Published:Updated:

ஒண்ணு பெருசா... நாலு பெருசா!

ஒண்ணு பெருசா... நாலு பெருசா!
பிரீமியம் ஸ்டோரி
ஒண்ணு பெருசா... நாலு பெருசா!

அரசு விழாவில் அமைச்சரை ஓரங்கட்டிய முதல்வர்

ஒண்ணு பெருசா... நாலு பெருசா!

அரசு விழாவில் அமைச்சரை ஓரங்கட்டிய முதல்வர்

Published:Updated:
ஒண்ணு பெருசா... நாலு பெருசா!
பிரீமியம் ஸ்டோரி
ஒண்ணு பெருசா... நாலு பெருசா!

ளுங்கட்சியின் இப்போதைய நிலைமையில், ஒற்றை அமைச்சரைவிட நான்கு எம்.எல்.ஏ-க்களுக்கு மரியாதை அதிகம். இந்த அடிப்படையில், கடலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்   எம்.சி.சம்பத் ஓரங்கட்டப்பட்டதும், அவருக்கு எதிராகச் செயல்படும் நான்கு எம்.எல்.ஏ-க்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி குளிர்வித்ததும், மாவட்டத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒண்ணு பெருசா... நாலு பெருசா!

இந்த விழாவுக்குப் பணத்தை வாரி இறைத்துப் பெரும் கூட்டத்தைக் கூட்டினர். எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் இணையாக எடப்பாடி பழனிசாமிக்கு வைக்கப்பட்டிருந்தன பிரமாண்ட கட்-அவுட்கள்.

கடலூர் மாவட்ட ஆளும் எம்.பி-க்களும்     எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர் எம்.சி.சம்பத்தோடு உரசலில் இருக்கிறார்கள். விழாவுக்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அ.தி.மு.க எம்.பி-க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் சத்யா, முருகுமாறன், பாண்டியன், கலைச்செல்வன் ஆகியோர் ஓர் அணியாகச் சென்று முதல்வரை வரவேற்றனர். இந்த அணிக்குத் தலைமை தாங்குவது அருண்மொழிதேவன். எம்.சி.சம்பத் தரப்பினர் தனி அணியாகச் சென்று வரவேற்றனர். வரவேற்பு முடிந்து காரில் ஏறப்போன முதல்வர், “அருண்மொழிதேவன் எங்கே... கூப்பிடுங்க” என்றார். அப்போதே எம்.சி.சம்பத் முகம் சிவந்துவிட்டது. அருண்மொழிதேவன், எம்.சி.சம்பத் ஆகிய இருவரையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு சுற்றுலா மாளிகைக்குச் சென்றார் முதல்வர். அங்கு முதல்வரைச் சந்தித்த எம்.பி-க்களும் எம்.எல்.ஏ-க்களும், “நீங்கள் வந்ததால்தான் நாங்கள் வந்தோம்” என்றனர். அதற்கு முதல்வர், “கொஞ்சம் பொறுமையாக இருங்கள். யாருக்கு என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும்” எனக் கூறியுள்ளார்.

விழா தொடங்கியது. மேடையில் முருகுமாறனையும், அருண்மொழிதேவனையும் அடிக்கடி கூப்பிட்டு எதையோ கேட்டுக்கொண்டே இருந்தார் முதல்வர். அதை அமைச்சர் சம்பத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர் அடிக்கடி தண்ணீர் குடித்துக்கொண்டே இருந்தார். இவ்வளவு பிரமாண்ட ஏற்பாடுகளை சம்பத் செய்திருந்தும், அவருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. அவருக்கு எதிரான இந்த நான்கு எம்.எல்.ஏ-க்களின் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர். தடுப்பணைகள்... கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்... காட்டுமன்னார்கோவிலில் கல்லூரி... அந்தக் கல்லூரிக்கு அருண்மொழிதேவன் வேண்டுகோள்படி எம்.ஜி.ஆர் பெயர் என அமைச்சர் சம்பத் தவிர, மற்ற அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் முதல்வர்.

அப்போது, ‘சம்பத்தின் கடலூர் தொகுதிக்கு ஒண்ணுமில்லையா?’ என்று சிலர் கூச்சலிட்டது எடப்பாடிக் காதில் விழவில்லை போல!

- க.பூபாலன்
படம்: அ.குரூஸ்தனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!