Published:Updated:

அதிமுகவில் சேர திட்டமா?: புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.: ராமசாமி மறுப்பு!

சென்னை: தாம் அதிமுகவில் சேரப்போவதாக வெளியான செய்தியை புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. ராமசாமி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. ஆ.ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,',நான் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நிலக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட்டு நிலக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந் தெடுக்கப்பட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வருகின்றேன்.

##~~##
இந்த நிலையில் நான் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக கற்பனையான செய்தி வெளிவந்துள்ளது. நான் புதிய தமிழகம் கட்சியில் சாதாரணத் தொண்டனாக பணியாற்றி கொண்டிருந்தபோது என்னை சட்டமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி. நான் புதிய தமிழகம் கட்சிக்கும் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் என்றும் விசுவாசமாக இருப்பேன். நான் கனவில் கூட புதிய தமிழகம் கட்சியை விட்டு விலகுவதை நினைத்துப் பார்த்ததில்லை.
புதிய தமிழகம் கட்சிக்கும், அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமிக்கும் மற்றும் நிலக்கோட்டை மக்களுக்கும் எனது பணி தொடரும்" என்று கூறியுள்ளார். .