Published:Updated:

மோகன்லாலை கோபப்படுத்திய நடிகர்! சினிமா விருது நிகழ்ச்சியில் பரபரப்பு

மோகன்லாலை கோபப்படுத்திய நடிகர்! சினிமா விருது நிகழ்ச்சியில் பரபரப்பு
News
மோகன்லாலை கோபப்படுத்திய நடிகர்! சினிமா விருது நிகழ்ச்சியில் பரபரப்பு

மோகன்லாலை கோபப்படுத்திய நடிகர்! சினிமா விருது நிகழ்ச்சியில் பரபரப்பு

லையாள சினிமா விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் மோகன்லால் பேசிக்கொண்டிருக்கும்போது துப்பாக்கியால் சுடுவதுபோன்று ஆக்‌ஷன் காட்டிய நடிகரால் பரபரப்பு ஏற்பட்டது.

மலையாள சினிமா நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில் மலையாள நடிகர் சங்கமான `அம்மா' அமைப்பின் தலைவர் மோகன்லால் பேசுகையில், ``நடிகர்கள் நாம் அனைவரும் கேமராவுக்கு முன்பும் மற்ற சமயங்களிலும் ஒரு குடும்பம்போல பழகிவருகிறோம். அதனால்தான் நான் இங்கு வரும்போது விருந்தினர் என்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. சூட்டிங் இல்லாத ஒருநாள் நாம் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாக இருப்பது போன்ற உணர்வுதான் தோன்றுகிறது.

உங்கள் மத்தியில் நான் வருவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கடந்த 40 ஆண்டுகளாக நான் உங்களைப்போல ஒருவனாக இருந்து வருகிறேன். சினிமாவை விட்டும், உங்களை விட்டும் நான் ஒருபோதும் விலகிச் சென்றதில்லை. நான் மிகவும் நேசிக்கின்ற என் சக நடிகர்களைப் பெருமைப்படுத்துவதை காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் எனது அரங்கத்துக்கும் என்றாவது ஒருநாள் திரைச்சீலை விழும் வரை நான் உங்களுடன்தான் இருப்பேன். அதுவரை எனக்கு எப்போதும் உங்கள் மத்தியில் இடம் உண்டு என நம்புகிறேன். காலம் முடிவுசெய்தால் அரை நிமிடம் கூட நான் அரங்கத்தில் இருக்கமாட்டேன்" என்றார்.

மோகன்லால் பேசிக்கொண்டிருக்கும்போது நடிகர் அலன்சியர் மேடைக்கு கீழ் நின்று மோகன்லாலை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்று ஆக் ஷன் காட்டினார். மேலும், மோகன்லால் பேசுவது பொய் என்றும் ஆக் ஷன் காட்டினார். பின்னர் மோகன்லாலை நோக்கிச் சென்ற அவரை காவலர்கள் தடுத்து வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுகளை வழங்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், ``சமூகத்தில் தவறான பழக்க வழக்கங்களை திருத்தும் சினிமா தான் நமக்கு இப்போது தேவை. குறுகிய மதச்சார்பு எண்ணங்களுக்கு எதிரான, பரந்த எண்ணம்கொண்ட மனிதர்களை உருவாக்கும் சினிமாக்கள் உருவாக வேண்டும். மதச்சார்பை முறியடிக்க சினிமா மற்றும் இலக்கியத் துறையினருக்கு முக்கியப் பங்கு உண்டு. எந்தக் கலைஞனும் பயம் இல்லாமல் தனது இலக்கியப் பணியை நம் நாட்டில் மேற்கொள்ளலாம் என்பதை நிலைநாட்ட வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாறிவரும் காலத்துக்கு ஏற்ப நாமும் புதிய சிந்தனைகளை ஊக்குவிக்கும் சினிமாக்கள் உருவாக்குவது சிறப்பானதாக அமையும். இப்படிப்பட்ட கலைஞர்களைதான் சமூகம் எதிர்பார்க்கிறது. கலைஞர்களின் படைப்பு சுதந்திரத்தை காக்க விழிப்பு உணர்வுடன் கூடிய செயல்பாடுகளில் சமூகம் ஈடுபட வேண்டும். சினிமாத் துறையின் மேம்பட்ட குணத்துக்கான அங்கீகாரம்தான் இந்த ஆண்டுக்கான விருதுகள். திரைக்கு அப்பால் ஓரம்கட்டப்பட்ட திறமைசாலிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த விருது அமைந்துள்ளது" என்றார்.

பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீகுமாரன்தம்பிக்கு வாழ்நாள் சாதனைக்கான ஜே.சி.டேனியல் விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகை பார்வதி, சிறந்த நடிகர் இந்திரன்ஸ், சிறந்த இயக்குநராக லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.