Published:Updated:

நாடாளுமன்றத்தின் நடுநிலையான குரல் சோம்நாத் சாட்டர்ஜி! #RIPSomnathChatterjee

நாடாளுமன்றத்தின் நடுநிலையான குரல் சோம்நாத் சாட்டர்ஜி! #RIPSomnathChatterjee

பாராளுமன்றக் கட்டடத்தை விட்டு வெளியேறும்போது நிச்சயம் வலியோடுதான் வெளியேறுகிறேன். நீங்களே சொல்லுங்கள் எந்த விஷயத்தையாவது நான் கேட்காமல் இருந்திருக்கிறேனா என்று பாராளுமன்றத்துக்குள் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் சோம்நாத் சாட்டர்ஜி. 

நாடாளுமன்றத்தின் நடுநிலையான குரல் சோம்நாத் சாட்டர்ஜி! #RIPSomnathChatterjee

பாராளுமன்றக் கட்டடத்தை விட்டு வெளியேறும்போது நிச்சயம் வலியோடுதான் வெளியேறுகிறேன். நீங்களே சொல்லுங்கள் எந்த விஷயத்தையாவது நான் கேட்காமல் இருந்திருக்கிறேனா என்று பாராளுமன்றத்துக்குள் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் சோம்நாத் சாட்டர்ஜி. 

Published:Updated:
நாடாளுமன்றத்தின் நடுநிலையான குரல் சோம்நாத் சாட்டர்ஜி! #RIPSomnathChatterjee

``கொஞ்சமாவது மரியாதை கொடுங்கள். உங்களை நீங்கள் பலப்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், அதில் நான் ஒரு முடிவும் எடுக்க முடியாது. இந்த கட்டடத்துக்குள் நான் 40 வருடங்களாக இருக்கிறேன். எனக்கு வருத்தமாக இருக்கிறது. நீங்கள் இங்கு வந்து கூச்சல் போடுகிறீர்கள். என் வாழ்நாளில் இது மோசமான காலமாக உணர்கிறேன். பாராளுமன்ற கட்டடத்தை விட்டு வெளியேறும்போது நிச்சயம் வலியோடுதான் வெளியேறுகிறேன். நீங்களே சொல்லுங்கள் எந்த விஷயத்தையாவது நான் கேட்காமல் இருந்திருக்கிறேனா" என்று பாராளுமன்றத்துக்குள் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் சோம்நாத் சாட்டர்ஜி. 

பாராளுமன்றத்தில் அதிக நாள்கள் எம்.பியாக இருந்தவர் சோம்நாத் சாட்டர்ஜி, 10 முறை எம்.பியாக இருந்தவர், 1996-ம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதையும் வென்றார். 1968-ம் ஆண்டு தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பர்தமன் தொகுதி எம்.பியாக இருந்த சோம்நாத்தின் தந்தை 1971-ல் இறந்தபோது அவர் இடத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். சுயேச்சையாக வெற்றிபெற்ற இவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. அதிலிருந்து 2009-ம் ஆண்டு வரை தொடர்ந்து எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984-85 காலத்தில் மட்டும் ஒருமுறை மம்தாவிடம் தோற்றார்.

1989 முதல் 2004 வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார் சோம்நாத். 2004-ம் ஆண்டு அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களவையின் சபாநாயகராக பதவியேற்றார். 2007-ம் ஆண்டு சட்டமன்றத்தில் கருணாநிதியின் பொன்விழாவில் கலந்துகொண்டு, `மாநில உரிமைக்காக தேசிய ஒற்றுமை குறையாமல் போராடியவர்' என்று பாராட்டினார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2008-ம் ஆண்டு மார்க்சிஸ்ட், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் செயல்பாடுகள் பிடிக்காமல் கூட்டணியை விட்டு வெளியேறியது. அப்போது சோம்நாத் சாட்டர்ஜியையும் சபாநாயகர் பதவியை விட்டு வெளியேறுங்கள் என்று மார்க்சிஸ்ட் கூறியது. அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளியுங்கள் என்றும் சோம்நாத்தைக் கட்டாயப்படுத்தியது. இதற்கெல்லாம் சோம்நாத்தின் பதில் `சபாநாயகர் எனும் பதவி கட்சி சார்ந்தது அல்ல. அதற்கெல்லாம் அப்பாற்பட்டது' என்றார்.

சபாநாயகர் பதவிக்காலம் முடியும்போது சோம்நாத் அளித்தப் பேட்டியில் ``என் வேலையில் எனக்கு திருப்தியில்லை, இந்த 5 ஆண்டுகளில் நான் நிறைய மனவேதனைக்கு உள்ளாகியிருக்கிறேன். 70 சதவிகித நேரம் அவை தொந்தரவுக்கு உள்ளாகியிருக்கிறது. எல்லா கட்சிகளும் என்னிடம் சரியாக நடந்துகொண்டன என்று கூறமுடியவில்லை. வாஜ்பாயிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவராக என்னை பதவி விலகக் கோரி கடிதம் வந்தது. ஆனால், பின்னர் என்னை வாஜ்பாய் சந்தித்தபோது அந்தக் கடிதம் நான் தனிப்பட்ட முறையில் எழுதியது அல்ல. அது எதிர்க்கட்சித் தலைவராக எடுத்த முடிவு என்று கூறினார்" என்று தெரிவித்தார்.

இதனால் கட்சியை விட்டே சோம்நாத்தை மார்க்சிஸ்ட் நீக்கியது. அதன்பின் பொதுவாழ்விலிருந்து உடல்நலம் கருதி தன்னை விலக்கிக் கொண்டார். 2013-ம் ஆண்டு அவருக்கு பாரத் நிர்மான் விருது வழங்கப்பட்டது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோம்நாத் 13, ஆகஸ்ட். 2018-ல் காலமானார். 89 வயதான சோம்நாத் சாட்டர்ஜி மக்களவையின் சிறந்த உறுப்பினர் மட்டுமல்ல, சிறந்த நடுநிலையான சபாநாயகரும்கூட. 50 வருட அரசியல் வாழ்க்கை, 40 வருடம் எம்.பி என்று வாழ்ந்த அனுபவமிக்க அரசியல் தலைவரை நாடு இழந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நடுநிலை நிலைநாட்டப்படும்போதெல்லாம் சோம்நாத் சாட்டர்ஜி நினைவுகூறப்படுவார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism