Published:Updated:

பச்சைமால் கட்சி பதவி பறிப்பு ஏன்?: பின்னணி தகவல்கள்

பச்சைமால் கட்சி பதவி பறிப்பு ஏன்?: பின்னணி  தகவல்கள்
பச்சைமால் கட்சி பதவி பறிப்பு ஏன்?: பின்னணி தகவல்கள்
பச்சைமால் கட்சி பதவி பறிப்பு ஏன்?: பின்னணி  தகவல்கள்

சென்னை: வனத்துறை அமைச்சர் பச்சைமாலிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி அ.தி.மு.க எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான பச்சைமால், தற்போது தமிழக அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக உள்ளார். இவரிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவியை பறித்ததோடு மட்டுமல்லாமல் குமரி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளை கூண்டோடு மாற்றி ஜெயலலிதா இன்று  உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் புதிய மாவட்ட செயலாளராகவும், சிவ.குற்றாலம் பொருளாளராகவும் துணைச் செயலாளராக ஆர்.ஜெ.கே.திலக், பொருளாளராக நாஞ்சில் டோம்னிக் உள்பட புதிய நிர்வாகிகள் பட்டியலையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

##~~##
பட்ஜெட் விளக்க கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குமரி மாவட்ட அ.தி.மு.க.வில் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.
பின்னணி என்ன? அமைச்சர் பச்சைமாலிடம் உதவியாளராக இருந்த சகாயத்துக்கும், வனத்துறை ஊழியர் ஆறுமுகத்துக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில் 2011ம் ஆண்டு ஆறுமுகம் அவரது மனைவி ஜெகதீஸ்வரி ஆகியோர் மர்மான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் அமைச்சரின் உதவியாளர் சகாயம், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஜெகதீஸ்வரியின் தாயார் குமாரி உள்பட 4 பேர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது சூடு பிடித்துள்ள நிலையில் அமைச்சரிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று குமரி மாவட்ட அ.தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்.
எஸ்.முத்துகிருஷ்ணன்