Published:Updated:

`திருமுருகன் காந்தி கைது அரசப் பயங்கரவாதத்தின் உச்சகட்டம்'- கொந்தளிக்கும் சீமான்

`திருமுருகன் காந்தி கைது அரசப் பயங்கரவாதத்தின் உச்சகட்டம்'- கொந்தளிக்கும் சீமான்
News
`திருமுருகன் காந்தி கைது அரசப் பயங்கரவாதத்தின் உச்சகட்டம்'- கொந்தளிக்கும் சீமான்

`திருமுருகன் காந்தி கைது அரசப் பயங்கரவாதத்தின் உச்சகட்டம்'- கொந்தளிக்கும் சீமான்

பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

`திருமுருகன் காந்தி கைது அரசப் பயங்கரவாதத்தின் உச்சகட்டம்'- கொந்தளிக்கும் சீமான்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஐ.நா.வினுடைய மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் பங்கேற்றுவிட்டு ஜெனிவாவிலிருந்து நாடு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியைப் பெங்களூரு விமான நிலையத்தில் தேசத் துரோக வழக்கின் கீழ் கைதுசெய்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அநீதிக்கெதிராகக் குரலெழுப்பும் சமூகச் செயற்பாட்டாளர்களையும், அரசியல் ஆளுமைகளையும் கொடுஞ்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்து வரும் அ.தி.மு.க அரசின் இச்செயலானது வன்மையானக் கண்டனத்துக்குரியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மக்களாட்சித் தத்துவத்தையே முற்றுமுழுதாகக் குலைக்கிற இதுபோன்ற ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் யாவும் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்புகிறது. வளர்ச்சி என்கிற பெயரில் நாசகாரத் திட்டங்களை மண்ணில் புகுத்துவதும், அதற்கெதிராக கருத்தியல் பரப்புரையையும், களப்பணியும் செய்யும் செயற்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், தேசத் துரோக வழக்கு என அடக்குமுறைகளை ஏவிவிடுவதுமான நடவடிக்கைகள் யாவும் அரசப்பயங்கரவாதத்தின் உச்சகட்டமாகும். திருமுருகன் காந்தி மீது தொடுக்கப்பட்டிருக்கும் தேசத் துரோக வழக்கு என்பது ஜனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட எவராலும் ஏற்க முடியாத கொடுஞ்செயலாகும். ஆகவே, அவர் மீது பொய்யாகத் தொடுக்கப்பட்டுள்ள இவ்வழக்கினைத் திரும்பப் பெற்று திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.