Published:Updated:

“ஸ்டாலின் தி.மு.க-வை நிலை நிறுத்துவார்!”

“ஸ்டாலின் தி.மு.க-வை நிலை நிறுத்துவார்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஸ்டாலின் தி.மு.க-வை நிலை நிறுத்துவார்!”

“ஸ்டாலின் தி.மு.க-வை நிலை நிறுத்துவார்!”

ழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ‘முரசொலி’ பவள விழா பொதுக்கூட்டம், இரண்டாம் முறையாக நடத்தப்பட்டு... அது தி.மு.க கூட்டணிக் கட்சியின் பிரகடனக் கூட்டமாக முடிந்துள்ளது. முரசொலிக்கு நடந்த பாராட்டுகளைவிட... மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அர்ச்சனைகளே அதிகம்.

தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான ‘முரசொலி’ நாளிதழின் பவள விழா, கடந்த 5-ம் தேதி, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கொண்டாடப்பட்டது.  ஆகஸ்ட் 11-ம் தேதி நடத்த திட்டமிட்டப்பட்ட பொதுக்கூட்டம், மழையால் பாதியில் ரத்தானது. இரண்டாம் முறை நடத்த நாள் குறிக்கப்பட்ட நிலையில், கருணாநிதியை வைகோ வந்து பார்த்த பிறகு தி.மு.க - ம.தி.மு.க இடையே நட்பு ஏற்பட்டது. அதனால் ‘முரசொலி’ விழாவுக்கு வைகோவும் அழைக்கப்பட்டார்.

“ஸ்டாலின் தி.மு.க-வை நிலை நிறுத்துவார்!”

வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், ஆர்.எம்.வீரப்பன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் என கூட்டணிக்கட்சித் தலைவர்கள் குவிந்திருந்தார்கள்.

முரசொலியை வாழ்த்திவிட்டு மத்திய, மாநில அரசுகளைக் காய்ச்சி எடுத்தார்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள். நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இரண்டு அரசுகளையும் வீழ்த்த வேண்டும் என்று சபதம் எடுத்தார்கள். அது, தி.மு.க தலைமையால்தான் முடியும் என்றார்கள். வைகோ மட்டும்தான் இந்த சப்ஜெக்ட்டுக்குள் நுழையாமல் முரசொலியைப் பற்றியும் கருணாநிதியைப் பற்றியும் பேசினார்.

“தி.மு.கழகம் வலிவும் பொலிவும் பெற்றிட நாளும் உழைக்கின்ற தி.மு.க-வின் செயல் தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், முரசொலி அறங்காவலர் பேரன்புக்குரிய சகோதரர் ஸ்டாலின் அவர்களே” என்று பீடிகை போட்டு வாழ்த்தினார் வைகோ.

வைகோ வந்தபோது, என்.ஆர்.தனபாலன் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். வைகோ வருவதைப் பார்த்த ஸ்டாலின், தனபாலனிடம் பேசுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு, நேரில் சென்று வைகோவை மேடைக்கு அழைத்து வந்து நாற்காலியில் அமரச் சொன்னார். சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ, தி.மு.க நிகழ்ச்சி ஒன்றில் மேடை ஏறினார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த தொண்டர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“ஸ்டாலின் தி.மு.க-வை நிலை நிறுத்துவார்!”

அதன்பின் பேசிய தி.க தலைவர் வீரமணி, “பல ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ தாய்க் கழக நிகழ்ச்சிக்கு வந்திருப்பதில் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி. தனது மனதில் உள்ள உணர்ச்சி முழுவதையும் இங்கே கொட்டிவிட்டார். இங்கே கொட்டியவரைக்கும் சந்தோஷம். ஆனால், இதேபோல் வெளியே எங்கும் சென்று கொட்டாமல் இருந்தால் சரி” என்றவர், “ஒரு பிள்ளையை அடிக்கவும், அணைக்கவும் தாய்க்கு முழு அதிகாரம் உண்டு. அதுபோலதான் இதுவும்” என்று வைகோவைச் சமாதானப்படுத்தினார்.

அடுத்து அன்பழகன், ஸ்டாலினை உச்சி குளிரவைத்தார். “கலைஞருக்குப் பின்னாலே இந்த இயக்கத்தை அதேபாணியில் அதே அடிப்படையில் நிலைநாட்டக் கூடிய தகுதி வாய்ந்த ஒருவர் இந்த இயக்கத்திலே வந்து அமர்ந்திருக்கிறார் என்று சொன்னால், அது நம்முடைய ஸ்டாலின்தான்” என்றார்  அரங்கம் அதிர.

ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டுவதாக அமைந்திருந்தது முரசொலி விழா!

- ஜெ.அன்பரசன், படங்கள்: கே.ஜெரோம்