Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

தீ.அசோகன், திருவொற்றியூர்.

‘ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்’ என்று சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சொல்லியிருக்கிறாரே?


ஊழலுக்கு எதிரான போராட்டமும், கறுப்புப் பணத்துக்கு எதிரான போராட்டமும், அவை முற்றிலும் ஒழிக்கப்படும் வரை தொடர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், சில கேள்விகள் எழுகின்றன. ஊழல் பணம் இல்லாமல் அரசியல் கட்சிகள் இயங்க முடியாத நிலை உள்ளது. தேர்தல்களில் புழங்குவது ஊழல் மூலம் சேர்க்கும் பணமும், ஆதாயத்தை நாடி தொழிபதிபர்கள் தரும் கறுப்புப் பணமும்தான். இவற்றையெல்லாம் எப்படித் தடுக்கப்போகிறார்கள்?

கழுகார் பதில்கள்!

நரேந்திர மோடி பேசிய அதே நாளில்தான், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் பல்லாயிரம் கோடி நன்கொடை பெற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நன்கொடைகள் நாட்டின் நன்மைக்காகத் தரப்படுகின்றனவா? அந்த நிறுவனங்களின் ஆதாயத்துக்காகத் தரப்படுகின்றனவா? நன்கொடை பெற்றவர்கள், நன்கொடை தந்தவர்களுக்கு ஆதரவாகத்தானே செயல்படுவார்கள்? அப்படியானால் ஊழலை எப்படி ஒழிப்பது? லஞ்சம் என்பது, ‘நன்கொடை’ என்ற பெயரால் சட்டபூர்வமானதாக ஆக்கப்படுவதை எப்படித் தடுக்கப் போகிறார்கள்?

சம்பத் குமாரி, பொன்மலை.

‘‘திருக்கோயில்களை அழிப்பது தமிழர்களின் வரலாற்றை அழிப்பதற்கு ஒப்பாகும்’’ என்று பேசியிருக்கிறாரே கருணாநிதியின் மகன்?


மீனாட்சியம்மன் கோயிலின் கலை அழகைச் சிதைத்து பராமரிப்புப் பணிகளைச் செய்வதை யுனெஸ்கோ அமைப்பு கண்டித்தது. இதுதொடர்பான அறிக்கையில், ஸ்டாலின் இப்படிச் சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. நாத்திகம் என்பது வேறு, கோயில் சொத்துக்களையும் கலைப் பொக்கிஷங்களையும் பராமரிப்பது என்பது வேறு. மேலும், தி.மு.க என்பது நாத்திகக் கட்சி அல்ல. அவர்கள் அப்படிச் சொல்லிக்கொள்ளவில்லை. ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்பதுதான் அவர்களது கொள்கை. எனவே, ஸ்டாலின் சொன்னதில் தவறு இல்லை. ஸ்டாலின் இதைக் கண்டிக்காமல் இருந்தால்தான் தவறு. எல்லோருக்குமே தவறுகளைச் சுட்டிக் காட்டவும், தடுக்கவும் வேண்டிய பொறுப்பு உள்ளது. நாத்திகவாதியாக இருந்தும் குரல் கொடுப்பவரைப் பாராட்ட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி

கமல்ஹாசனுக்கு இந்த அரசியல் சர்ச்சைகள் எல்லாம் தேவைதானா?

வாக்களிக்கும் இந்தியக் குடிமகன் அவர். கருத்துச் சொல்லும் உரிமை அவருக்கு உண்டுதானே? அவர் சொல்வது புரியலாம், புரியாமல் போகலாம், விமர்சிக்கலாம், ஏற்கலாம், மறுக்கலாம். ஆனால், கருத்துச் சொல்லும் உரிமை அவருக்கு உண்டு.

எஸ்.ஐ.சத்தியமூர்த்தி, கரூர்.

‘நாடு நாசமாய்ப் போனால் நமக்கு என்ன, நாம் நன்றாக இருந்தால் போதும்’ என்று தமிழக எம்.எல்.ஏ-க்கள் நினைப்பது போல் இருக்கிறதே?

உண்மைதான். அடுத்து ஓட்டுக் கேட்டு வரும்போதுதானே அவர்கள் கவலைப்பட வேண்டும்? அதுவரை ஜாலிதானே!

அரிமா பூவேந்தரசு, சின்ன தாராபுரம்.


தமிழ்நாட்டில் யாரோ கொஞ்சம் பேர் அவமானப்படுத்திப் பேசுவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன குறை வந்துவிடப்போகிறது?


மான, அவமானம் பற்றிக் கவலைப்படுபவர்களுக்குத்தானே இந்தப் பிரச்னை எல்லாம்.

