Published:Updated:

பிரதமர் பதவிக்கு கட்சிக்குள் போட்டியில்லை: அத்வானி

பிரதமர் பதவிக்கு கட்சிக்குள்  போட்டியில்லை: அத்வானி
பிரதமர் பதவிக்கு கட்சிக்குள் போட்டியில்லை: அத்வானி
பிரதமர் பதவிக்கு கட்சிக்குள்  போட்டியில்லை: அத்வானி

புதுடெல்லி: பிரதமர் பதவி்க்கு பா.ஜனதா கட்சிக்குள் எந்தவிதமான போட்டியும் இல்லை என்று அக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

குஜராத் தலைநகர் காந்தி நகரில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில் இதனை தெரிவித்த அத்வானி, நாடாளுமன்றத்துக்கு இந்த ஆண்டிலேயே தேர்தல் வரக்கூடும் என்றார்.

##~~##
5 மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜனதா சார்பில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படலாம் என்று கூறப்படும் நிலையில் அத்வானியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.