Published:Updated:

சின்னம்மா சிவகாமி தேவி!

சின்னம்மா சிவகாமி தேவி!
பிரீமியம் ஸ்டோரி
சின்னம்மா சிவகாமி தேவி!

நித்திஷ் - ஓவியங்கள்: சுரேஷ்

சின்னம்மா சிவகாமி தேவி!

நித்திஷ் - ஓவியங்கள்: சுரேஷ்

Published:Updated:
சின்னம்மா சிவகாமி தேவி!
பிரீமியம் ஸ்டோரி
சின்னம்மா சிவகாமி தேவி!

‘இந்த உலகமே உன்னைக் கலாய்ச்சாலும், ‘சேர வேணாம் சேர வேணாம்’னு உன் முன்னால நின்னு அலறினாலும், நீயா ஒரு முடிவு எடுத்துட்டா, அதை யாராலேயும் தடுக்கவே முடியாது’ - விக்ரம் வேதாவாக இருந்து இப்போது இணைந்த கைகள் ஆகியிருக்கும் ஓ.பி.எஸ் - எடப்பாடி இருவருக்கும் பொருத்தமான பன்ச் இதுதான். ஒரு மாதத்துக்கு முன்புவரை மாறி மாறி முரட்டுக் குத்துகளால் ஒருவரை ஒருவர் பஞ்சர் ஆக்கியவர்கள் இன்று எம்.ஜி.ஆர். 100 என ஒன்றுசேர்ந்து ஊர்வலம் வருகிறார்கள். இவர்கள் இணைந்ததால், நாட்டுக்கு என்ன நன்மை எனக் கேட்கும் அப்பாவித் தமிழனுக்காக...

சின்னம்மா சிவகாமி தேவி!

*‘வாரிசு அரசியல் கூடாது’ எனக் கம்பீரமாகக் குரல் கொடுத்த ஓ.பி.எஸ்ஸின் தம்பி, மகன்கள், ஒண்ணுவிட்ட தூரத்துச் சொந்தம் அனைவருமே கட்சிப்பதவிகளில் இருந்தவர்கள்தான். அவர்கள் சினிமாவில் நுழையாதது மட்டும்தான் பாக்கி. சீக்கிரமே சினிமாத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி ‘OPS: An untold story’, `EPS : A billion dreams’ போன்ற சுயசரிதைப் படங்களை எடுத்து தியேட்டர்களைச் செல்லமாக மிரட்டித் திரையிடலாம். பதிலுக்கு எதிர்த்தரப்பு ‘சின்னம்மா சிவகாமி தேவி’ என ஃபேன்டஸி படம் எடுக்கக்கூடும். தடை போட்டுக்கலாம் பாஸ்!

* பூகம்பமே வந்தாலும் வெண்பொங்கல் சாப்பிட்ட மாதிரி ஜென் நிலையில் இருக்கும் ஜெயா டி.வி-யே இவர்களைத் திட்டத் தொடங்கிவிட்டது. மறுபக்கம் கருணாநிதியை ஒருகாலத்தில் வறுத்தெடுத்த ‘நமது எம்.ஜி.ஆர்’ இப்போது இவர்களைக் கட்டம் கட்டுகிறது. இந்த டபுள் அட்டாக்கைச் சமாளிக்க PP-TV என்ற தொலைக்காட்சியைத் தொடங்கிப் பதிலடி கொடுக்கலாம். தமிழில் ‘பீப்பீ’ என வைத்துக்கொள்ளலாம். ஏற்கெனவே டெல்லிக்கு பீப்பி ஊதிக்கொண்டிருப்பதால், காரணப் பெயராகவும் இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சின்னம்மா சிவகாமி தேவி!

* ஜி.எஸ்.டி, டிமானிடைசேஷன் என சாமான்யனைப் பாதிக்கும் எல்லா திட்டங்களையும் புதிய இந்தியாவுக்குப் பிரசவம் பார்த்தே சமாளிக்கிறார் மோடி. இதையே சிஷ்யப்பிள்ளைகளும் செய்யலாம்.  நீட், நெடுவாசல், கதிராமங்கலம் எனத் தமிழகத்தைப் பாதிக்கும் எல்லா தலையாயப் பிரச்னைகளையும் ‘புதுத் தமிழ்நாடு பொறக்கப் போகுது’ என வெள்ளை கோட், ஸ்டெத் சகிதம் பரபரப்பாக வந்து கேமரா முன் சொல்லிவிட்டுக் குடுகுடுவென ஓடிவிடலாம். நின்னாதான் சுற்றிச் சுற்றி அடிப்பாங்களே!

