Published:Updated:

கூவத்தூர்... ஓவர் To புதுச்சேரி!

கூவத்தூர்... ஓவர் To புதுச்சேரி!
பிரீமியம் ஸ்டோரி
கூவத்தூர்... ஓவர் To புதுச்சேரி!

கூவத்தூர்... ஓவர் To புதுச்சேரி!

கூவத்தூர்... ஓவர் To புதுச்சேரி!

கூவத்தூர்... ஓவர் To புதுச்சேரி!

Published:Updated:
கூவத்தூர்... ஓவர் To புதுச்சேரி!
பிரீமியம் ஸ்டோரி
கூவத்தூர்... ஓவர் To புதுச்சேரி!

தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் பாதுகாப்பாக  தங்க வைக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரியில் தனியாருக்குச் சொந்தமான ‘விண்ட் ஃப்ளவர்’ என்ற சொகுசு ரிசார்ட் மற்றொரு கூவத்தூராக மாறியுள்ளது.

புதுச்சேரி - கடலூர் சாலையில் அரியாங்குப்பத்தை அடுத்த சின்ன வீராம்பட்டினம் என்ற கடற்கரை கிராமத்தில், இந்த ரிசார்ட் அமைந்துள்ளது. இங்கு பிரத்யேக நீச்சல் குளங்களைக் கொண்ட ஐந்து தனித்தனி சொகுசு வில்லாக்களும், 46 தனி அறைகளும் உள்ளன. பிரதான நீச்சல் குளமும், ஆயுர்வேதிக் ஸ்பா வசதியும் உள்ளன. ரிசார்ட்டின் பின்புறம் படகு சவாரி போகலாம். அப்படியே கடற்கரைக்குச் சென்று வாக்கிங்கும் போகலாம்.  இங்குள்ள அறைகளின் வாடகை நாளொன்றுக்கு ரூ 5,600-லிருந்து 12 ஆயிரம் வரை.

கூவத்தூர்... ஓவர் To புதுச்சேரி!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வுக்குள் ஏற்பட்ட அதிகார மோதலைத் தொடர்ந்து, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவும் சசிகலாவை முதல்வராக அமர வைக்கவும் முயற்சி நடந்தது. அப்போது, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள பீச் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். அதனால், கூவத்தூர் உலகப்புகழ் பெற்றது. அந்தக் கூத்து நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஓ.பி.எஸ் - எடப்பாடி அணிகள் இணைந்துள்ளன. இந்த இணைப்பைத் தொடர்ந்து, எடப்பாடிக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டால், பேரங்கள் அனைத்தும் வீணாகிவிடும் என்று நினைத்த ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்பு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை வளைக்க நினைத்தது. உஷாரான தினகரன் தரப்பு, தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை கூவத்தூர் பாணியில் ‘பாதுகாக்க’ முடிவெடுத்தது. எனவே, அவர்கள் புதுச்சேரிக்கு பார்சல் செய்யப்பட்டனர்.

‘விண்ட் ப்ளவர்’ சொகுசு ரிசார்ட்டில் அவர்களைத் தங்க வைப்பதென்று முடிவானதும், தினகரனின் நண்பர் கிஷோர் என்பவர் பெயரில் 19 அறைகள் புக் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 22-ம் தேதி மாலை 5.30 மணியிலிருந்து எம்.எல்.ஏ-க்கள் ரிசார்ட்டுக்கு வர ஆரம்பித்தனர். இவர்களில் வெற்றிவேல் தவிர மற்ற அனைவரும் இங்கு வந்துவிட்டனர். “தமிழகத்தில் எங்களுக்குப் பாதுகாப்பில்லை. எதிரணியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களும் எங்கள் பக்கம் வருவார்கள்” என்று அவர்கள் அமர்த்தலாகப் பேட்டியளித்தனர்.

இந்த எம்.எல்.ஏ-க்களைத் தங்க வைக்க, புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான பொம்மையார்பாளையத்தில் உள்ள தினகரனுக்குச் சொந்தமான சொகுசு பங்களாதான் முதலில் தேர்வுசெய்யப்பட்டது. ஆனால், தமிழகப் பகுதியில் தங்க வைத்தால், ஆட்சி அதிகாரத்தை வைத்து அவர்களை எளிதாக டார்கெட் செய்துவிடலாம் என்ற அச்சத்தில்தான் புதுச்சேரியைத் தேர்வுசெய்துள்ளனர். ‘‘தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் ஒரே ராஜ்யசபா எம்.பி புதுச்சேரி கோகுலகிருஷ்ணன்தான். பெயருக்கு அவர் அ.தி.மு.க-வின் எம்.பி-யாக இருந்தாலும், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியின் தீவிர விசுவாசி. தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோகுலகிருஷ்ணன்தான் கவனித்தார். புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்குத் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை மத்திய பி.ஜே.பி அரசு கொடுத்து வருவதால், கொந்தளிப்பில் இருக்கிறார் முதல்வர் நாராயணசாமி. அதனால் மறைமுகமாகவும் தினகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததோடு, பலத்த போலீஸ் பாதுகாப்பையும் அவர்களுக்கு அளித்திருக்கிறார். இதன்மூலம், புதுச்சேரியின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டுமே தினகரனுக்குத்தான் ஆதரவாக உள்ளன” என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஒரு எஸ்.பி தலைமையில் கடுமையான பாதுகாப்பு ரிசார்ட்டுக்கு போடப்பட்டுள்ளது. வெளிநபர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. உள்ளே
எம்.எல்.ஏ-க்கள் தவிர வேறு நபர்களுக்கு அறைகள் புக்கிங் மறுக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூவத்தூர்... ஓவர் To புதுச்சேரி!

ரிசார்ட்டுக்கு வந்த அன்று இரவு, “இங்கு பார் வசதி இல்லையா?’’ என்று சில எம்.எல்.ஏ-க்கள் கேட்டுள்ளனர். “பார் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை” என்று பதில் சொல்லிவிட்டு, வெரைட்டி வெரைட்டியாக புதுச்சேரி மதுபானங்களைக் கொண்டுவந்து அடுக்கியிருக்கிறார்கள் உள்ளூர் கட்சி நிர்வாகிகள். பின்னர் விடிய விடிய ‘மீட்டிங்’ போட்டு தீவிரமாக ‘விவாதம்’ செய்தார்களாம். ரிசார்ட்டில் இருக்கும் ஸ்பா செயல்படாததால், புத்துணர்வு சிகிச்சை செய்துகொள்ள முடியாமல் எம்.எல்.ஏ-க்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

இங்கிருக்கும் எம்.எல்.ஏ-க்களுடன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் மூலமாக எடப்பாடி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. போனில் பேசிய அவர், நேரில் வரவும் தயாராக இருந்தார். ஆனால், ‘‘வந்தால் உங்களை உள்ளே விடமாட்டார்கள். வீண்முயற்சி வேண்டாம்’’ என தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் சொல்லிவிட்டார்கள்.

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், காங்கிரஸ் ஆட்சி செய்த கர்நாடகாவில் போய் தங்கியது போல தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் ஆளும் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்திருப்பது வரலாற்று ஒற்றுமை!

- ஜெ.முருகன், படங்கள்: அ.குரூஸ்தனம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism