‘மாநாட்டில் பங்கேற்றவர்கள் சுமார் 8,000 பேர். இவர்களில் பாதிப் பேர் 40 வயதைக் கடந்தவர்கள்’ - ரஜினிக்காக தமிழருவி மணியன் நடத்திய மாநாடு பற்றி தமிழக உளவுத்துறையினர் அரசுக்கு அனுப்பிய அறிக்கை இது.

‘ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் அவசியம்’ என்று வலியுறுத்தி அரசியல் விழிப்பு உணர்வு மாநாடு, காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஆகஸ்ட் 20-ம் தேதி திருச்சியில் நடைபெற்றது. ‘இந்த மாநாட்டுக்குச் செல்ல வேண்டும்’ என ரஜினி தன்னுடைய ரசிகர்களுக்கு உத்தர விட்டதால், தமிழகம் முழுவதிலுமிருந்து ரஜினி ரசிகர்கள் வந்திருந்தனர். ‘ஆண்ட கட்சி... ஆளும்கட்சியை அகற்றுவோம்’, ‘அரசியலுக்கு வந்துட்டேன்னு சொல்லு’, ‘படையப்பாவின் கனவுகள் எல்லாம் பலிக்கத்தான் போகின்றன’ என்பன போன்ற அதிரடி வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டி அதகளப்படுத்தியிருந்தனர், ரஜினி ரசிகர்கள். காந்தி, காமராஜர், ரஜினிகாந்த், தமிழருவி மணியன் ஆகியோரின் படங்களும் மேடையில் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரஜினி ரசிகர்கள், ரஜினி மன்றக் கொடிகளை வைத்திருந்தனர்.

இந்த மாநாட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்க ரஜினி ரசிகர்கள் முன்வந்தபோது, அதைப் பெற மறுத்த தமிழருவி மணியன், மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் மத்தியில் உண்டியல் ஏந்தி நிதி வசூலித்தார்.

அன்றைய தினம், மதியத்திலிருந்து மழை விட்டு விட்டுப் பெய்தது. மாலையில் தமிழருவி மணியன் மேடையேறினார். அப்போது, லேசான தூறல். மைக் பிடித்த அவர், “கூட்டம் முடியும்வரை நிச்சயம் மழை வராது. தமிழகத்தைக் காப்பாற்றிட ரஜினி என்னிடம் சொன்ன விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்” என முன்னோட்டம் கொடுத்தார். “தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இக்கட்சிகளைத் தமிழகத்திலிருந்து அகற்றவேண்டும் என காமராஜர் இறுதிமூச்சு உள்ளவரைக் கூறினார். அதை நிறைவேற்ற முயற்சிகளை எடுத்தேன். பலனளிக்கவில்லை. கடைசிக் கருவியாக ரஜினி கிடைத்துள்ளார். இதுதான் கடைசி வாய்ப்பு. இதை விட்டால் தமிழகம் எழவே வாய்ப்பில்லை. அழுகிக்கிடக்கிற அரசியலை ஒழித்து, வெளிப்படையான ஆட்சியைத் தருவதற்காக ரஜினி விரைவில் அரசியலுக்கு வருவார். கவுன்ட் டவுன் ஆரம்பமாகிறது” என்றபோது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம்.

மாநாட்டில் பங்கேற்ற ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். பெரம்பலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ரஜினி ரவி, “ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு இளைஞர்கள், ஒன்று சேர்ந்ததுபோல், வாட்ஸ்அப், சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்தோம். மற்றவர்களைப் போல காசு கொடுத்துக் கூட்டி வரவில்லை. தலைவர், அரசியலுக்கு வரவேண்டும் என்பது இருபது வருடக் கனவு. அதற்கான காலம் இப்போதுதான் கனிந்துள்ளது” என்றார்.

திருச்சி மாவட்ட அமைப்பாளர் ராயல் ராஜு, “ஜெயலலிதா மறைவால் அரசியலில் ஏற்பட்ட வெற்றிடம் ரஜினியின் வருகையால் நிரப்பப்படும். இந்தக் கூட்டம், ‘ரஜினி’ என்கிற மூன்றெழுத்துக்காகக் கூடிய கூட்டம்” என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு சென்னையிலிருந்து வந்திருந்த வெங்கடேஷ், “செவிவழிச் செய்தியைக் கேட்டு, தானாகக் கூடிய கூட்டம் இது. மாநாட்டு மைதானத்தை ரஜினி ரசிகர்களும் பொதுமக்களும் 95 சதவிகிதம் நிரப்பினார்கள். மீதத்தைக் காந்திய மக்கள் இயக்கம் பகிர்ந்துகொண்டது” என்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழருவி மணியன் மீது காட்டமான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவரிடம் பேசினோம். ‘‘விமர்சனங்களை வரவேற்கிறேன். ‘காமராஜர் பற்றிப் பேசிய, தமிழருவி மணியன் இப்படி ரஜினிகாந்த் பின்னாடி போய் நிற்பது சரியா?’ என்று கேட்டால், அதற்குப் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், ‘ரஜினிகாந்த்திடம் 10 கோடி ரூபாய் வாங்கிவிட்டார், இவர் அரசியலில் விபசாரம் செய்கிறவர்’ என்றெல்லாம் விமர்சிக்கிறவர்கள் அத்தனை பேருமே இறைவனால் ஒரு கட்டத்தில் தண்டிக்கப்படுவார்கள். நான் ரஜினிகாந்த்துக்கு வழக்கறிஞர் அல்ல. ஆதலால், அவரின் நேர்மையைப் பற்றியெல்லாம் இதுவரை பேசியதே கிடையாது. ‘ஊழலற்ற தூய்மையான ஆட்சியைக் கொடுப்பதற்காகவே நான் அரசியலுக்கு வருகிறேன்’ என்று என்னிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி. அதை நான் முன்னெடுக்கிறேன்... அவ்வளவுதான்! மற்றபடி ரஜினியை உள்ளும் புறமுமாக அறிந்துவைத்திருக்கிற கடவுள் இல்லை நான்’’ என அழுத்தமான வார்த்தைகளில் சொல்கிறார் தமிழருவி மணியன்.

இப்படித்தான் கடந்த எம்.பி. தேர்தலில் மோடியைத் தூக்கிப் பிடித்தார். பிறகு அரசியலில் இருந்து ஓய்வு எனச் சொன்னார். ரஜினி எத்தனை நாளைக்கோ?!

- சி.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்