Published:Updated:

நீட்டா நடக்கும் நீட் அரசியல்! - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்

நீட்டா நடக்கும் நீட் அரசியல்! - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்
பிரீமியம் ஸ்டோரி
நீட்டா நடக்கும் நீட் அரசியல்! - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்

நீட்டா நடக்கும் நீட் அரசியல்! - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்

நீட்டா நடக்கும் நீட் அரசியல்! - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்

நீட்டா நடக்கும் நீட் அரசியல்! - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்

Published:Updated:
நீட்டா நடக்கும் நீட் அரசியல்! - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்
பிரீமியம் ஸ்டோரி
நீட்டா நடக்கும் நீட் அரசியல்! - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்

‘நீட்’ தேர்வு விவகாரம் அரசியல் விளையாட்டை ஆரம்பித்து வைத்திருக்கிறது. நீட்டை எதிர்க்கும் தி.மு.க.வும் ஆதரிக்கும் பி.ஜே.பி-யும் மல்லுக்கட்டு நடத்திக் கொண்டிருக்கின்றன.

தி.மு.க தலைமையில் காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டத்தை திருச்சியில் நடத்த 8-ம் தேதி நாள் குறித்திருந்தார்கள். அன்றைய தினம்தான் ‘நீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தத் தடை’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாகத் தகவல் பரவியது. இதனால் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் நடத்த போலீஸ் தடை விதித்தது. அதையும் மீறி டென்ஷனுடன் கூட்டம் நடந்து முடிந்தது. அதே மைதானத்தில், அடுத்த நாள் பி.ஜே.பி போட்டிக் கூட்டம் போட்டது. இரண்டு கூட்டங்களிலும் என்ன நடந்தது?

நீட்டா நடக்கும் நீட் அரசியல்! - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்

முதலில் தி.மு.க கூட்டம்... ஸ்டாலின் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்த திருச்சி போலீஸ் கமிஷனர் அருண், ‘பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது’ என்றார். ஆனாலும் கூட்டம் நடைபெற்றது. “நீட் தேர்வு பல ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைக் குழிதோண்டிப் புதைத்துள்ளது. இதுவரையில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மட்டுமே தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சீட் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது 15 சதவிகித வெளிநாட்டினருக்கு மெடிக்கல் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது” எனப் பகீர் கிளப்பினார் ஜவாஹிருல்லா. திருமா, கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள், “நீட் தேர்வை எதிர்த்துப் போராடக் கூடாது என உத்தரவு வந்தாலும் அஞ்ச மாட்டோம்” என்றார்கள். பேசிய பலரும், “ஸ்டாலின் மிகவும் பக்குவப்பட்டுவிட்டார்” என நீட்டை தாண்டி புகழ்ந்தனர்.

 திருநாவுக்கரசர் பேசும்போது, ‘‘நீட் தேர்வை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஒரு பெண்ணைக் காட்டி பிடித்திருந்தால் திருமணம் செய்துகொள்ளலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம் என்ற வகையில்தான் நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டுவந்தது. ஆனால், பி.ஜே.பி அரசாங்கம், ஒரு பெண்ணைக் காட்டி ‘இதைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும்’ எனக் கட்டாயப்படுத்தி நீட் எனும் அரக்கியைத் திணிக்கிறது. மோடியும் பழனிசாமியும் மாற மாட்டார்கள். அவர்களை மாற்ற வேண்டும். எனவே, மத்தியில் ராகுல் காந்தி பிரதமராகவும், தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வராகவும் வேண்டும்” எனக் கூட்டணியை உறுதிசெய்து உட்கார்ந்தார்.

இறுதியாக மைக் பிடித்த ஸ்டாலின், ‘‘தமிழ்நாட்டைவிட தரமான கல்வி முறை வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி எந்த நீட் எழுதி வந்தார்? இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் சென்னை. தமிழக மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதி வந்தார்களா? பி.ஜே.பி தலைவர்களின் பிள்ளைகள் நீட் தேர்வு எழுதித்தான் டாக்டர் ஆனார்களா? தமிழக ஆட்சியைத் தூக்கி எறியும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்’’ என முடித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீட்டா நடக்கும் நீட் அரசியல்! - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்
நீட்டா நடக்கும் நீட் அரசியல்! - மோடிக்கே டேக் போட்ட நெட்டிசன்கள்

அடுத்தநாள் அதே இடத்தில், ‘தி.மு.க சந்தர்ப்பவாதக் கூட்டணியின் பொய்ப் பிரசாரத்தைக் கண்டித்து பொதுக்கூட்டம்’ என்ற பெயரில் கூட்டம் நடத்தியது பி.ஜே.பி. கூட்டத்துக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மிஸ்ஸிங். “பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயில் ஆக்குவதில்லை என அரசு முடிவெடுத்த பிறகு, ஆசிரியர்கள் யாரும் வகுப்பறைகளில் பாடம் நடத்துவதில்லை. அவர்கள் கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து, வசூலிக்கும் தொழிலைச் செய்கின்றனர்” என்றார் ஹெச்.ராஜா.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ, “மாநில பாடத்திட்டத்தில் படித்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்குப் பாடத்திட்டம் மோசமாக உள்ளது. நவோதயா, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறுவது சுலபம்” எனப் புள்ளிவிவரங்களை அடுக்கினார்.

இந்தக் கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வருவதற்கான பொறுப்பு, பி.ஜே.பி மண்டல பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டிருந்தது. நான்காயிரம் பேர் வரை வந்திருந்ததாக லோக்கல் போலீஸார் கூறுகின்றனர். நீண்ட தூரத்தில் இருந்து வந்தவர்கள், 8 மணிக்கு மேல் கிளம்பியதால், தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசும்போது மைதானம் காத்தாடியது. இதுகுறித்து நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் கலாய்த்து ஸ்டேடஸ் போட்டதுடன், அதனை, பிரதமர் மோடிக்கே டேக் செய்தனர். கொந்தளித்துப் போனார் தமிழிசை!

நீட் அரசியல் நீட்டா நடக்குது!

- சி.ய.ஆனந்தகுமார், ச.ஆனந்தப்பிரியா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்,  கோ.ராகவேந்திரகுமார்