Published:Updated:

முன்னாள் அமைச்சர் VS ஆளுங்கட்சி எம்.பி... முதல்வர் நிகழ்ச்சியில் முரட்டுச்சண்டை!

முன்னாள் அமைச்சர் VS ஆளுங்கட்சி எம்.பி... முதல்வர் நிகழ்ச்சியில் முரட்டுச்சண்டை!
பிரீமியம் ஸ்டோரி

தினகரனின் மேலூர் பொதுக் கூட்டத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, திருவாரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாக நடத்திக் காட்டியிருக்கிறார், உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பங்கேற்கும் மாநாடுகளைப் போல ஏற்பாடுகள் பிரமாண்டமாக இருந்தன. எடப்பாடிக்கு விண்ணுயர கட்அவுட், முளைப்பாரியுடன் 200 பெண்கள் கொடுத்த வரவேற்பு, விழா மேடைவரை புதிய தார்ச் சாலை என அசத்தினார்கள்.  எட்டு மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் மக்கள் ஏற்றிவரப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு அரசு நலத்திடப் பயனாளிகள் 36 ஆயிரம் பேரைத் தேடிப்பிடித்து அழைத்துவந்தார்கள் அரசு அதிகாரிகள்.

முன்னாள் அமைச்சர் VS ஆளுங்கட்சி எம்.பி... முதல்வர் நிகழ்ச்சியில் முரட்டுச்சண்டை!

விழாவில், “நான் ட்ரவுசர் போட்ட காலத்திலிருந்து கட்சியில் இருக்கிறேன். எங்க ஊர் பக்கமெல்லாம் ‘இது எம்.ஜி.ஆர் போட்ட ரோடு’னுதான் சொல்வாங்க. அதைக் கேட்டுக் கேட்டு வளர்ந்த நான், இன்று எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழாவை எடுக்கிறேன். இந்தக் கட்சியையும் ஆட்சியையும் எம்.ஜி.ஆரின் வழியில் வந்தவர்களால்தான் காப்பாற்ற முடியும். உங்களுக்கு முன்பிருந்து அ.தி.மு.க-வில் இருக்கிறேன்” என்று திவாகரனுக்குச் சவால் விட்டுப் பேசினார் அமைச்சர் காமராஜ்.

தஞ்சாவூர் எம்.பி-யான பரசுராமனை எம்.எல்.ஏ என்றும், பொள்ளாச்சி ஜெயராமனைப் பேரவைத் தலைவர் என்றும் தப்புத்தப்பாகக் குறிப்பிட்ட எடப்பாடி, அமைச்சர் காமராஜைப் புகழ்ந்து தள்ளினார். காரணம், சசிகலாவின் சொந்த மாவட்டத்திலேயே திவாகரனுக்கு எதிராகப் பிரமாண்டமான கூட்டத்தை நடத்திக் காட்டினார் என்பதுதான்.

திவாகரனின் ஆதரவாளர்களான குடவாசல் எம்.ராமச்சந்திரன், எஸ்.காமராஜ், சிவா ராஜமாணிக்கம், கு.சீனிவாசன், அசோகன் ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை. ‘தம்பி வா... தலைமை ஏற்க வா’ என்று திவாகரனுக்கு நேற்றுவரை ஃபிளக்ஸ் வைத்துக்கொண்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான பாப்பா சுப்பிரமணியன், இந்த விழாவில் பங்கேற்று முதல்வருடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னாள் அமைச்சர் VS ஆளுங்கட்சி எம்.பி... முதல்வர் நிகழ்ச்சியில் முரட்டுச்சண்டை!

திவாகரன் ஆதரவாளர்களிடம் பேசியபோது, “பழசையெல்லாம் மறந்துவிட்டு, ‘திருவாரூரில் நான்தான்’ என்று திவாகரனைச் சீண்டிப் பார்க்கிறார் அமைச்சர் காமராஜ். ஆட்சி இருக்கும்வரைதான் இவர்களின் ஆட்டம் எல்லாம். ஆட்சி போய்விட்டால், என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்” என்றனர்.

முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்க சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார், முதல்வர் பழனிசாமி. அவரை வரவேற்க திருச்சி விமான நிலையத்தில், வி.ஐ.பி-கள் காத்திருந்தனர். அப்போது, தினகரனின் ஆதரவாளரான முன்னாள் எம்.பி இளவரசன் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர்கள் மற்றும் எம்.பி-க்களுடன் வந்தவர்கள் எல்லோரும் பலத்த பாதுகாப்பை மீறி வரவேற்பு அறைக்குள் நுழைந்ததால், அறையை மத்தியப் பாதுகாப்புப் படையினர் பூட்டினர். அப்போது அமைச்சர் வளர்மதி, “நான் லோக்கல் மினிஸ்டர். என்னை உள்ளே விடுங்க” எனச் சத்தம் போட்டார். பாதுகாப்புப் படை அதிகாரிகளோ, “உங்களிடம் பாஸ் இருந்தால் அனுமதிக்கிறோம்” என்றனர். கோபத்துடன் கிளம்பிய வளர்மதியை விமான நிலைய அதிகாரிகள், சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பினர்.

முன்னாள் அமைச்சர் VS ஆளுங்கட்சி எம்.பி... முதல்வர் நிகழ்ச்சியில் முரட்டுச்சண்டை!

திருவாரூர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, சென்னை செல்வதற்காக இரவு 11.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார் எடப்பாடி. அவரை வழியனுப்பி வைக்க அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி எம்.பி குமார், முன்னாள் அமைச்சர் சிவபதி ஆகியோர் வந்தனர். முதல்வரை அனுப்பிவிட்டு எல்லோரும் வெளியே வந்துகொண்டிருந்தபோது, முன்னாள் அமைச்சர் சிவபதி, எம்.பி குமாரைப் பார்த்து ‘‘சி.எம். நிழல் வருது... எல்லோரும் ஓரம் போங்க’ என்று கலாய்த்தார். கடுப்பான எம்.பி குமார், ‘‘யாரைச் சொல்ற? அடிச்சு மூஞ்சியப் பேத்துருவேன்’’ என்று கோபமாகத் திட்டினார். அதில் கடுப்பான சிவபதி, ‘‘யாரை அடிப்பேன்னு சொல்லுற?’’ என்று குமாரின் முகத்தில் குத்துவதற்குக் கையை ஓங்கியபடி பாய்ந்தார். சுதாரித்த குமார், சட்டென விலகிக்கொண்டார். பத்திரிகையாளர்கள் அருகில் இருப்பதைப் பார்த்ததும், எல்லோரும் அமைதியாகக் கலைந்துவிட்டார்கள்.

உள்கட்சி மோதல் திருச்சி அ.தி.மு.க-வுக்குள் தகித்துக்கொண்டிருக்கிறது.

- சி.ஆனந்தகுமார், ஏ.ராம்
படங்கள்: தே.தீட்ஷித், க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism