Published:Updated:

“ஜெயலலிதா இறந்தபோது 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்கள்!"

“ஜெயலலிதா இறந்தபோது 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்கள்!"
பிரீமியம் ஸ்டோரி
“ஜெயலலிதா இறந்தபோது 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்கள்!"

சீக்ரெட் சொல்கிறார் எம்.பி. நாகராஜன்

“ஜெயலலிதா இறந்தபோது 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்கள்!"

சீக்ரெட் சொல்கிறார் எம்.பி. நாகராஜன்

Published:Updated:
“ஜெயலலிதா இறந்தபோது 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்கள்!"
பிரீமியம் ஸ்டோரி
“ஜெயலலிதா இறந்தபோது 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்கள்!"

ஜெயலலிதா இருக்கும்போது, ‘இவர்களுக்கெல்லாம் பேச்சு வருமா?’ என்று சந்தேகப்படும்படி இருந்த பலரும் தினம்தோறும் கொடுக்கிற அதிரடி பேட்டிகளால் அ.தி.மு.க மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழகமும் திணறுகிறது. இந்நிலையில், ‘‘நான் உண்மைகளை வெளியிட்டால் ஆட்சிக்கு நெருக்கடி உருவாகும். என் உயிருக்கேகூட ஆபத்து ஏற்படும். அந்த அளவுக்கு உண்மைகள் என்னிடம் புதைந்துள்ளன’’ என அதிர வைத்திருக்கிறார் கோவை எம்.பி. நாகராஜன். உயிருக்கே ஆபத்து வரும் அளவுக்கு என்ன ரகசியத்தை வைத்திருக்கிறார் அவர்? கோவை கோவில்பாளையத்தில் உள்ள நாகராஜனின் வீட்டுக்குச் சென்றோம். எம்.பி என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் தன் தோட்டத்தில் மண்வெட்டியும் கையுமாக உழவுப்  பணிகளைச் செய்துகொண்டிருந்த நாகராஜனிடம் பேசினோம்.

“ஜெயலலிதா இறந்தபோது 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்கள்!"

‘‘அம்மா இமேஜ் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, தன்மீது விழுந்த பழியை ஏற்றுக்கொண்டவர் சசிகலா. அம்மாவின் மரணம் இயற்கையானதுதான் என்பதற்கான எல்லா ஆதாரமும் இருக்கின்றன. வீடியோவும், போட்டோவும் இருக்கின்றன. அதையெல்லாம் வெளியிடுங்கள் என்று நாங்கள் சொன்னபோது, ‘அக்காவை அலங்கோலமாகக் காட்டித்தான் என்மேல் விழுந்த பழியைத் துடைக்க வேண்டுமென்றால், அது எனக்குத் தேவையே இல்லை’ என்றார். அப்போதுதான், சசிகலாவின் பெருந்தன்மையை முழுமையாக உணர்ந்தேன். அம்மாவுக்காகப் பல தியாகங்களைச் செய்தவர் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கு வழக்கறிஞர் குழுவில் நானும் ஒருவன் என்பதால் சிறையில் சசிகலாவைச் சந்தித்த போதுகூட தனிப்பட்ட முறையில் சொல்லிப்பார்த்தேன். ஆனால், ‘அவற்றை வெளியிடவே வேண்டாம்’ என்று மறுத்துவிட்டார் சசிகலா. அம்மா நலமுடன் திரும்பிவருவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்திருந்தோம். போயஸ் கார்டன் வீட்டின் மேலே அம்மா வாக்கிங் போவதற்கு ஏற்றவாறு ரூஃப் போடப்பட்டது. லிஃப்ட் வசதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அனைத்தும் அம்மா திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் அவருக்காகச் செய்யப்பட்ட வசதிகள். எல்லாம் தெரிந்தவர்கள்தான் இன்றைக்கு முதுகில் குத்துகிறார்கள்’’ என்றார் கோபமாக.

‘‘இதுதான் நீங்கள் வெளியிடுவேன் என்று சொன்ன உண்மையா?’’

‘‘எல்லோரும் இணைய வேண்டும் என்று விரும்புகிறவன் நான். அதனால், எல்லோருடைய தகிடுதத்தங்களையும் சொல்லி மேலும் பகையை வளர்க்க விரும்பவில்லை. அம்மா மறைந்தபோது திவாகரனையும், தினகரனையும் எத்தனை அமைச்சர்கள் தொடர்புகொண்டு, ‘என்னை முதலமைச்சர் ஆக்குங்கள்’ என்று கெஞ்சினார்கள் என்பது எல்லாம் எனக்குத் தெரியும். மொத்தம் 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்கள். அதில் கொங்கு மண்டலத்தில் இருந்தவர்களே அதிகம். 28 பேர் பொதுச்செயலாளர் பதவியை அடைய நினைத்தார்கள். அவர்கள் பெயர்களையும் அவர்கள் நடத்திய பதவி பேரங்களையும் வெளியிட்டால் அவர்களுக்குள்ளேயே சண்டைகள் நடக்கும். பிரச்னை மேலும் தீவிரமாகும். என் நோக்கம் அதுவல்ல.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஜெயலலிதா இறந்தபோது 10 பேர் முதலமைச்சராகத் துடித்தார்கள்!"

‘‘ஜெயலலிதாவாலேயே  இரண்டு முறை கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்தானே சசிகலா?’’

‘‘எதிர்க்கட்சிகள் பொய் வழக்குப் போட்டு அம்மாவையும் அ.தி.மு.க-வையும் அழிக்க நினைத்தார்கள். அதைச் சமாளிப்பதற்காகத்தான் சசிகலா வெளியேற்றப்பட்டார். ஆனால், அப்போது இளவரசி, விவேக் போயஸ் கார்டன் வீட்டில்தான் இருந்தார்கள். அ.தி.மு.க-வின் ஓனர் மட்டும்தான் அம்மா. மேனேஜிங் டைரக்டர் சசிகலாதான். தேர்தல் கூட்டணி பொறுப்பைக்கூட சசிகலாவிடம்தான் கொடுத்திருந்தார் அம்மா. அ.தி.மு.க-விடம் கூட்டணி வைத்த கட்சிகளிடம் விசாரித்தால் இந்த உண்மை தெரியும்.

அம்மா எப்படி வேட்பாளர்களைத் தேர்வு செய்வார் என்பது எல்லோருக்கும் தெரியும். உளவுத்துறை ரிப்போர்ட்டும் ஜாதகமும் சரியாக இருந்தால் அ.தி.மு.க-வில் வேட்பாளராகிவிடலாம். திறமை என்பதற்கெல்லாம் இடமே இல்லை. அப்போது செய்த தவறுக்கு இப்போது தண்டனை கிடைத்திருக்கிறது. அம்மா அடிக்கடி தன் துரோகிகளை ‘பாஸிஸ்ட்கள்’ என்ற வார்த்தையில் குறிப்பிடுவார். இப்போதுதான் தெரிகிறது,  அ.தி.மு.க-வுக்குள்ளேயே எவ்வளவு பாஸிஸ்ட்டுகள் இருந்திருக்கிறார்கள் என்று.’’

‘‘சிறையிலிருந்து ஷாப்பிங் போவது போன்ற வீடியோக்கள் வெளிவருகின்றனவே... இது என்ன வகையான தியாகம்?’’

‘‘இந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் அப்படியே போட வேண்டும். அப்போதுதான் இது முழுமையான பேட்டியாக இருக்கும். அந்த வீடியோக்கள் எல்லாம் எப்போது வெளியிடப்படுகின்றன? ஏன் இன்றைக்கு எந்த வீடியோவும் வெளிவரவில்லை? அதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். எப்போதெல்லாம் சசிகலாவின் மறுசீராய்வு மனு விசாரணைக்கு வரும் சூழல் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம்தான் இந்த மாதிரியான வீடியோக்கள் வெளியிடப்பட்டன. அவை சிறையிலிருந்து வெளியேறுவது போன்ற காட்சிகள் இல்லை. சிறைக்குள் வரும் காட்சிகள்தான். இவை, சிறை சென்ற புதிதில் பதிவான காட்சிகளாகக் கூட இருக்கலாம். இந்த வீடியோ விவகாரத்தில் ஒரு சக்தி மறைமுகமாகச் செயல்படுகிறது. அந்த சக்திதான், அ.தி.மு.க-வில் நடக்கும் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம்.’’

- எம்.புண்ணியமூர்த்தி, படம்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism