Published:Updated:

மாணவர்கள் மீது காங்கிரசார் மீண்டும் சரமாரி தாக்குதல் (படங்கள்)

விருதுநகர்: காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
 
மாணவர்கள் மீது காங்கிரசார் மீண்டும் சரமாரி தாக்குதல் (படங்கள்)

இது தொடர்பாக எம்.பி. மாணிக் தாகூர் உதவியாளர் ஜெயமூர்த்தி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
மாணவர்கள் மீது காங்கிரசார் மீண்டும் சரமாரி தாக்குதல் (படங்கள்)

மத்திய அரசை கண்டித்து ஈழ தமிழர் விடுதலை இயக்கத்திற்கான மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் 20 பேர் இன்று 12 மணிக்கு மதுரை ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக் தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.
 
மாணவர்கள் மீது காங்கிரசார் மீண்டும் சரமாரி தாக்குதல் (படங்கள்)

இதை முன் கூட்டியே அறிந்த இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பால்பாண்டி தலைமையில் 10 பேர் திரண்டனர். எம்.பி. அலுவலகத்துக்கு முன்பு நின்று மாணவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
 
மாணவர்கள் மீது காங்கிரசார் மீண்டும் சரமாரி தாக்குதல் (படங்கள்)

உடனே அங்கிருந்த இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் உருட்டுக்கட்டையால் மாணவர்களை சரமாரியாக தாக்கினர்.
 
மாணவர்கள் மீது காங்கிரசார் மீண்டும் சரமாரி தாக்குதல் (படங்கள்)

தகவல் அறிந்து விருதுநகர் மேற்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பினர் மீதும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
 
மாணவர்கள் மீது காங்கிரசார் மீண்டும் சரமாரி தாக்குதல் (படங்கள்)

பின்னர் மாணவர்களை தாக்கியது தொடர்பாக மாணிக் தாகூர் எம்.பி. அலுவலக உதவியாளர் ஜெயமூர்த்தி மற்றும் பால்பாண்டி, சதீஷ், கார்த்திக் உள்பட சிலரை கைது செய்தனர்.
 
மாணவர்கள் மீது காங்கிரசார் மீண்டும் சரமாரி தாக்குதல் (படங்கள்)

மாணவர்கள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் மோதல் சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்.கார்த்தி

படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்