Published:Updated:

எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பொது மக்கள் உண்ணாவிரதம் (படங்கள்)

எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பொது மக்கள் உண்ணாவிரதம் (படங்கள்)
எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பொது மக்கள் உண்ணாவிரதம் (படங்கள்)

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் எம்.எல்.ஏ. நடராஜனை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பொது மக்கள் உண்ணாவிரதம் (படங்கள்)

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றி உள்ள வீரணம்பாளையும், தொட்டியபாளையம், சிவன்மலை, ஆலாம்பாடி என பல கிராமங்களில் தேங்காய் தொழிற்சாலைகள் இருக்கிறது. இதில் காங்கேயம் எம்.எல்.ஏ. என்.எஸ்.நடராஜனுக்கு சொந்தமான பல தேங்காய் தொழிற்சாலை நிறுவனங்களும் இருக்கிறது.
 

எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பொது மக்கள் உண்ணாவிரதம் (படங்கள்)

தமிழ்நாட்டில் வி.வி.டி தேங்காய் எண்ணெய்க்கு அடுத்தப்படியாக என்.எஸ்.என். தேங்காய் எண்ணெய் பாப்புலர் ஆனது. இந்த தேங்காய் நிறுவனங்கள் தேங்காய் எடுத்தப் பிறகு அதனுடைய தேங்காய் தொட்டியை நிலத்தில் ஆழமாக குழிகளை பறித்து 70டன் அளவுக்கு தேங்காய் தொட்டிகளைக் கொட்டி தீ மூட்டி விடுவார்கள்.
 

எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பொது மக்கள் உண்ணாவிரதம் (படங்கள்)

இரண்டு நாட்கள் கழித்து தண்ணீரை ஊற்றி அணைத்து விடுவார்கள். இதிலிருந்து சுத்தமான கார்பன் கிடைக்கிறது. இது வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள்.  ஆனால் சுற்றியுள்ள விளை நிலங்கள் சூடாவதோடு, நிலத்துக்குள் இருக்கும் நுண்ணுயிரிகள் அழிந்து விடுகிறது.  நிலத்தடி நீரும் மாசாகிறது என்று காங்கேயம் சுற்று வட்டார பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் பல முறை முறையிட்டும் கண்டுக் கொள்ளவில்லை.

கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி வீரணம்பாளையம் பகவதிபாளையத்தில் டாஸ்மாக் குடோன் திறப்பு விழாவிற்கு வந்த என்.எஸ்.நடராஜனுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஊராட்சியிலும் கறுப்பு கொடி கட்டினார்கள்.
 

எம்.எல்.ஏ.வுக்கு எதிராக பொது மக்கள் உண்ணாவிரதம் (படங்கள்)

இதனால் கடுப்பான எம்.எல்.ஏ. நடராஜன், 50 பேர் மீது வெளியே வரமுடியாத அளவில் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிட்டார். இதனால் கோபம் அடைந்த  காங்கேயம் சுற்றுவட்டார சுமார் 1500 பொதுமக்கள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

##~~##
எம்.எல்.ஏ. நடராஜனை முதல்வர் கண்டிக்க வேண்டும் என்றும், தேங்காய் தொட்டிகளை நிலத்தில் எரிக்க கூடாது என்றும் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளர்கள்.
வீ.கே.ரமேஷ்