கழுகார் பதில்கள்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

அ.தி.மு.க அணித் தலைவர்களைச் சந்திப்பதில் பிரதமர் மோடிக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

இது வெறும் ஆர்வம் மட்டுமல்ல... ஆதாயம். தமிழிசையையும் பொன்னாரையும் சந்திப்பதால் என்ன ஆகப்போகிறது? இவர்களுக்குப் பின்னால் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார் களா? எம்.பி-க்கள் இருக்கிறார்களா? இல்லை. எடப்பாடிக்கும் பன்னீருக்கும் பின்னால் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். அதனால்தான் பிரதமர் ஆதாய ஆர்வத்துடன் பார்க்கிறார், சிரிக்கிறார், பேசுகிறார்.

பாரதிமுருகன், மணலூர் பேட்டை.

‘‘என் காலில் டி.டி.வி.தினகரன் விழுந்தார். அந்தப் படத்தை அவர் வெளியிடுவாரா?’’ என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேட்கிறாரே?


காலில் விழுவது எல்லாம் அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை அதிசயச் செய்தி அல்ல. யாராவது யார் காலிலாவது அ.தி.மு.க-வில் விழுந்ததில்லை என்று நிரூபித்தால்தான் அது செய்தி.

சசிகலா காலில் திண்டுக்கல் சீனிவாசன் விழுவதோ, திண்டுக்கல் சீனிவாசன் காலில் தினகரன் விழுவதோ பழக்கதோஷம் எனலாம், பரிகாரம் எனலாம். விவாதப்பொருள் அல்ல.

சசிகலா காலில் பன்னீர்செல்வம் விழுந்தபோது, அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். இது, அந்தப் பதவிக்கு அழகல்ல என்பதால் கண்டித்தாக வேண்டியிருந்தது.

எஸ்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.


ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ ஆதாரங்கள் இருப்பதாக சசிகலா குடும்பத்தினரே சொல்ல ஆரம்பித்துள்ளார்களே?


வீடியோ எடுக்கவில்லை, போட்டோ எடுக்கவில்லை, அம்மா அதை விரும்பவில்லை என்று இவர்கள்தான் இதுவரை சொல்லிவந்தார்கள். இப்போது ஆதாரம் இருப்பதாகச் சொல்கிறார்கள். எது உண்மை, எது பொய்? மொத்தத்தில் ஒரு நாடகம்தான் பார்க்கிறோம்.

மு.வசந்தன், பொள்ளாச்சி.

பகத்சிங் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது?


 மக்கள் ஒரு முறை விழித்து எழுந்து விட்டால், அவர்களை மறுபடியும் தூங்க வைக்க முடியாது.

யாருக்கு உன் பரிவு அதிகம் தேவைப் படுகிறதோ, அவர்களுக்கு உன் பரிவைக் காட்டு.

மாபெரும் சாம்ராஜ்யங்கள் பல, தூள் தூளாக்கப்பட்டு விட்டன. ஆனால், கருத்துகள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

கழுகார் பதில்கள்!

தமிழ்மொழி என்ற பெருமித உணர்வு இல்லாமல், ‘ஆங்கிலம் கலந்து பேசுவதே பெருமை’ என்றிருக்கும் தமிழர்களின் மனநிலை எப்போது மாறும்?

இந்த மனநிலை மாறுமா என்றே தெரியவில்லை. இந்தக் கேள்வியைப் படித்ததும் உங்கள் கவிதைதான் நினைவுக்கு வந்தது.

‘அன்னையைத் தமிழ் வாயால்
மம்மி என்று அழைத்தாய்.
அழகு குழந்தையை
பேபி என்று அழைத்தாய்
அன்பு தந்தையை
டாடி என்று அழைத்தாய்
இன்னுயிர் தமிழை
கொன்று தொலைத்தாய்’

என்று எழுதினீர்கள்.

அப்படித்தான் தமிழின் நிலைமை மாறிவிட்டது. ‘ஆங்கிலம் கலந்து பேசுவது பெருமை’ என்று பல ஆண்டுகளுக்கு முன், வேண்டுமென்றே ஆங்கிலம் கலந்து பேசினார்கள். ஆனால், இப்போதைய நிலைமை வேதனை. தமிழில் எந்த சொல்லைப் பயன்படுத்துவது எனத் தெரியவில்லை. ‘இதைத் தமிழில் எப்படி சொல்றதுன்னு தெரியல’ என்று சொல்லிவிட்டு ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தமிழில் தொடர்ந்து படித்து, சிந்தித்தால் மட்டும்தான் மொழிக்கலப்பு இல்லாமல் பேச முடியும். தமிழ் ஆர்வலர்களுக்குக்கூட பேச்சில் ஆங்கிலச் சொற்கள் வந்துவிடுகின்றன. எனவே, புதிது புதிதாகப் படிப்பதன் மூலம் புதிய புதிய சொற்களை அறிவதும், பயன்படுத்துவதுமே மொழிக்கலப்பைத் தடுக்கும். ‘பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவது தவறு’ என்ற நினைப்பு முதலில் வேண்டும்.

சோற்றில் கல் கிடப்பது போன்றது இது. சிலர் பேசுவதைக் கவனித்தால், கல்லில் கொஞ்சம் பருக்கைகள்தான் இருக்கின்றன.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism