Published:Updated:

பெனி பிரசாத் அமைச்சரவையிலிருந்து நீக்கம்?

பெனி பிரசாத்  அமைச்சரவையிலிருந்து நீக்கம்?
பெனி பிரசாத் அமைச்சரவையிலிருந்து நீக்கம்?
பெனி பிரசாத்  அமைச்சரவையிலிருந்து நீக்கம்?

புதுடெல்லி: முலாயம் கட்சியை தாக்கிப் பேசிய பெனி பிரசாத் வர்மா அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிய நிலையில், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முலாயம் மற்றும் மாயாவதி கட்சிகளின் ஆதரவையே காங்கிரஸ் பெரிதும் நம்பி உள்ளது.

இந்நிலையில் முலாயம் சிங் யாதவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது என்று பெனி பிரசாத் வர்மா அண்மையில் பேசியது முலாயமை கொந்தளிக்க வைத்தது.இதனால் ஆதரவை வாபஸ் பெறபபோவதாக அவர் மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவின்பேரில், பெனி பிரசாத் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், மத்திய அரசுக்கான ஆதரவை தமது கட்சி வாபஸ் பெறாது என்றும், அதே சமயம் வருகிற அக்டோபரில் நாடாளுமன்ற தேர்தல் வரும் என்றும் முலாயம் சிங் யாதவ் நேற்று கூறியிருந்தார்.

##~~##
இதற்கு பதிலடியாக அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் இறுதி ஊர்வலம் தொடங்கிவிடும் என்று கூறி மீண்டும் முலாயமை சீண்டியுள்ளார் பெனி பிரசாத்.
உத்தருலா என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் அனைத்திலுமே காங்கிரஸ் போட்டியிடும். நிச்சயமாக 40 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும். மேலும் பிஎஸ்பி 36 இடங்களைக் கைப்பற்றும். 4 இடங்களை மட்டுமே சமாஜ்வாதி கட்சி கைப்பற்றும்" என்று கூறியிருந்தார்.
பெனி பிரசாத்தின் இந்த பேச்சு இரு கட்சிகதெரிவித்துள்ளன. ளுக்கும் இடையே மீண்டும் மோதலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக, அக்கட்சியை சமாதானப்படுத்தும்விதமாக பெனி பிரசாத் வர்மா அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார் சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி,மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் சேர பெனி பிரசாத் வர்மா விரும்புவதாகவும், அதனாலேயே அவர் காங்கிரஸ் மேலிடம் தம் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு பேசி வருவதாகவும் சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.