Published:Updated:

படியேறி கொடியேற்றுவாரா எடப்பாடி?

படியேறி கொடியேற்றுவாரா எடப்பாடி?
பிரீமியம் ஸ்டோரி
News
படியேறி கொடியேற்றுவாரா எடப்பாடி?

படியேறி கொடியேற்றுவாரா எடப்பாடி?

கஸ்ட் 15-ம் தேதியில், தலைமைச் செயலகத்தின் புனித ஜார்ஜ் கோட்டை  கொத்தளத்துக்கு 27 படிகளை ஏறிச் சென்று, கொடி மேடை இருக்கும் கொத்தளத்தில் கொடியேற்றுவது முதல்வர்களின் வழக்கம். சுதந்திர தினத்தில் கொடியேற்றும் உரிமையை முதல்வர்களுக்காகக் கருணாநிதி பெற்ற காலத்திலிருந்து இதுதான் வழக்கம். ஆனால், கடந்த 2004-ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாததால் ஜெயலலிதா இந்தக் கொத்தளத்தின் மீது ஏறாமல், கடற்கரை ரோட்டின் தரையில் இருந்தபடியே ஏற்றினார். இதற்காக, கொடிக்கயிறு வளைக்கப்பட்டது. இதற்கு விமர்சனங்கள் எழுந்தன. எனவே, அடுத்த ஆண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து, விமானத்தில் உணவுப்பொருள்களை ஏற்றும் வாகனத்தைக் கொண்டு வந்தார்கள். இந்த வாகனம் ஒரு லிஃப்ட் போல இயங்கி, முதல்வரைக் கோட்டைக் கொத்தளத்தின் மேல்தளத்தின் அருகே கொண்டு போய் நிறுத்திவிடும். படியேற வேண்டிய அவசியமில்லை. கொத்தளத்தின் பின்புறம் இது நிகழ்வதால், பார்வையாளர்களுக்குத் தெரியாது.   

படியேறி கொடியேற்றுவாரா எடப்பாடி?

ஜெயலலிதாவுக்குப் பிறகு 2006-ல் முதல்வரான கருணாநிதியும் படியேற முடியாத நிலையில் இருந்ததால் இதையே தொடர்ந்தார். 2011-லிருந்து ஜெயலலிதாவும் இதையே பின்பற்றினார்.

13 ஆண்டுகளாக தமிழக முதல்வர்கள் படியேறி கொடியேற்றியதில்லை. இந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி படியேறி கொடியேற்றுவாரா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
படியேறி கொடியேற்றுவாரா எடப்பாடி?

‘‘முதல்வர் படியேறுவதை விரும்புகிறார். கோட்டையில் முதல் மாடியில் இருக்கும் அவரின் அலுவலகத்துக்கே பல நாள்கள் லிஃப்ட்டைப் பயன்படுத்தாமல் படிகளில் ஏறிச் செல்கிறார். அதனால், இந்த ஆண்டு சுதந்திர தின ஒத்திகையில், முதல்வர் படியேறிச் சென்று கொடியேற்றுவது போலவே ஒத்திகை செய்து பார்த்தோம்’’ என்கிறார் பொதுத்துறை அதிகாரி ஒருவர்.

படியேறி கொடியேற்றுவாரா எடப்பாடி?

- சு.குமரேசன்