Published:Updated:

"நான் நடிகனாகனும்னு மக்கள் எதிர்பாக்குறாங்க?” - சினிமா சீக்ரெட் சொல்கிறார் அன்புமணி

"நான் நடிகனாகனும்னு மக்கள் எதிர்பாக்குறாங்க?” - சினிமா சீக்ரெட் சொல்கிறார் அன்புமணி
பிரீமியம் ஸ்டோரி
"நான் நடிகனாகனும்னு மக்கள் எதிர்பாக்குறாங்க?” - சினிமா சீக்ரெட் சொல்கிறார் அன்புமணி

நா.சிபிச்சக்கரவர்த்தி - படம்: ஆ.முத்துக்குமார்

"நான் நடிகனாகனும்னு மக்கள் எதிர்பாக்குறாங்க?” - சினிமா சீக்ரெட் சொல்கிறார் அன்புமணி

நா.சிபிச்சக்கரவர்த்தி - படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
"நான் நடிகனாகனும்னு மக்கள் எதிர்பாக்குறாங்க?” - சினிமா சீக்ரெட் சொல்கிறார் அன்புமணி
பிரீமியம் ஸ்டோரி
"நான் நடிகனாகனும்னு மக்கள் எதிர்பாக்குறாங்க?” - சினிமா சீக்ரெட் சொல்கிறார் அன்புமணி

‘`நீங்க வேணும்னா பாருங்க. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் பண்ற கூத்தை எல்லாம் மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. சீக்கிரமே இங்கே தேர்தல் வரும்...’’ வழக்கம்போல அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முதல் ஆளாகத் தயாராகிக்கொண்டிருக்கிறார் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். ஓவியா வோட்டு முதல் மாற்றம் முன்னேற்றம்  எனக் கேட்க நிறைய கேள்விகளோடு  அன்புமணியைச் சந்தித்தேன்.

"நான் நடிகனாகனும்னு மக்கள் எதிர்பாக்குறாங்க?” - சினிமா சீக்ரெட் சொல்கிறார் அன்புமணி

``தமிழ்நாட்டோட அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கு?”

“தமிழ்நாடு இப்போ மோசமான சூழ்நிலையில இருக்கு. ஆங்கிலத்தில் சொல்ற மாதிரி `Bad to worse’ நிலைதான் தமிழக அரசியலுக்கும். எடப்பாடி என்னவோ அவரைத்தான் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த மாதிரியே நடந்துக்கிறார். ஜெயலலிதாவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு இருந்தது சரி; இவருக்குப் பார்த்தா, ஏர்போர்ட்ல இருந்து வீடு வரைக்கும் பத்தடிக்கு ஒரு போலீஸ் நிற்கிறாங்க. ஜெயலலிதா அளவுக்கு இவருக்கும் போஸ்டர்ஸ். இதெல்லாம் பந்தானு நினைச்சுக்கிட்டு இருக்கார். முதலமைச்சர் அப்படிங்கிறவர் மக்களோட வேலைக்காரர். அதைப் புரிஞ்சுக்காம இவர் செயல்படுறார். எவ்ளோ பெரிய பதவிக்கு உயர்ந்தாலும் அடக்கம் இருக்கணும். இது இவரோட திறமைக்குக் கிடைச்ச பதவியில்லை. நம்பர் ஒன் கலெக்டிங் ஏஜென்ட் அப்படிங்கிறதாலதான் இந்தப் பதவி.”

“யாரோட கலெக்டிங் ஏஜென்ட்னு சொல்றீங்க?”

``ஜெயலலிதாவுக்குதான். அவர் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாய் இருந்ததைப் பார்த்து சசிகலா பதவி கொடுத்தாங்க. ஆனால், காலம்காலமா முதுகுல குத்துறவங்கதானே அ.தி.மு.க.காரங்க. முதலில் ஓ.பி.எஸ்., சசிகலா முதுகில் குத்தினார். அடுத்து எடப்பாடி சரியான நேரம் பார்த்து சசிகலா முதுகில் குத்திட்டார். இன்றைய தமிழக அரசியல் அருவருப்பா இருக்கு. தமிழ்நாட்டில் இருந்து வர்றவங்களைப் பார்த்தாலே டெல்லியில சிரிக்கிறாங்க. `தமிழ்நாடே சீரியலா மாறிடுச்சு போல’னு கிண்டல் பண்றாங்க.”

“இந்த ஆட்சி நீடிக்காது என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?’’

``நிச்சயமாக நீடிக்கக் கூடாது. ஆனால், எப்போது கலையும்கிறதை மத்தியில் இருக்கிற பா.ஜ.க-தான் முடிவு செய்யணும்.  ஜெயலலிதா இறந்தபோது அது குறித்து விசாரணை நடத்தணும்னு சொன்ன முதல் கட்சி நாங்கள்தான். அதுக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டதும் நாங்கதான். அவங்க இறந்து ஒன்பது மாசத்துக்கு மேல ஆச்சு. ஈ.பி.எஸ் வந்து ஆறு மாசம் ஆச்சு. இத்தனைநாளா இல்லாமல் இப்போதுதான் விசாரணை தேவைன்னே பேசுறாங்க. இது ஒரு கண் துடைப்புதான்.”

``எதிர்க்கட்சிகள் மட்டும்தான் இந்த ஆட்சிக் கலைய வேண்டும் என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. மக்களிடம் அப்படி ஒரு கோபத்தையும், கொந்தளிப்பையும் பார்க்க முடியவில்லையே?”

“மக்கள்கிட்ட கோபம் இருக்கு. 50 ஆண்டு காலமாக வாய்ப்பு கொடுத்தாச்சு, இந்த ரெண்டு கட்சிகளுமே வேண்டாம் அப்படிங்கிற முடிவுக்கு மக்கள் வந்துட்டாங்க. புதுசா யாராவது வந்தால், நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க. அந்த வெற்றிடத்தை  நிரப்பத்தான் நாங்க நினைக்கறோம். படிச்ச இளைஞர்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் இருக்கு. கிராமப்புற மக்கள் மத்தியிலும் இந்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தியே ஆகணும். இப்போது கிராமப்புற மக்களும் அரசியல்களத்தை உற்று நோக்கிட்டுதான் இருக்காங்க.”

“ ‘மக்கள், எங்கள்மீது நம்பிக்கை வைத்துவிட்டார்கள். எங்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது’ என ஸ்டாலின் சொல்லி வருகிறாரே?”

“இருக்கு...இருக்கு...நான் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன். (சிரிக்கிறார்) அதெல்லாம் கிடையாது. மக்கள் இருவருமே வேண்டாம்கிற நிலையில்தான் இருக்காங்க. தி.மு.க உண்மையில் பயத்துல இருக்காங்க. மக்கள் தி. மு. க. மேல நம்பிக்கையை இழந்துட்டாங்க. ஆனால், எங்கள் மேல் மக்களுக்கு நம்பிக்கை இருக்கு. நாங்க ஆக்கப்பூர்வ அரசியல் பண்ணிட்டு இருக்கோம். அது நிறைய பேருக்குப் பிடிக்குது. தி.மு.க-வுக்கு இப்போ 68 வயசாகுது. போன தேர்தலில் ஜெயலலிதா மேல ஊழல் குற்றச்சாட்டு, மோசமான நிர்வாகம்னு அவ்வளவு இருந்தும் மக்கள் ஏன் தி.மு.க-விற்கு ஓட்டுப் போடலை? அவங்கமேல் நம்பிக்கை இல்லை. தி.மு.க. செயல் தலைவர், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடணும். மத்தவங்க சொல்றதை மட்டும் வைத்து அரசியல் செய்யக்கூடாது. அப்படித்தான் நாங்க முயற்சி எடுத்துட்டு இருக்கோம். ஸ்டாலினையும் அதற்காகத்தான் நான் விவாதத்துக்கு கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன்.”

