Published:Updated:

அமித் ஷா ஆப்சென்ட்... அ.தி.மு.க காரணம்?

அமித் ஷா ஆப்சென்ட்... அ.தி.மு.க காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா ஆப்சென்ட்... அ.தி.மு.க காரணம்?

அமித் ஷா ஆப்சென்ட்... அ.தி.மு.க காரணம்?

அமித் ஷா ஆப்சென்ட்... அ.தி.மு.க காரணம்?

அமித் ஷா ஆப்சென்ட்... அ.தி.மு.க காரணம்?

Published:Updated:
அமித் ஷா ஆப்சென்ட்... அ.தி.மு.க காரணம்?
பிரீமியம் ஸ்டோரி
அமித் ஷா ஆப்சென்ட்... அ.தி.மு.க காரணம்?

மீண்டும் ஒருமுறை தள்ளிப்போயிருக்கிறது, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக விசிட். ‘டெல்லியில் திடீர் வேலைகள்’ என்று காரணம் சொல்லப்பட்டாலும், வேறு பல காரணங்களை அடுக்குகிறார்கள், பி.ஜே.பி வட்டாரத்தில்.

அமித் ஷா ஆப்சென்ட்... அ.தி.மு.க காரணம்?

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்கிறார் அமித் ஷா. இதன் ஒருபகுதியாக ஆகஸ்ட் 22 முதல் 24 வரை அவரது தமிழக விசிட் திட்டமிடப்பட்டது. சென்னையிலும் கோவையிலும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பற்றியும் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் அவரது விசிட் தள்ளி வைக்கப்பட்டதாக 21-ம் தேதி காலை அறிவிப்பு வந்தது. ‘பி.ஜே.பி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி கூட்டியுள்ளார். அதில் அமித் ஷா பங்கேற்க வேண்டியுள்ளது. 22-ம் தேதி ஒவ்வொரு பி.ஜே.பி முதல்வரையும் அமித் ஷா தனித்தனியே சந்தித்துப் பேசுகிறார். அதோடு, விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் நடைபெறுகிறது. இதனால் அவர் அடுத்த சில நாள்கள் டெல்லியில் இருக்க வேண்டியுள்ளது’’ என்கின்றனர் பி.ஜே.பி-யின் மாநில நிர்வாகிகள்.

உண்மையான காரணம் என்ன? ‘‘ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் எடப்பாடி, ஓ.பி.எஸ் அணிகள் இணைந்துவிடும் என டெல்லி தலைவர்கள் நம்பினார்கள். அதனால்தான், அந்தப் பரபரப்புகள் ஓய்ந்து விடும் என அதற்கு ஒரு வாரம் கழித்து அமித் ஷா விசிட்டுக்குத் தேதி குறிக்கப்பட்டது. ஆனால், 21-ம் தேதிதான் இணைப்பு என முடிவானது. ஏற்கெனவே ‘இந்த அணிகளைப் பின்னால் இருந்து இயக்குவது பி.ஜே.பி’ என்ற கருத்து பரவலாக உள்ளது. இந்தச் சூழலில் அமித் ஷா தமிழ்நாடு வருவது, அந்த விமர்சனத்தை உறுதிப்படுத்துவதாக அமையும் என்று மூத்த தலைவர்கள் கருதினர். அதனால்தான் பயணம் தள்ளிப்போனது’’ என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

ஏற்கெனவே மே 10-ம் தேதி அமித் ஷா தமிழ்நாடு வருதாகத் திட்டமிடப்பட்டு, பிறகு அது ரத்து செய்யப்பட்டது. அப்போது தினகரன் மீதான லஞ்சப் புகார் வழக்குப் பரபரப்பாக இருந்தது. அதோடு தமிழக விவசாயிகள் போராட்டமும் உச்சகட்டத்தில் இருந்தது. அந்தச் சூழலில் அமித் ஷா வருகை தள்ளிப் போனது. 

‘‘பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சி இணைந்துள்ளது. இதேபோல அ.தி.மு.க-வும் இணையுமா என ஆலோசனை நடக்கிறது. அமித் ஷா விரைவில் வரும்போது இதுபற்றி அறிவிப்பு வெளியாகலாம். அதை இறுதி செய்யவே அவர் பயணம் தள்ளிப்போனது’’ என்கிறார்கள்  டெல்லி வட்டாரத்தினர்.   

- சே.த.இளங்கோவன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism