பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

மீடியாக்களைச் சந்திப்பதில் தினகரனிடம் கொஞ்சம்கூட தயக்கம் இல்லையே?

தினகரனிடம் இருக்கும் பாராட்டத்தக்க செயல்பாடுகளில் ஒன்று இது. எவ்வளவு சிக்கலான நேரத்திலும், மீடியாக்களை அவர் சந்தித்து வந்துள்ளார். எவ்வளவு கிண்டல், கேலியான கேள்விகளுக்கும் அவர் பதில் சொல்லியிருக்கிறார், அது அபத்தமாக இருந்தாலும்.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

பி.ஜே.பி-யின் முக்கியப் பிரமுகராக சுப்பிரமணியன் சுவாமி உலா வராதது ஏன்?

சுவாமியை எங்கு வைக்க வேண்டும், எப்படி வைக்க வேண்டும் என்று நரேந்திர மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தெரியும். பி.ஜே.பி-யை விட்டு வெளியில் அவரை வைத்திருந்தால் பி.ஜே.பி-க்குக் குடைச்சலைக் கொடுப்பார். வேறு ஏதேனும் பதவியைக் கொடுத்து டெல்லியிலோ, சென்னையிலோ இருக்க வைத்திருந்தால், புதுப்புது சிக்கல்களை உருவாக்கிவிடுவார். அதனால்தான் டெல்லி பி.ஜே.பி தலைமை அலுவலகத்தில் அசைய முடியாமல் உட்கார வைத்து விட்டார்கள். அதனால், எப்போதாவது வெளியில் வருகிறார். சென்னைக்குப் பல் பரிசோதனைக்கு வந்தாரே தவிர, பி.ஜே.பி அலுவலகத்துக்குக்கூடச் செல்லவில்லை. அந்தளவுக்கு ‘பாதுகாப்பாக’ அவரை வைத்துள்ளார்கள்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

கமல்ஹாசனுக்கு தி.மு.க-வின் ஆதரவு தேவைப்படுகிறதா? அல்லது தி.மு.க-வுக்கு கமல்ஹாசனின் ஆதரவு தேவைப்படுகிறதா?

இரண்டு பேருக்குமே பரஸ்பரம் தேவைகள் இருக்கலாம்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

‘‘தற்காப்பு முக்கியமல்ல, தன்மானம் முக்கியம்’’ என்று ‘முரசொலி’ விழாவில் கமல்ஹாசன் சொல்லியிருப்பது?

தன்மானைத்தையே தற்காப்பு ஆயுதமாக கமல் பயன்படுத்த நினைப்பதைக் காட்டுகிறது.

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

மீண்டும் இரட்டை இலை துளிர்க்க வேண்டுமென்றால், அது யார் கையில் இருக்கிறது?

‘இலை துளிர்க்க சூரியன் தேவை’ என்கிறது அறிவியல். ‘இலை துளிர்க்க தாமரை தேவை’ என்பது அரசியல்.

தட்டார்மடம் சித்தர்ராஜ், வண்ணாரப்பேட்டை.

ரஜினியின் நீண்டகால நண்பரான ராஜாபகதூர் மதுரையில் பேசியபோது, சுப்பிரமணியன் சுவாமியைக் கண்டித்துப் பேசியதற்கு என்ன காரணம்?

சுவாமி, ரஜினியை விமர்சித்துப் பேசிவருவது காரணமாக இருக்கலாம்.

கே.வேலுச்சாமி, தாராபுரம்.

ஆளும் அ.தி.மு.க (அம்மா) ஆட்சியை, 2017 வரைக்குமாவது தொடர்வதற்கு விட்டு வைப்பாரா தினகரன்?

பன்னீர் - எடப்பாடி இணைந்ததும் அது தெரிந்துவிடும்.

கு.முருகானந்தம், பருத்திக்குடி.

தி.மு.க-வினர், ‘அண்ணா ஆட்சி அமைப்போம்’ என்று ஏன் சொல்வதில்லை?

இன்றைய நிலையில், ‘கலைஞர் ஆட்சியை அமைப்போம்’ என்று கூட அவர்கள் சொல்லமாட்டார்கள். அநேகமாக, ‘ஸ்டாலின் ஆட்சியை அமைப்போம்’ என்று வேண்டுமானால் சொல்வார்கள்.

க.தர்மராஜ், விருதுநகர்.

உயில் எழுதி வைக்காமலும், வாரிசு என யாரையும் அடையாளம் காட்டாமலும் மறைந்துவிட்ட ஜெயலலிதாவின் சொத்துகளை அரசுடைமை ஆக்குவதில் என்ன சிக்கல்?

உயில் எழுதவில்லை என்பதற்காகவோ, ‘இன்னார்தான் என் வாரிசு’ என்று சொல்லாமல் இருப்பதாலேயோ, அந்தச் சொத்துக்களை எல்லாம் அரசுடைமை ஆக்கிவிட முடியாது. போயஸ் கார்டன் என்பது ஜெயலலிதாவின் சொத்து மட்டுமல்ல... அவருடைய அம்மா சந்தியாவும் ஜெயலலிதாவும் இணைந்து நடத்திய ‘நாட்டிய கலா நிகேதன்’ என்ற ஒரு அமைப்பின் பெயரில் வாங்கப்பட்டது. அதை ஜெயலலிதாவுக்கு ஒரு உயில் மூலம் உரிமையாக்கி வைத்தார் சந்தியா. எனவே, சந்தியாவின் பேரன் பேத்திகளாக தீபாவும், தீபக்கும் கொடி உயர்த்துவதில் நியாயம் இருக்கிறது.

படங்கள்: கே.ராஜசேகரன், கே.ஜெரோம், கே.ரமேஷ்

வி.ஐ.பி கேள்வி

வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தி.மு.க செய்தித் தொடர்பாளர்

இந்தியா விடுதலை பெற்ற 70 ஆண்டுகளில் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி பல மாநில அரசுகளை மத்திய அரசு கலைத்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் 101 திருத்தங்களைச் செய்திருக்கிறோம். அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டம் 30 பக்கங்கள்தான். சுதந்திரம் அடைந்த 200 ஆண்டு காலத்தில் அவர்கள் செய்துள்ள திருத்தங்கள் வெறும் 20-தான். ஆக, நம் நாட்டில் அடிப்படைச் சட்டங்களான பேஸ்மென்ட், வீக்கா? அல்லது அதனை நடைமுறைப்படுத்தும் பில்டிங், வீக்கா?

இந்தியா ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம் கொண்ட மக்கள் வாழும் நாடு அல்ல. இதன் பன்முகத்தன்மை காரணமாக பல்வேறு சட்டங்கள், அந்த சட்டங்களின் உள்பிரிவுகள், உள்பிரிவுகளுக்குள் துணைப் பிரிவுகள் என்று எல்லாமே அவசியப்படுகின்றன. அகில இந்திய அளவில் ஒரு சட்டத்தை நிறைவேற்றும்போது, ஒவ்வொரு மாநில மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அதில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவை உள்பிரிவுகளாகச் சேர்க்கப்படுகின்றன. சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு தருவதற்கான திருத்தம்தான் முதலாவது திருத்தம். இப்படி ஒவ்வொரு திருத்தத்துக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு உறுப்பினராக இருந்து எழுதிய டாக்டர் அம்பேத்கர், சட்ட அமைச்சராகவும் இருந்தார். இந்து சட்டத்திருத்த மசோதா வந்தபோது, பிரதமர் நேருவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அமைச்சர் பதவியிலிருந்து அம்பேத்கர் விலகினார். இப்படிப்பட்ட வரலாறுகள் ஒவ்வொரு சட்டத்துக்கும் உண்டு. எத்தனை முறை வேண்டுமானாலும் சட்டத்தைத் திருத்தலாம். அது ஆக்கபூர்வமான திருத்தமாக அமைய வேண்டும். ‘இதுவே இறுதியான சட்டம்’ என்ற ஒன்று கிடையாது. காலமாற்றங்கள் சட்டங்களைத் தீர்மானிக்கின்றன. மக்களுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்துக்காக மக்கள் அல்ல.

அம்பேத்கர் சொன்ன மேற்கோள் முக்கியமானது: ‘எத்தகைய நல்ல சட்டமாக இருந்தாலும், அதனை அமல்படுத்துபவரைப் பொறுத்தே அது நல்ல சட்டமா, கெட்ட சட்டமா என்பது புலப்படும்!’

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!