Published:Updated:

13 வகையான சத்துணவு: ஜெ. உத்தரவுக்கு சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு!

13 வகையான சத்துணவு: ஜெ. உத்தரவுக்கு சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு!
13 வகையான சத்துணவு: ஜெ. உத்தரவுக்கு சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு!
13 வகையான சத்துணவு: ஜெ. உத்தரவுக்கு சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு!

திருப்பூர்: மாணவர்களுக்கு 13 வகையான சத்துணவுகளை வழங்க வேண்டும் என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதியன்று முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

திருப்பூரில் உள்ள  காந்திநகர் முத்தண்ணச் செட்டியார் மஹாலில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்து 32 மாவட்டங்களைச் சேர்ந்த சத்துணவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஏற்படும் நிர்வாக ரீதியான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 70 காசுகளும் ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 80 காசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மாணவர்களுக்கு 13 வகையான சத்துணவுகளை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

##~~##
இதே ஒதுக்கீட்டுத்தொகையில் இதனை வழங்கமுடியாது. இதனை வலியுறுத்தி, சென்னையில் உள்ள சத்துணவு இயக்குநரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை வருகிற ஏப்ரல் 5&ந்தேதி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.    
-ஜி.பழனிசாமி.