. போஸ்டர் ஓட்டி நபர் மீது கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

(த.மா.கா மீண்டும் உதயம் என்று திண்டுக்கல் ஸ்ரீகாந்த், சத்திய மூர்த்தி பவனை சுற்றி போஸ்டர் ஓட்டியிருந்தார். இதனிடையே ஜி.கே.வாசன் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும்போதே ஸ்ரீகாந்த்தை கட்சியில் இருந்து நீக்கினார் மாநிலத் தலைவர் ஞானதேசிகன்)

இலங்கை தமிழர்கள் நலனுக்காக போராடும் மாணவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். மாணவர்கள் போராட்டத்தால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை யாரும் மறக்க முடியாது. ஆனால், தமிழகத்தில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தை சுயநலத்துக்காக சிலர் திசை திருப்புகின்றனர். தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் படிப்பின் மீது மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

##~~##
இலங்கை தமிழர்கள் வாழ்வு உயர, சம உரிமை கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுக்கும். அதற்கு மாணவர்கள் துணை நிற்க வேண்டும். ஐபிஎல் விளையாட்டுகளை அரசியலோடு தொடர்பு படுத்த வேண்டும். எழுப்பப்பட்ட பிரச்னைகளை தீர்க்க அவர்கள் எடுத்த முடிவை வரவேற்கிறேன்.
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இதுவரை கொண்டு வரப்பட்டுள்ள இரண்டு தீர்மானங்களை இந்தியா ஆதரித்துள்ளது.
அமெரிக்கா தீர்மானத்தை நீர்த்து போகச்செய்யும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டது என்பது தவறு.
இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாடு குறித்து எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் இலங்கை தமிழர் பிரச்னையில் இலங்கை அரசின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை என்றால் அந்த மாநாட்டை வேறு நாட்டில் நடத்த அனைத்து நாடுகளும் முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.