Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

கணபதி ரவி, மடிப்பாக்கம்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கூட்டங்களில் இப்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றி மட்டுமே பேசப்படுகிறதே?


இவர்கள் எம்.ஜி.ஆர் மீதான பற்று, பாசத்தில் நூற்றாண்டு விழா நடத்தினால்தானே அவரைப் பற்றிப் பேசுவார்கள். எடப்பாடி நடத்தினார். பன்னீர் நடத்தினார். மேலூரில் தினகரன் நடத்தியதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாதான். இவர்கள் மூவரும் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத்தான் இதை நடத்துகிறார்கள். ஜெயலலிதா இருந்தவரை எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிக்கப் பயந்தவர்கள் இவர்கள் என்பது ஊருக்கே தெரியும். ‘ஜெயலலிதா இருந்திருந்தால் இந்தளவுக்குக்கூட எம்.ஜி.ஆர் பெயர் உச்சரிக்கப்பட்டிருக்காது’ என்பதும் உண்மைதான். இப்படியாவது எம்.ஜி.ஆர் நினைக்கப்படுகிறார் என்று பாராட்ட வேண்டியதுதான்!

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வண்ணை கணேசன், சென்னை-110.

‘வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்’ என்று மம்தா பானர்ஜி சொல்லியிருக்கிறாரே?


அப்படி மாற்றம் ஏற்படுமா என்பது சந்தேகம்தான். இந்தியாவில் காங்கிரஸ் உள்பட எந்த எதிர்க்கட்சியும் ஆக்டிவ்வான எதிர்ப்பு அரசியலை இன்னமும் தொடங்கவில்லை. இவர்கள் அனைவரும் ஒரே கூட்டணிக்குள் வருவார்களா என்றும் தெரியவில்லை. இப்போதே, ‘காங்கிரஸ் அங்கம் வகிக்கும் எந்த ஆட்சியிலும் நாங்கள் அங்கம் வகிக்க மாட்டோம்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்ல ஆரம்பித்து விட்டது. இந்தக் கூட்டணி, பிரதமர் வேட்பாளரை அறிவிக்குமா என்றும் தெரியவில்லை. துணை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஒரே ஒரு கூட்டத்தை சோனியா நடத்தியுள்ளார். அதில் 16 கட்சிகள் கலந்துகொண்டன. அதிலும் உற்சாகமான எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. பிறகு எப்படி மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்?!

கழுகார் பதில்கள்!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

சசிகலா வெளியே வர வாய்ப்பு உள்ளதா?


வாய்ப்பு இருக்கிறது, மூன்றரை ஆண்டுகள் கழித்து!

அரிமா பூவேந்தரசு, சின்ன தாராபுரம்.


ஓர் அரசு தவறு செய்யும்போது, மக்கள் அந்த ஆட்சியை மாற்றுகிறார்கள். பதவிக்கு வரும் மாற்று அரசும், முந்தைய ஆட்சி காலத் தவறையே திரும்பச் செய்துவிட்டு, ‘இது முந்தைய அரசின் கொள்கை முடிவுதானே தவிர வேறல்ல, நாங்கள் புதிதாக எதுவும் செய்யவில்லை’ என்று கூறுவது எப்படி இருக்கிறது?


இரண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை இது உணர்த்துகிறது. இருவேறு கட்சிகளுக்கு ஓட்டுப் போடுகிறோமே தவிர, இரண்டு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் மாறுபாடும் இல்லை. இதுதான் இந்தியாவின் தலையெழுத்து. இங்கு தேர்தல் என்பது நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்குமான போட்டியாக இல்லாமல், மோசமான இருவருக்கு இடையிலான போட்டியாக இருக்கிறது. நாமும் ஒருவர் மீதான கோபத்தில் இன்னொருவருக்கு வாக்களிக்கிறோமே தவிர, அவர் மீதான நம்பிக்கையினால் அல்ல. இந்தச் சடுகுடு ஆட்டத்தால் சமூகத்துக்கு எந்தப் பயனுமில்லை.

அரசி சண்முகசுந்தரம், புதுவண்ணை.

ரஜினியின் மனைவி நடத்தும் பள்ளியின் வாடகை மற்றும் இடப் பிரச்னையால் மாணவர்கள் அவதிப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. ரஜினி தனக்குச் சொந்தமான இடத்தில் கல்விக் கட்டணம் பெறாமல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் என்ன?


கழுகார் பதில்கள்!

நல்ல ஆலோசனை. இதை முதலில் ரஜினி செய்யலாம். இந்தக் கேள்வியை வாசிக்கும்போது பழைய விஷயம் ஒன்று நினைவுக்கு வருகிறது. தன் மகள் திருமணத்தின்போது, ‘ரசிகர்கள் யாரும் வர வேண்டாம். இடநெருக்கடி ஏற்படும். அவர்களுக்காக ஒரு நாளை ஒதுக்குவேன். அன்று அனைவருக்கும் கல்யாணச் சாப்பாடு போடுவேன்’ என்று அறிவித்தார். முதலில் அந்தக் கல்யாணச் சாப்பாட்டையாவது போடலாமே?!

சம்பத்குமாரி, பொன்மலை.

‘மு.க.ஸ்டாலின் முதல்வராவதை அவருடைய தந்தையே விரும்பாதபோது வாக்காளர்கள் எப்படி விரும்புவார்கள்?’ என்று கிண்டலடித்துள்ளாரே தமிழருவி மணியன்?


‘ரஜினி தமிழ்நாட்டு முதல்வர்’ என்று தமிழருவி மணியன் சொன்னால், தமிழ்நாடே சொன்னதாக அர்த்தமாகி விடுமா?

கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

‘ராகுலுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் தெரியாது, தேச வரலாறும் தெரியாது’ என்கிறாரே, ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா?


இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பங்களிப்பு பற்றியும், 1925 முதல் 1947-ம் ஆண்டு வரையிலான காலவரிசைப் படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் வெளியிட வேண்டும். அந்த இயக்கத்தின் மீதான களங்கமாகக் குற்றம் சாட்டப்படும் காந்தி கொலை வழக்கின் விவகாரங்கள் பற்றியும் வெளிப்படையாக அந்த அமைப்பு விவாதங்களைத் தொடங்க வேண்டும். இதை ராகுலும் தெரிந்துகொள்வார். நாட்டு மக்களும் தெரிந்துகொள்வார்கள்.

எம்.ஃபாரூக், திருச்சி-8.

பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவும் தமிழகத்துக்கு நிரந்தர கவர்னரை நியமிக்காமல், மகாராஷ்டிர கவர்னரையே நம் மாநிலத்தையும் சேர்த்துப் பார்த்துக்கொள்ளச் சொல்லும் அவசியம் என்ன? மும்பைக்கும் சென்னைக்கும் பறப்பதிலேயே அவருக்கு நேரம் செலவாகி விடுகிறது. நிர்வாகம் எங்கே நடக்கும்?


நிரந்தரமாக ஒருவர் இருந்து இங்குள்ள குழப்பங்கள் விரைவில் தீர்ந்துவிடக் கூடாது என்ற நினைப்புகூட காரணமாக இருக்கலாம். அல்லது, ‘இந்த மாநிலத்துக்கெல்லாம் நிரந்தரமாக ஒரு கவர்னர் எதற்கு?’ என்பதும் காரணமாக இருக்கலாம்.

எதுவாக இருந்தாலும், இது தமிழக மக்களுக்குச் செய்யப்படும் அவமரியாதை.

எஸ்.கிருஷ்ணராஜ், அதிகாரட்டி.

தமிழ்நாட்டு அரசியல் எங்கே போகிறது?

மீளமுடியாத பள்ளத்தை நோக்கி!

கழுகார் பதில்கள்!

அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து, ‘அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா’ என்ற பெயரில் தனி அணி அமைத்த ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் சென்ற 11 எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்கும் நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் எடுக்காதது ஏன்? இதன் பின்னணியில் இருந்தவர் யார்?

எந்தவொரு கட்சியின் எம்.எல்.ஏ-க்களிலிருந்தும் மூன்றில் ஒரு பகுதியினர் பிரிந்தால் மட்டும்தான், பிரிந்தவர்களின் எம்.எல்.ஏ பதவி தப்பிக்கும். 134 உறுப்பினர்கள் கொண்ட அ.தி.மு.க-வில் இருந்து 11 உறுப்பினர்களைப் பிரித்துச்சென்றார் பன்னீர்செல்வம். ‘யார் உண்மையான அ.தி.மு.க’ என்று தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடக்கிறது.

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சிக் கொறடா உத்தரவை மீறி எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள் பன்னீர்செல்வம் அணியினர். அப்போதே அவர்களின் பதவியைப் பறிக்க எடப்பாடி அணியினர் முயற்சி செய்திருக்க வேண்டும். இப்போது தினகரன் பக்கம்போன 19 பேருக்கு கொறடா புகார் செய்து நோட்டீஸ் அனுப்பியது போல, அப்போதும் செய்திருக்க வேண்டும். அது உண்மையான அரசியல் மோதலாக இருந்தால் எடப்பாடி அணியினர் இப்படிச் செய்திருப்பார்கள். ஆனால், ‘சில மாதங்களில் நம்மோடு பன்னீர் சேர்ந்துவிடுவார்’ என்று எடப்பாடிக்குத் தெரிந்துள்ளது. அதனால் அவர் புகார் அளிக்கவில்லை. இதைக் கண்காணிக்க வேண்டிய சட்டசபை செயலாளரும் அமைதியாக இருந்தார். தமிழ்நாட்டைக் கவனிக்க நேரம் இல்லாமல் பல்வேறு பணிகளில் இருக்கிறார் கவர்னர். இந்த நிலையில் சட்டம், நியாய தர்மங்கள் பற்றி யார் கவலைப்படுவது?

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்,  ப.சரவணகுமார்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!