“கடந்த தேர்தலிலும் `இளைஞர்கள் ஆதரவு இருக்கு, ‘மாற்றம் முன்னேற்றம்’னு சொன்னீங்க. ஆனால், மக்கள் உங்கள் கட்சிக்கு ஆதரவு தரவில்லையே?”


“மக்கள் உடனடியா எதையும் ஏத்துக்க மாட்டாங்க. அவங்களா பட்டு வரணும். வந்துட்டு இருக்காங்கன்னு தான் நினைக்கிறேன். விவசாயிகள் தற்கொலை, லஞ்சம், ஊழல்னு எத்தனையோ பிரச்னைகள். பத்து எம்.எல்.ஏ-க்கள் இடம் மாறினாக்கூட ஆட்சி கவிழ்ந்துடும். அதை வெச்சு அமைச்சர்கள் மிரட்டிட்டு இருக்காங்க. எடப்பாடியால் நடவடிக்கை எடுக்க முடியலை. விஜயபாஸ்கர் 40 கோடி வாங்கியிருக்கிறதா சீஃப் செகரட்டரிக்கு லெட்டர் எழுதறதாச் சொல்றாங்க. அந்த லெட்டர் காணாமல் போய்டுச்சுன்னும் சொல்றாங்க. எங்கேயாவது இந்தக் கூத்து  நடக்குமா?  பா.ஜ.க. இதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கு. அமைச்சரோட சொந்தக்காரங்க வீட்டில் எல்லாம் ரெய்டு நடந்துருக்கு. ஆனால், இன்னும் அவர் அமைச்சராத்தான் இருக்காரு. மக்கள் கையாலாகாதத்தனத்தோடு பார்த்துகிட்டு சும்மாதான் இருக்காங்க. ”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"நான் நடிகனாகனும்னு மக்கள் எதிர்பாக்குறாங்க?” - சினிமா சீக்ரெட் சொல்கிறார் அன்புமணி

“தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினைக் கடைசியா எப்போது சந்தித்தீர்கள்?”

``போன மாசம் ஃப்ளைட்ல பார்த்தேன். `கலைஞர் எப்படி இருக்கார்’னு கேட்டேன். `வீட்டுக்கு வந்து பார்க்கணும்’னு சொன்னேன். `மாலை நேரத்தில் வாங்க’ன்னு சொன்னார். ஸ்டாலினிடம் எனக்கு நல்ல நட்பு இருக்கு. அரசியல் வேற; நட்பு வேற. அரசியலில் அவங்க வேற கட்சி, நாங்க வேற கட்சி அவ்வளவுதான்.”

“தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க. தமிழகத்தில் கால் ஊன்ற முடியுமா?”

“அது சாத்தியமில்லாத விஷயம்கிறது  எல்லோருக்குமே தெரியும். அவங்களுக்கு இங்கே சரியான தலைவர்களும் கிடையாது. தொண்டர்களும் கிடையாது. தமிழகத்தில் நிலவுகிற சந்தர்ப்பச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. அவ்ளோதான்.’’

“கமல்ஹாசனின் அரசியல் ட்வீட்களைக் கவனிக்கிறீர்களா?”

“உண்மையிலேயே அவர் சொல்றதெல்லாம் சரியாத்தான் இருக்கு. கமல் ஒரு தைரியசாலி. மனதில் பட்டதை அப்படியே பேசிடுவார். அதனால் பல பிரச்னைகளையும் சந்திச்சுருக்கார். உள்ளதைத்தானே சொல்லிட்டு இருக்கார். ஊழல் இருக்கு, அதைத்தான் அவர் சொல்றார். உண்மையைச் சொல்றவரைப் போய், ஒருமையில் பேசுறதெல்லாம் கலாசாரமின்மையையே காட்டுது.”

