Published:Updated:

சக்திமான் எடப்பாடி... கைகளை இழந்த எம்.ஜி.ஆர்!

சக்திமான் எடப்பாடி... கைகளை இழந்த எம்.ஜி.ஆர்!
பிரீமியம் ஸ்டோரி
News
சக்திமான் எடப்பாடி... கைகளை இழந்த எம்.ஜி.ஆர்!

சக்திமான் எடப்பாடி... கைகளை இழந்த எம்.ஜி.ஆர்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், ‘நான் இன்னொரு ஜெயலலிதா’ என்று அடையாளப்படுத்திக் கொள்வதுபோல், சக்திமானாகக் காட்சியளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. விழா நடந்த பஞ்செட்டியை நோக்கிச் செல்லும் எல்லா சாலைகளிலும் ஃப்ளக்ஸ்கள் மற்றும் கட்-அவுட்டுகள். இவற்றிலும், பிரமாண்ட போஸ்டர்களிலும் எடப்பாடியும் பன்னீரும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

சக்திமான் எடப்பாடி... கைகளை இழந்த எம்.ஜி.ஆர்!

கடந்த 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விழா. மாவட்டத்தின் அனைத்துப் பள்ளிகளின் மாணவர்களும் விடுமுறை நாளிலும் பள்ளிச் சீருடையுடன் காலையிலேயே விழா அரங்குக்கு வரவழைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கில் தனியார் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் இதற்காக வந்தன. அரங்கின் முன்பு மாணவர்களுக்கு மட்டுமே 5 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

காலை 11 மணியளவில், அரங்கில் ஒரு டி.வி வெடிக்க, புகைமேகம் சூழ்ந்து கொண்டது. ‘தீ விபத்து’ எனச் செய்தி பரவ, மாணவர்களின் பெற்றோர்கள் அலறியடித்தபடி வந்து திட்டியதால் பதறிப் போன ஆசிரியர்கள், அரங்கிற்குள் போய் மாணவர்களை வெளியே அழைத்து வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்ததோடு, கைகூப்பி மன்னிப்பும் கேட்டுக்கொண்டனர்.  

முதல்வர் எடப்பாடி பேசியபோது, ஜெயலலிதாவால் ஐந்தாண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட பொன்னேரி பாதாள சாக்கடைத் திட்டத்தை மீண்டும்(!) அறிவித்து அனைவரையும் அதிர விட்டார். ‘பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முடிந்தபின் சாலைகளைப் புதுப்பிக்க போதுமான நிதி கைவசம் இல்லை’ என பொன்னேரி பேரூராட்சி கை விரித்ததால், திட்டம் 5 ஆண்டுகளாகவே கிடப்பில் இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சக்திமான் எடப்பாடி... கைகளை இழந்த எம்.ஜி.ஆர்!

வழக்கம் போலவே, “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா உள்ளவரை ஆட்சியை யாராலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என்ற எடப்பாடி, ‘‘கொசஸ்தலை ஆற்றில் ஏழு கோடி ரூபாயில் தடுப்பணை கட்டப்படும்’’ என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். தண்ணீரே வராத ஆற்றில் எதற்கு அணை?

மீஞ்சூர் பகுதியின் காட்டூரில் உள்ள எம்.ஜி.ஆரின் பழைய சிலையைப் பார்க்காமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்குப் பலரும் போயிருக்க  வாய்ப்பில்லை. எடப்பாடி சொன்ன கட்சியின் ஆன்மாவான எம்.ஜி.ஆரின் சிலை, அங்கே தன்னுடைய இரண்டு கைகளையும் பறிகொடுத்த நிலையில் பரிதாபமாக நிற்கிறது.  

- ந.பா.சேதுராமன்