Published:Updated:

மேலூரிலிருந்து கிளம்பும் தினகரன்!

மேலூரிலிருந்து கிளம்பும் தினகரன்!
பிரீமியம் ஸ்டோரி
News
மேலூரிலிருந்து கிளம்பும் தினகரன்!

மேலூரிலிருந்து கிளம்பும் தினகரன்!

ருபக்கம் தமிழக அரசு சார்பில் மாவட்ட வாரியாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இன்னொரு பக்கம் தினகரன், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்த கிளம்பிவிட்டார். 

மேலூரிலிருந்து கிளம்பும் தினகரன்!

மதுரை மாவட்டம் மேலூரில், வரும் 14-ம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்திலிருந்து இந்த அரசியல் பயணம் தொடங்குகிறது. மேலூர் பொதுக்கூட்ட ஏற்பாடுகளைப் பார்த்து மதுரை மாவட்ட அமைச்சர்களான செல்லூர் ராஜுவும், ஆர்.பி.உதயகுமாரும் பதைபதைத்துப் போயிருக்கிறார்கள். மேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும், அமைப்புச் செயலாளராக தினகரனால் அறிவிக்கப்பட்டுள்ளவருமான மேலூர் ஆர்.சாமிதான் ஏற்பாடுகளைச் செய்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மேலூரிலிருந்து கிளம்பும் தினகரன்!

இந்த நிலையில், மேலூர் சாமியை அமைச்சர் உதயகுமார் சந்திக்கச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி நம்மிடம் பேசிய தினகரன் ஆதரவாளர்கள், “தினகரன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அதிகப்படியாகக் கூட்டம் சேர்ந்துவிட்டால், அமைச்சரான தனக்குச் சிக்கல் வந்துவிடும் என்று உதயகுமார் நினைக்கிறார். அதனால், ‘மேலூர் பொதுக்கூட்டத்துக்குப் போகக் கூடாது’ என்று கட்சி நிர்வாகிகளை மிரட்டியுள்ளார். இது தெரிந்தவுடன், அவரை போனில் தொடர்புகொண்டு கடுமையாகப் பேசியிருக்கிறார் சாமி. அதனால் உதயகுமார், சாமியைச் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். மூன்று மணி நேரம் சாமியின் அலுவலகத்தில் உதயகுமார் இருந்துள்ளார். தான் பேசியதற்கு வருத்தமும் தெரிவித்தார். அமைச்சர் உதயகுமார், ஒரு முன்னாள் எம்.எல்.ஏ-வைத் தேடிச்சென்றிருப்பதன் மூலம் தினகரன் செல்வாக்கு என்னவென்பதைக் கட்சியினர் புரிந்துகொண்டார்கள்” என்றனர்.

இதுகுறித்து உதயகுமாரிடம் கேட்டபோது, ‘‘சாமியின் உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன்’’ என்றார்.

சாமியிடம் பேசினோம். “தினகரன் பங்கேற்கும் கூட்டம் சிறப்பாக நடைபெறும். அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்வார்கள். அதற்கான வேலைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. உதயகுமாரும் நானும் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். அந்த அடிப்படையில்தான் அவர் என்னைப் பார்க்க வந்தார். வேறு ஒன்றுமில்லை” என்றார்.

மேலூரிலிருந்து கிளம்பும் தினகரன்!

மேலூரைத் தொடர்ந்து வடசென்னை, தேனி, கரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தர்மபுரி, திருச்சி, சிவகங்கை எனப் பல இடங்களுக்கு விசிட் அடிக்க தினகரன் திட்டமிட்டிருக்கிறார்.

தற்போதைய சூழலில் இது சாத்தியமா எனத் தெரியவில்லை.

- செ.சல்மான், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்