“கமல் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா?’’


“யார் வேண்டுமானாலும் வரலாங்க. ஆனால், இன்னைக்குத் தமிழ்நாட்டுக்குத் தேவை என்ன? நடிகர்கள் கையில் கொடுத்துதான் தமிழகம் படாதபாடு பட்டுகிட்டு இருக்கு. நல்ல நிர்வாகிகள், அனுபவசாலிகள், சாதனையாளர்கள், இளைஞர்கள், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள்தான் தமிழகத்துக்குத் தேவை. தமிழ்நாட்டில் என்னனென்ன துறையில் என்ன பிரச்னை இருக்குனு தெளிவா தெரிஞ்சவங்கதான் தேவை. ஏன்னா, தமிழ்நாடு இன்னைக்கு ஐ.சி.யூ-வில் இருக்கு. ரொம்ப மோசமான சூழலில் இருக்கு. கடனே ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல இருக்கு. இன்னொரு பக்கம் ஜி.எஸ்.டி, விவசாயப் பிரச்னைகள். அதனால, இப்போதைய தேவை டாக்டர்தான்; ஆக்டர்கள் கிடையாது. கமலும், ரஜினியும் நல்ல நடிகர்கள். நடிப்பு வேற; அரசியல் வேற.”

“கமல் நடத்துகிற பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசித்துப் பார்க்கிறீர்கள்போல... ஓவியாவுக்கு விழுந்த ஓட்டுகள் பற்றியெல்லாம் பேசியிருந்தீர்கள்?’’ 

“நான் பிக் பாஸ் பார்த்ததில்லை. அன்னைக்கு நான் சொன்னது, இளைஞர்கள் எல்லோரும் ஒரு நடிகை பின்னாடி போய்கிட்டு இருக்கீங்களே என்றுதான். இதுக்காக ஒன்றரை கோடிப் பேர் ஓட்டுப் போடறீங்களே... அந்த ஓட்டை எனக்குப் போட்டு இருந்தீங்கனா, 50 ஆண்டு காலத்தில் நடக்காத நன்மைகளை ஐந்தாண்டுக் காலத்தில் நடத்திக் காட்டியிருப்பேனே என்று ஓர் ஆதங்கத்தில் சொன்னேன். ஐந்தாண்டுக் காலத்தில் அடுத்த 50 ஆண்டு காலத்துக்கும் சேர்த்துத் திட்டமிட எனக்குத் தெரியும். எனக்கு நடிக்கத் தெரியாது. ஆனால், மக்கள் நான் நடிகனாகணும்னு  எதிர்பார்க்கிறாங்கன்னு நினைக்கிறேன். ரஜினி சொல்றாரு சிஸ்டம் சரியில்லைனு. ஏன் ஜெயலலிதா இருக்கிறப்போ சொல்லலை? அதை இப்போ சொல்றாரேங்கிற ஆதங்கம்தான்.”

“நீங்கள் சினிமாவுக்கு எதிரானவரா?”


“எங்க குடும்பமே சினிமாவுக்கு எதிரானவங்கன்னு நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க. அப்படிக் கிடையவே கிடையாது. நானே வாரம் ஒரு சினிமா பார்த்திடுவேன். அப்பாவும் பார்ப்பார். சினிமா கலாசாரம் வேண்டாம் என்பது மட்டும்தான் எங்கள் கோரிக்கை. அது ஒரு பொழுதுபோக்குதான். வாழ்க்கையே அது கிடையாதுன்னுதான் நாங்க சொல்றோம். இந்த கட் அவுட், பாலபிஷேக கலாசாரமெல்லாம் வேண்டாம்னுதான் நான் சொல்றேன். சினிமாத்துறையைச் சேர்ந்தவங்க சொல்றதை எடுத்துக்கிற மக்கள், ஏன் அறிவார்ந்த கருத்துகளைச் சொல்றவங்களை எடுத்துக்கறதில்லைங்கறதுதான் என்னோட வருத்தம்.”