* அ.தி.மு.க-வின் மகளிரணிக்கு வாயில் பூட்டு போடுவார்கள். வாய் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ‘அம்மா இட்லி சாப்பிட்டாங்க’ தொடங்கி ‘சின்னம்மா சிங்கம் மாதிரி’ வரை சோஷியல் மீடியாவை அலெர்ட்டாக வைத்திருப்பதையே வேலையாகச் செய்தவர்கள் சி.ஆர்.சரஸ்வதியும், வளர்மதியும். இவர்கள் சைலன்ட் மோடிற்குப் போனாலே பாதி பிரச்னைகள் குறையும் என்பதால், இருவருக்கும் கருத்துச் சொல்ல தடை விதிக்கப்படும். இருவருமே எம்.எல்.ஏ-க்கள் இல்லையென்பதால் கோபித்துக்கொண்டு டி.டி.வி பக்கம் சாய்ந்தாலும் பிரச்னை இல்லை.

* காலேஜ் விடலைப்பையன்கள் செமஸ்டருக்கு ஒரு ஐ.வி டூர் போவதுபோல மாதாமாதம் குரூப்பாகக் கிளம்பி ஏதாவது ரிசார்ட்டுக்குச் சென்று தலைமறைவாகிவிடுகிறார்கள் எம்.எல்.ஏ-க்கள். ‘என்னா பாஸ் எப்போ பார்த்தாலும் நசநசன்னு தூறிக்கிட்டே இருக்கு,  நான் மகாராஷ்ட்ராவுக்கே போறேன்’ என அடிக்கடி மும்பை பறக்கும் ஆளுநர், எப்போ வந்தாலும் தயாராக இருக்க பிரமாண்ட ரிசார்ட்டை விலைக்கு வாங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

சின்னம்மா சிவகாமி தேவி!

*‘நார்த் கொரியா உனக்கு, சவுத் கொரியா எனக்கு’ என்ற ரீதியில் சரிசமமாகப் பதவிகளைப் பங்குபோட்டுக்கொண்டது இரு தரப்பும். ஓ.பி.எஸ் இன்னும் மிஸ்ஸாவது தியேட்டர்களில் ஓடும் நியூஸ் ரீல்களில்தான். ‘மாண்புமிகு புரட்சித்தலைவி தங்கத்தாரகை பொன்மனச்செல்வி ஜெயலலிதாவின் ஆசி பெற்ற சிரிச்சாப் போச்சு தியானப் புகழ் ஓ.பி.எஸ்ஸும் சுட்டுப் போட்டாலும் சிரிப்பு வராத எடப்பாடியும் இணைந்து வழங்கும் நாமம் போடும் திட்டம்’ என அங்கும் அலறவிட்டால்... ஓம் சாந்தி சாந்தி!

* கிளைக்கழகங்கள் இரண்டும் இணைந்தாயிற்று. இனி தாய்க்கழகம் பி.ஜே.பி-யோடு கைகோப்பது மட்டும்தான் பாக்கி. முதல்கட்டமாக பி.ஜே.பி-யில் இருக்கும் தலைவர்கள் சிலரை அ.தி.மு.க-வில் இணையச் சொல்லலாம். தமிழிசைக்கு அ.தி.மு.க மகளிரணி, சுப்ரமணியன் சுவாமிக்கு இணைய அணி, வித்யாசாகர் ராவுக்கு இணைக்கும் அணி எனப் பிரித்துக்கொடுத்துக் கடைசியில் மொத்தமாக இணைத்துவிடலாம். என்ன, தமிழக பி.ஜே.பி-யில் தலைவர்கள் மட்டுமே இருப்பதால், அவர்களும் போனபின் காலியான கொட்டாரம் ஆகிவிடும். பரவாயில்லை. புதுத் தமிழ்நாடு என்னும் பாப்பா பிறக்க இந்தக் கஷ்டத்தைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism