Published:Updated:

“ரஜினி, கமலை ஏன் எதிர்க்க வேண்டும்?” - திருப்பிக் கேட்கும் திருமாவளவன்

“ரஜினி, கமலை ஏன் எதிர்க்க வேண்டும்?” - திருப்பிக் கேட்கும் திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
“ரஜினி, கமலை ஏன் எதிர்க்க வேண்டும்?” - திருப்பிக் கேட்கும் திருமாவளவன்

“ரஜினி, கமலை ஏன் எதிர்க்க வேண்டும்?” - திருப்பிக் கேட்கும் திருமாவளவன்

“ரஜினி, கமலை ஏன் எதிர்க்க வேண்டும்?” - திருப்பிக் கேட்கும் திருமாவளவன்

“ரஜினி, கமலை ஏன் எதிர்க்க வேண்டும்?” - திருப்பிக் கேட்கும் திருமாவளவன்

Published:Updated:
“ரஜினி, கமலை ஏன் எதிர்க்க வேண்டும்?” - திருப்பிக் கேட்கும் திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
“ரஜினி, கமலை ஏன் எதிர்க்க வேண்டும்?” - திருப்பிக் கேட்கும் திருமாவளவன்

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க. அறிவித்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கலந்துகொள்கிறது... நடிகர்கள் ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் முதல் ஆளாக அரசியலுக்கு அழைத்ததும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். இப்படி அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் ஒவ்வொரு அசைவும் அரசியல் களத்தில் விவாதமாகி வருகிறது. இதுகுறித்து அவரிடமே சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ரஜினி, கமலை ஏன் எதிர்க்க வேண்டும்?” - திருப்பிக் கேட்கும் திருமாவளவன்

‘‘ ‘ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன்’ என முதல் ஆளாக அழைப்பு விடுவதைக் கூட்டணிக்குத் துண்டு போடும் முயற்சியாகப் பார்க்கலாமா?’’

‘‘ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவதை நாம் ஏன் எதிர்க்கவேண்டும்? அவர்களைக் கண்டு எங்களுக்குத் துளியும் அச்சமில்லை. ஆகவே, அவர்கள் தாராளமாக அரசியலுக்கு வரட்டும் என்று வரவேற்கிறோம். ஒருவர் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், அவர் அறப்பணிகள் செய்திருக்க வேண்டும், போராட்டங்கள் நடத்தியிருக்க வேண்டும், சிறைக்குச் சென்றிருக்க வேண்டும் என்கிற எந்த வரையறையும் கிடையாது. யாரும் எந்த வயதிலும் பொது வாழ்க்கையில் ஈடுபடலாம். இது அனைவருக்குமான உரிமை. ‘இவர்கள் இவ்வளவு காலம் எங்கே போனார்கள்?’ எனக் கேள்வி எழுப்புவதோ, ‘இவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது’ என மறுதலிப்பதோ கூடாது. இது ஜனநாயக மரபு அல்ல. நாகரிகமானதுமில்லை. ஜனநாயகத்தை மதிக்கும் வகையில் அவர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்.’’

‘‘நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க அறிவித்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும், கம்யூனிஸ்டுகளும் கலந்துகொண்டது தேர்தல் கூட்டணிக்கான அச்சாரம் என விவாதிக்கப்படுகிறதே?’’

‘‘இது தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமா? என்ற கேள்விக்கு விடை சொல்ல முடியாது. மக்கள் பிரச்னைகளுக்காக இணைந்து செயல்படுவது என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் இந்தக் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம், இது தேர்தலுக்காக என்ற அடிப்படையில் இல்லை. தி.மு.க எப்போதும் கூட்டணிக் கட்சிகளைத் தேர்ந்தெடுப்பது குறித்து எத்தகைய நடைமுறையைப் பின்பற்றும் என்பதைப் பலரும் அறிவார்கள். தி.மு.க-வின் முடிவைப் பொறுத்துத்தான் தேர்தல் கூட்டணி அமையும். வெளிப்படையாகச் சொல்லப்போனால், ‘இப்போதைய அரசியல் சூழலில் தி.மு.க தனித்தே வெற்றி பெற்றுவிட முடியும். கூட்டணி தேவையில்லை’ என்கிற புரிதலில் இருப்பதாகத் தெரிகிறது. அதனால் மெகா கூட்டணி அமைய வாய்ப்புகள் இல்லை. ஜெயலலிதா அம்மையார் இருந்தபோது, அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வை வீழ்த்துவதற்கு அப்படி ஒரு கூட்டணித் தேவை என விவாதம் எழுந்தது. ஆனால், அப்போது சாத்தியமாகவில்லை. இப்போது அப்படியான ஒரு மெகா கூட்டணிக்கான தேவை இப்போது இல்லை.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ரஜினி, கமலை ஏன் எதிர்க்க வேண்டும்?” - திருப்பிக் கேட்கும் திருமாவளவன்

‘‘தி.மு.க தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறும் எனப் பார்ப்பது பாராட்டுக்குரியதா... அல்லது வெற்று நம்பிக்கையா?’’

“இவை அனைத்தும் அரசியல் வட்டாரத்தில் உள்ள யூகங்கள்தான். ஜெயலலிதா இல்லாத நிலையில், அ.தி.மு.க அதே அளவுக்கான வலிமையோடு தேர்தலைச் சந்திக்கும் எனக் கூறமுடியாது. ‘அ.தி.மு.க-வைப் பலவீனப்படுத்திவிட வேண்டும்’ என பி.ஜே.பி செயல்படுகிறது. அதேநேரத்தில் ‘தி.மு.க-வும் ஆட்சியைக் கைப்பற்றி விடக்கூடாது’ என பி.ஜே.பி நினைக்கிறது. இந்த இரண்டு கட்சிகளையும் வரும் தேர்தலுக்குள் அப்புறப்படுத்திவிட வேண்டும் என அக்கட்சி கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதுடன், ‘கழகங்கள் இல்லா தமிழகம்... கவலை இல்லா தமிழகம்’ என்கிற முழக்கத்தோடு செயல்படுகிறது. அதை முன்வைத்தே, வரும் தேர்தலில் பி.ஜே.பி மெகா கூட்டணியை உருவாக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. அது சாதியவாத-மதவாதக் கூட்டணியாக இருக்கும் என்பதால், பெரும் தாக்கத்தை உருவாக்க வாய்ப்பில்லை.

கடந்தகாலத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் சமமான பலத்தில் இருந்துள்ளன என்பது விளங்கும். அக்கட்சிகள் வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், வாக்குகளின் சதவிகிதம் என்பதில் பெரிய இடைவெளி இல்லை. எனவே தி.மு.க-வைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.’’

‘‘மூன்றாவது அணி மீண்டும் சாத்தியம் என நினைக்கிறீர்களா?’’

‘‘தி.மு.க, அ.தி.முக அல்லாத ஒரு மாற்று சக்தி தேவை என்கிற விவாதம் தமிழக அரசியல் களத்தில் இருக்கவே செய்கிறது. அது அவசியம் எனக் கருதுகிறேன். இந்தக் கட்சிகளைத் தவிர்த்த கூட்டணியைத் திரட்டக்கூடிய வலிமை இன்னும் வாய்க்கவில்லை. ஏற்கெனவே நாங்கள், மக்கள் நலக்கூட்டணி மூலம் அந்த முயற்சியைச் செய்தோம். குறுகிய கால அவகாசத்தில் அப்படி ஒரு முடிவை எடுத்ததால், அது வெற்றி பெற முடியவில்லை என உணர்கிறேன்.’’

‘‘விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும், பி.ஜே.பி ஆட்சியைப் பிடிக்கும் எனத் தமிழக பி.ஜே.பி தலைவர்கள் சொல்லி வருகிறார்களே?’’

‘‘விரைவில் ஆட்சி மாற்றம் வரலாம். ஆனால், பி.ஜே.பி ஆட்சியைப் பிடிக்கும் என்பது பகல் கனவுதான்.’’

- சி.ய.ஆனந்தகுமார்
படம்: என்.ஜி.மணிகண்டன்