Published:Updated:

மனைவி சித்ரவதை புகார்: கேரள வனத்துறை அமைச்சர் ராஜினாமா

மனைவி சித்ரவதை புகார்: கேரள வனத்துறை அமைச்சர் ராஜினாமா
மனைவி சித்ரவதை புகார்: கேரள வனத்துறை அமைச்சர் ராஜினாமா

திருவனந்தபுரம்: மனைவி கொடுத்த சித்ரவதை புகாரையடுத்து கேரள வனத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 

மனைவி சித்ரவதை புகார்: கேரள வனத்துறை அமைச்சர் ராஜினாமா

கேரள வனத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் கணேஷ்குமார். அவரது மனைவி யாமினி. தன்னை கொடுமைப் படுத்துவதாக யாமினி கடந்த 23ஆம் தேதி முதல்வர் உம்மன்சாண்டியை சந்தித்து புகார் அளித்தார்.

ஆனால் இந்த புகார் குறித்து உம்மன்சாண்டி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் வனத்துறை அமைச்சர் கணேஷ்குமார், தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

##~~##
இது தொடர்பாக அமைச்சர் கணேஷ்குமார் கூறுகையில், "பிப்ரவரி 22ஆம் யாமின் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரிதுபடுத்தப்பட்டது. ஆனால் மார்ச் 3ல் எனது அலுவலகத்தில் புகுந்து என்னை தாக்கியது பெரிதுபடுத்தப்படவில்லை. இதற்கு காரணம் என்ன என்பதை போலீசார் கண்டறிய வேண்டும். கேரள அரசியலில் இதுவரை என் மீது எந்தவித ஊழல் புகாரும் இல்லை. இது எனது நற்பெயரை கெடுப்பதற்காக நடக்கும் சதிதான்" என்றார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய யாமினி, "கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்தது. இது பற்றி 23ஆம் தேதி முதல்வர் உம்மன்சாண்டியை அவரது இல்லத்தில் சந்தித்து புகார் அளித்தேன். நான் தாக்கப்பட்டதை அமைச்சரின சகோதரி பிந்து, கணவர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு தெரியும்" என்றார்.