Published:Updated:

நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி அமைப்போம்: ராமதாஸ்

நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி அமைப்போம்: ராமதாஸ்
நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி அமைப்போம்: ராமதாஸ்
நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி அமைப்போம்: ராமதாஸ்

"நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி அமைப்போம்" என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு 10 இடங்களை பிடிப்போம் என்றும் ராமதாஸ் கூறினார்.

17 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறிய ராமதாஸ், அப்பா, அம்மா பார்த்து நடத்தும் திருமணத்தை ஏற்கவேண்டும் என்றார்.

##~~##
காதலுக்கும், கலப்பு திருமணத்திற்கும் நாங்கள் எதிரி அல்ல என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி அமைப்போம் என்று கூறிய ராமதாஸ், தி.மு.க., அ.தி.மு.க. கொள்கை இல்லாத கட்சிகள் என்றும் பா.ம.க. தான் கொள்கை உள்ள கட்சி என்றும் தெரிவித்தார்.