Published:Updated:

ஆட்சியைக் காப்பாற்றுமா குட்கா? - பராக் பராக் எடப்பாடி பராக்...

ஆட்சியைக் காப்பாற்றுமா குட்கா? - பராக் பராக் எடப்பாடி பராக்...
பிரீமியம் ஸ்டோரி
News
ஆட்சியைக் காப்பாற்றுமா குட்கா? - பராக் பராக் எடப்பாடி பராக்...

ஆட்சியைக் காப்பாற்றுமா குட்கா? - பராக் பராக் எடப்பாடி பராக்...

‘குட்கா’... தி.மு.க-வுக்கு இப்போது குடைச்சலாக மாறியிருக்கும் பெயர். அம்பலப்படுத்தப் போகிறோம் என்று சட்டசபைக்கு எடுத்துவந்த குட்கா  பாக்கெட்டுகளால், இப்போது தி.மு.க-வின் 21 எம்.எல்.ஏ-க்களுக்குச் சிக்கல். சட்டசபை உரிமைக்குழு இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. 21 பேரும் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என யூகங்கள் நிலவுகின்றன. இந்நிலையில், ‘‘குட்காவைச் சட்டசபைக்குக் கொண்டுபோனது சரிதான்’’ என்கிறார், வழக்கறிஞரும், தி.மு.க செய்தித்தொடர்பு இணைச் செயலாளருமான தமிழன் பிரசன்னா. அவரிடம் பேசினோம்.  

‘‘உரிமை மீறல் பிரச்னையை விவாதிக்க, அந்தப் பிரச்னை அண்மையில் நடைபெற்றதாக இருக்க வேண்டும். ஆனால், சம்பவம் நடந்து 40 நாள்கள் கழித்து கூட்டுவதற்கான நோக்கம் என்ன? ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர். பெரும்பான்மை இல்லாத அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது. உரிமைக் குழு மூலம் எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது கொல்லைப்புற வழியாக ஆட்சியைத் தக்க வைக்கலாம் என நினைக்கிறார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு நடக்கிறது.

ஆட்சியைக் காப்பாற்றுமா குட்கா? - பராக் பராக் எடப்பாடி பராக்...

சட்டத்துக்குப் புறம்பாக தமிழகத்தில் குட்கா விற்பனை செய்வதற்காக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்கு வருமானவரித் துறை கடிதம் அனுப்பியது. லஞ்சம் பெற்றதற்கான ஆதாரமாக ஒரு லெட்ஜரின் பிரதியையும் அனுப்பினர். இது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, ‘தமிழகத்தில் தங்கு தடையின்றி குட்கா கிடைக்கிறது’ என்றார். அப்போது முதலமைச்சர் எழுந்து, ‘குட்கா விற்பனை தமிழகத்தில் இல்லை’ என்றார். குட்கா தங்கு தடையின்றி கிடைக்கிறது என்பதை ஆதாரத்தோடு சுட்டிக் காட்டவே, மறுநாள் சட்டசபைக்கு குட்காவை எடுத்துச் சென்று காட்டினார்கள்.

சட்டத்தில்கூட ‘The Act of Intention’ என்று சொல்வார்கள். தி.மு.க உறுப்பினர்கள் செய்த செயலின் நோக்கம் என்ன? அவர்கள் குட்காவைச் சுவைப்பதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ எடுத்து வரவில்லை. நாட்டு மக்களுக்கு ‘தடையை மீறி இது கிடைக்கிறது’ என்பதை உணர்த்தவே எடுத்துச் சென்றனர். ஆனால், தங்கள் தவறை மறைப்பதற்காக தவறைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவது எந்த வகையில் நியாயம்?

‘தடை செய்யப்பட்ட பொருளைச் சட்ட மன்றத்துக்கு எடுத்து வரக்கூடாது’ என்பதுதான் விதி என்றால், முதலில் தண்டிக்கப்பட வேண்டி யவர்கள் ஆளுங்கட்சித் தரப்பினர்தான். கடந்த 3.7.2017 அன்று தடைசெய்யப்பட்ட பொருளான ‘நீரா’ பானத்தைச் சட்டமன்றத்துக்குள் கொண்டு வந்ததும், அதை உறுப்பினர்களுக்குக் கொடுத்ததும் சட்டப்படி குற்றம். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் எண். 10/1937, சட்டப்பிரிவுகள் 11 மற்றும் 19 ஆகியற்றின்படி இன்றுவரை ‘நீரா’ பானம், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு மதுபானம். அதை, அவை உரிமைக்குழுவின் தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன்தான் அமைச்சர்கள் உள்பட எல்லா உறுப்பினர்களுக்கும் வழங்கினார். அவர் மீது எப்பொழுது அவை உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரப்போகிறார்கள்?’’ என்கிறார் தமிழன் பிரசன்னா காட்டமாக.

இதுகுறித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்டோம். ‘‘நீரா பானம் தடை செய்யப்பட்ட பொருளே இல்லை. ‘மரத்திலிருந்து நீரா பானம் இறக்கலாம்’ என்று சட்டமன்றத்திலேயே சட்டம் இயற்றிவிட்டோமே. சட்டம் இயற்றிய பிறகுதானே எம்.எல்.ஏ-க்களுக்கு அதை வழங்கினோம். அதோடு நீரா பானம் தாய்ப்பாலுக்கு இணையான சத்துகளைக் கொண்டது, ஆரோக்கியமானது. குட்கா போன்று உடலுக்குக் கேடு தருவதில்லை. நீரா பானத்தை வரவேற்று தி.மு.க உறுப்பினர்களே சட்டமன்றத்தில் பேசினார்களே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆட்சியைக் காப்பாற்றுமா குட்கா? - பராக் பராக் எடப்பாடி பராக்...

‘குட்கா தடையின்றிக் கிடைக்கிறது என்பதைக் காட்ட சட்டசபைக்குக் கொண்டுவந்தோம்’ என்று சொல்கிறார்கள். தமிழகத்தில் கொலைகள் அதிகமாக நடக்கிறது என்று சட்டசபையில் கொலை செய்து காண்பிப்பார்களா? தடை செய்யப்பட்ட போதைப் பொருளைச் சட்டசபைக்குள் கொண்டுவருவது எந்த வகையில் நியாயம்? தி.மு.க-வின் மூத்த உறுப்பினர்கள் யாருமே குட்காவைக் கையில் எடுத்துக் காட்டவில்லையே! துரைமுருகன் முன்னால் ஒரு பாக்கெட் வைக்கப்பட்டது. ஆனால், அதை அவர் டேபிளில் இருந்து தள்ளி விட்டுவிட்டார். தி.மு.க-வின் மூத்த உறுப்பினர்களுக்கு, ‘இது தவறு’ என்று தெரிந்திருக்கிறது. உரிமைக்குழு இதை முறைப்படி விசாரித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்” என்றார் அவர் தெளிவாக.

குட்கா விவகாரத்தை வைத்து தி.மு.க-வுக்கு ஆட்டம் காட்டத் தயாராகிவிட்டது அ.தி.மு.க அரசு.

- அ.சையது அபுதாஹிர்