Published:Updated:

கிறிஸ்தவர்களுக்கு ஜெயலலிதா ஈஸ்டர் வாழ்த்து

கிறிஸ்தவர்களுக்கு ஜெயலலிதா  ஈஸ்டர் வாழ்த்து
கிறிஸ்தவர்களுக்கு ஜெயலலிதா ஈஸ்டர் வாழ்த்து
கிறிஸ்தவர்களுக்கு ஜெயலலிதா  ஈஸ்டர் வாழ்த்து

சென்னை: வேறுபாடுகளைக் கடந்து சமத்துவ மனப்பான்மையோடு ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்திட வேண்டுமென்று கிறிஸ்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தியாகச் சுடராம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

##~~##
பகைவரிடத்தும் அன்பு காட்டும் இரட்சகரான இயேசுபிரான், கொடூரமான முறையில் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் திருநாளாக உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் கிறிஸ்துவர்கள் தேவாலயங்களுக்குச் சென்று அன்பின் திருவுருவான இயேசுபிரானின் கருணைகளை நினைவுகூர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்வார்கள்.
இந்த நன்னாளில் உலக உயிர்கள் அனைத்தையும் அன்பால் கவர்ந்த இயேசுபிரான் போதித்த தியாகம், பாவ மன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை போன்ற உயரிய குணங்களை அனைவரும் பின்பற்றி வேறுபாடுகளைக் கடந்து சமத்துவ மனப்பான்மையோடு ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.