Published:Updated:

மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் இல்லை: முலாயம் சிங் யாதவ்

மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் இல்லை: முலாயம் சிங் யாதவ்
மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் இல்லை: முலாயம் சிங் யாதவ்
மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் இல்லை: முலாயம் சிங் யாதவ்

புதுடெல்லி: மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தமது கட்சி வாபஸ் பெறாது என்றும், அதே சமயம் இந்த ஆண்டே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வந்தே தீரும் என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்/

பா.ஜனதாவோ அல்லது அதன் தோழமை கட்சிகளோ மத்திய அரசை கவிழ்ப்பதை நாங்கள் விரும்பவில்லை.இன்னும் 8 அல்லது 9 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கப்போகிற அரசை நாங்கள் ஏன் கவிழ்க்க வேண்டும். என்றும் முலாயம் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,"கூட்டணி கட்சி அமைச்சரை (திமுகவை சேர்ந்த ஆ.ராசா) சிறைக்கு அனுப்பிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் நம்பகத்தன்மையற்ற கட்சி; அதனால்தான் காங்கிரஸ் ஒரு ஏமாற்று கட்சி என்று கூறினேன்;

சிபிஐ, வருமானவரித் துறையினரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு ஆட்சியை நடத்துகிறது காங்கிரஸ்; என்னுடைய கணிப்புபடி 2013 ல் நாடாளுமன்ற தேர்தல் வந்தே தீரும்" என்று மேலும் கூறியுள்ளார்.

சமீப நாட்களாக காங்கிரஸ் மீது சமாஜ்வாதி கட்சி கடுமையான தாக்குதலை தொடுத்து வருவதால், நாடாளுமன்றத்திற்கு வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதவாக்கில் தேர்தல் வரலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில், நேற்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், சமாஜ்வாதி ஆதரவை வாபஸ் பெற்றாலும், தமது தலைமையிலான அரசு முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்யும் என்று கூறியிருந்தார்.

இது முலாயமுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

காங்கிரஸ் சமாதான முயற்சி

இதனிடையே சமாஜ்வாதி கட்சியை சமாதானப்படுத்தும்விதமாக, முலாயமின் மகனும், உத்தரப்பிரதேச முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுடன் லக்னோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒரே மேடையில் கலந்துகொண்டதோடு, அகிலேஷ் யாதவ் அரசுக்கு பாராட்டும் தெரிவித்தார்.