Published:Updated:

‘‘எடப்பாடி அரசு நீடிக்காது..!’’

‘‘எடப்பாடி அரசு நீடிக்காது..!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘எடப்பாடி அரசு நீடிக்காது..!’’

நயினார் நாகேந்திரன் ஆரூடம்

‘‘எடப்பாடி அரசு நீடிக்காது..!’’

நயினார் நாகேந்திரன் ஆரூடம்

Published:Updated:
‘‘எடப்பாடி அரசு நீடிக்காது..!’’
பிரீமியம் ஸ்டோரி
‘‘எடப்பாடி அரசு நீடிக்காது..!’’

.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், திடீரென பி.ஜே.பி-யில் இணைந்திருக்கிறார். சசிகலாவால் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டபோதிலும், கட்சியிலிருந்து ஒதுங்கியே இருந்த நயினார் நாகேந்திரன், ஆகஸ்ட் 26-ம் தேதி அமித் ஷா முன்னிலையில் பி.ஜே.பி-யில் சேர்ந்தார். அவரிடம் பேசினோம்.

‘‘எடப்பாடி அரசு நீடிக்காது..!’’

“திராவிட கட்சியில் வளர்ந்த வந்த நீங்கள், திராவிட அரசியலை வெறுக்கும் பி.ஜே.பி-யில் சேர்ந்தது ஏன்?”

“நான், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அம்மாவால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவன்.

எம்.எல்.ஏ., அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை ஜெயலலிதா கொடுத்ததன் மூலமாகவே தமிழகம் முழுவதும் அறியப்பட்டேன். தலைவரும் அம்மாவும் இல்லாத கட்சியில் இருக்கப் பிடிக்கவில்லை. எனவே, பி.ஜே.பி-யில் இணைந்தேன்.”

“உங்களுக்கு நெருக்கமான நண்பர்களில் பலர் கிறிஸ்துவ, இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள். நீங்கள் பி.ஜே.பி-யில் சேர்ந்ததற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்?”

“அவர்களில் ஒரு சிலருக்கு வருத்தம் இருந் தாலும்கூட, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எனது முடிவைப் பாராட்டுகிறார்கள். ‘நீங்க அரசியலில் நல்லா வரணும்னு பிரார்த்தனை செய்தேன். அடுத்த நாளே நீங்க பி.ஜே.பி-யில சேர்ந்துட்டீங்க. அது நல்ல முடிவா இருக்கும்’ என செல்லப்பா என்ற கிறிஸ்துவ நண்பர் சொன்னார். ‘நீங்க எந்தக் கட்சியில் இருந்தாலும் எங்களுக்கு நண்பர்தான்’ என்று பிரபல கண் மருத்துவரான லயனல்ராஜ் சொன்னார். இஸ்லாமிய நண்பர்கள் பலரும் தொலைபேசியில் எனக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள்.”

“அ.தி.மு.க-வில் உங்களுக்கு எதிராக யாராவது செயல் பட்டார்களா?”

“யாரைப் பற்றியும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. என்னை வளர்த்த கட்சி. அம்மாவின் கட்சியில் யார் யாரோ எப்படி எப்படியோ நடந்துகொண்டாலும், நான் குறை சொல்லி அசிங்கப்படுத்த விரும்பவில்லை.

அ.தி.மு.க-வில் நடைபெறும் சண்டைகளைப் பார்த்துக் கட்சிக்காரர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளார்கள். கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற இவர்கள் நடத்தும் பேரங்கள், தொண்டர்களை அதிருப்தியடைய வைத்துள்ளன. எடப்பாடி அரசு நீடிக்காது..!”

“பி.ஜே.பி-யில் சேர்வதற்கு நிபந்தனை எதுவும் விதித்தீர்களா?” 

“எந்த எதிர்பார்ப்புமின்றி பி.ஜே.பி-யில் சேர்ந்துள்ளேன். அவர்களும் எனக்கு எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. தமிழகத்தில் பி.ஜே.பி-யை வளர்ப்பதே இனி என் பணியாக இருக்கும்.”

“உண்மையைச் சொல்லுங்கள்... தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு எதிர்காலம் இருக்கிறதா?”

“பி.ஜே.பி அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் செயல்படும் கட்சி என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். அதனால் தமிழகத்தில் பி.ஜே.பி ஆட்சி அமையப்போவது உறுதி.”

- பி.ஆண்டனிராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!