Published:Updated:

அ.தி.மு.க.வில் புதிய தமிழகம் எம்.எல்.ஏ?

அ.தி.மு.க.வில் புதிய தமிழகம் எம்.எல்.ஏ?
அ.தி.மு.க.வில் புதிய தமிழகம் எம்.எல்.ஏ?
அ.தி.மு.க.வில் புதிய தமிழகம் எம்.எல்.ஏ?

திண்டுக்கல்: தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து, புதிய தமிழகம் எம்.எல்.ஏ  ராமசாமி கட்சித் தாவல் வதந்தி றெக்கை விரித்திருக்கிற‌து.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனி தொகுதியின் எம்.எல்.ஏ. ராமசாமி. புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர். மதுரைக்காரராக இருந்தும் அ.தி.மு.க.வுக்கு இருந்த சாதக அலை இவரையும் எம்.எல்.ஏ ஆக்கியது. அதனால் தானோ என்னவோ இவர் தொடக்கத்திலிருந்தே அ.தி.மு.க.வுக்கு ஜே போட்டுக் கொண்டிருக்கிறார்.

சமீப காலமாக, ராமசாமிக்கு புதிய தமிழகம் கட்சியில் சரியான மரியாதை இல்லை என்று அவரின் ஆதரவாளர்கள் சொல்லி வருகிறார்கள். இதைத் தெரிந்து கொண்டு அ.தி.மு.க. சைடிலும் ராமசாமியை வளைக்க வலை விரித்துப் போட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

இந்தச் சூழலில் தான், ராமசாமி அ.தி.மு.க.வுக்கு அணி தாவிவிட்டதாக இன்று காலையிலிருந்து ஒரு செய்தி சுற்றி வர ஆரம்பித்திருக்கிறது. நிலக்கோட்டை தொகுதிக்குள்ளும் இந்த பரபரப்பு படர்ந்திருக்கிறது.

##~~##
டாக்டர் கிருஷ்ணசாமி அ.தி.மு.க. ஆதரவு நிலையை விலக்கிக் கொண்டு இனிமேல் தி.மு.க.வின் கரத்தை பற்றிக் கொள்ளலாம்  என சமீபத்தில் முடிவெடுத்ததாகவும், ராமசாமிக்கு இது பிடிக்காததால்தான் கட்சி மாறப்போகிறார் என்றும் காரணம் சொல்லப்படுகிறது.
ராமசாமியை தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டபோது, ''இது வெறும் புரளி. இப் போதைக்கு கட்சி மாறும் எண்ணம் எனக்கு கிடையாது. இது பற்றி நான் வேறு எதுவும் சொல்ல மாட்டேன். அவ்வளவு தான்'' என்று முடித்துக்கொண்டார்.
இதற்கு முன்பு அணி மாறியவர்கள் சொல்லிய‌ அதே டிரேட்மார்க் பதிலை ராமசாமியும் சொல்லி இருக்கிறார். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஜி.பிரபு.
படம்: வீ. சிவக்குமார்