Published:Updated:

காமன்வெல்த் மாநாடு குறித்து பிரதமர் முடிவெடுப்பார்: நாராயணசாமி

காமன்வெல்த் மாநாடு குறித்து பிரதமர் முடிவெடுப்பார்: நாராயணசாமி
காமன்வெல்த் மாநாடு குறித்து பிரதமர் முடிவெடுப்பார்: நாராயணசாமி
காமன்வெல்த் மாநாடு குறித்து பிரதமர் முடிவெடுப்பார்: நாராயணசாமி

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து வெளியுறவுத் துறையுடன் ஆலோசித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பார் என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றார்.

##~~##
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வெளியுறவுத் துறையுடன் ஆலோசித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பார் என்று கூறிய நாராயணசாமி, காமன்வெல்த் மாநாடு நவம்பர் மாதம் நடைபெற உள்ளதால், முடிவெடுப்பதற்கு கால அவகாசம் உள்ளது என்றார்.
மத்திய அரசு தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யும் என்றும் நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்பில்லை என்னறும் நாராயணசாமி கூறினார்.
மத்திய அரசுக்கு சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு தொடரும்  என முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளதால், மத்திய அரசு சிறுபான்மை அரசு அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.