“மேன்லியா இருக்கீங்க, உங்களையும் சினிமாவில் நடிக்க நிறைய பேர் கூப்பிட்டிருப்பாங்களே?”

“நிறையவே வந்துருக்கு. சமீபத்தில்கூட கேட்டாங்க. ஆனால், நான் கையெடுத்துக் கும்பிடுவேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நடிப்பெல்லாம் வேண்டாம்னு சொல்லிடுறது. பல சமயம் மத்தவங்க சினிமாங்கிறது ஒரு மீடியம், அதுவழியா நீங்க போய் ரீச் ஆகலாமேன்னு சொல்லியிருக்காங்க. ஆனால், எனக்கு அது வேண்டாம்னு சொல்லிட்டேன்.”

“உங்கள் மகள்கள் இப்போ என்ன பண்றாங்க?’’

 “முதல்  பொண்ணு ஆர்க்கிடெக்ட்.  அவங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. கணவர் டாக்டர். இரண்டாவது பொண்ணு அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முடிச்சுட்டாங்க. மூணாவது பொண்ணு ஒன்பதாவது படிக்கிறாங்க.”

``அவங்க உங்க பேட்டிகள், மேடைப்பேச்சுகளைக் கேட்டு ஃபீட்பேக்ஸ் எதுவும் சொல்வாங்களா?”

“அதெல்லாம் நிறைய சொல்வாங்க. அதிலும் இந்த மூணாவது பொடிசு இருக்காங்களே, அவங்க நிறைய சொல்வாங்க. `அப்பா இந்த கலர் ட்ரெஸ் போடுங்கப்பா; கூலர்ஸ் போடுங்கப்பா’ அப்படின்னுல்லாம் சொல்வாங்க. ரெண்டாவது பொண்ணு சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்கிறதால அதில் நடக்கிற விஷயங்களையெல்லாம் பகிர்ந்துப்பாங்க. ஆனால், நெகட்டிவ் கருத்துகளைக்கூட நான் ஜாலியாதான் எடுத்துப்பேன். போன தடவை நான் விகடனுக்குக் கொடுத்த பேட்டியில் ‘பாகுபலியாகிய நான்’னு சொன்னதைப் பலரும் கிண்டல் பண்ணி மீம்ஸ் போட்டு இருந்தாங்க. என் இரண்டாவது பொண்ணு ‘இனிமே இப்படி எல்லாம் பேசாதீங்கப்பா’னு சொன்னாங்க. நான் கேட்டுப்பேன். ஆனா, நானே என் மீம்ஸ்லாம் பார்த்துச் சிரிச்சுருக்கேன்.”

“உங்கள் வாரிசுகளுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா?”

“இல்லை. என் மகள்கள் யாருக்கும் அரசியல் ஆசை கிடையாது. இரண்டாவது பொண்ணு இன்ஜினீயரிங் படிச்சாலும், மூவி ப்ரொடக்‌ஷன் கத்துக்க நினைக்கிறாங்க. நானும் அதுக்குத் தடை சொல்லலை. எங்களுக்குள்ள மகிழ்ச்சியா, சந்தோஷமா நிறைய நல்ல விஷயங்களைப் பகிர்ந்துப்போம். ஒவ்வொரு பொங்கலுக்கும் தைக்கூடல் விழா கொண்டாடுவோம். தை மாசம், தைலாபுரத் தோட்டத்தில் கூடுறதுன்னு அதுக்கு அர்த்தம். பேரப்பிள்ளைகளெல்லாம் சேர்ந்து இரண்டுநாள் செம லூட்டியடிப்பாங்க. எங்களுக்கு அந்த சமயம் மிகழ்ச்சியா இருக்கும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism