Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

கவர்னரை சிலர் தவறாக விமர்சிப்பதும், கவர்னருக்கு சட்டம் தெரியவில்லை என்று கூறுவதும் சரியா?


யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அதில் கவர்னரும்தான். அந்த விமர்சனம், விமர்சன நெறிமுறைகளுடன் கூடியதாக இருக்க வேண்டுமே தவிர, அவதூறாக இருக்கக்கூடாது. இந்த கவர்னருக்கு சட்டம் தெரியவில்லை என்றும் கூற முடியாது. ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் வித்யாசாகர் ராவ். அவருக்குத் தெரியாத சட்டம் கிடையாது. ஆனால், எதை எப்போது பிரயோகிக்க வேண்டும் என்பதற்கு அவருக்கும் கட்டளைகள் வர வேண்டுமே!

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வி.ராமானுஜம், சென்னை-73.

இறந்த அனிதா குடும்பத்துக்கு ஏழு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்திருப்பது அரசு தனது கையாலாகாத்தனத்தை மறைக்கத்தானே?


உடனே நிதி அறிவித்துவிட்டால் அனைத்து விமர்சனங்களும் அமுங்கிப் போகும் அல்லவா? அதனால்தான். அனிதா விவகாரம் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் இந்த பாணியைத்தான் கையாள்வார்கள்.

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.

‘‘அனிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை தேவை’’ என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சொல்கிறாரே?


‘‘கிருஷ்ணசாமியை என் அண்ணனாக நினைத்தேன். ஆனால், அவர் உண்மையை உணராமல் பேசுவதைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது” என்று அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் சொல்லியிருக்கிறார்.  அதைக் கவனித்தீரா?

கழுகார் பதில்கள்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அ.தி,மு.க-வுக்கு அல்வா கொடுத்துவிட்டதே பி.ஜே.பி?


அ.தி.மு.க-வுக்கு எனச் சொல்வதை விட ‘தம்பிதுரைக்கும் மைத்ரேயனுக்கும் அல்வா கொடுத்துவிட்டார்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இருவரும்தான் எப்படியாவது மத்திய அமைச்சராகி விட வேண்டும் என நினைத்தார்கள். அதுவும் தம்பிதுரை, அ.தி.மு.க-காரர் என்பதையே மறந்து பி.ஜே.பி-கார ராகவே செயல் பட்டுப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. இன்னமும் மனம் தளராமல் அலைகிறார்.

இவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கித்தர வேண்டும் என்று பன்னீரும் எடப்பாடியும் உண்மையில் நினைக்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

‘பி.ஜே.பி என்ற கங்கையில் யார் மூழ்கினாலும் புனிதம் அடைந்துவிடுவார்கள்’ என்ற அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து பற்றி?


கங்கையைச் சுத்தப்படுத்த எவ்வளவு கோடி ஒதுக்கப்பட்டது என்பதை உமாபாரதியைக் கேட்டு பொன்னார் தெரிந்துகொள்ளட்டும்.

ப.இராம் முருகன், சென்னை-68.

‘அ.தி.மு.க-வுக்கும் எங்களுக்கும் இருப்பது கிவ் அண்டு டேக் பாலிசி’ என்கிறாரே தமிழக பி.ஜே.பி பொறுப்பாளர் முரளிதர்ராவ்?

அன்டர்கிரவுண்டு பாலிசி.

கழுகார் பதில்கள்!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10.

அ.தி.மு.க-வுக்கு நிரந்தரத் தலைவர் கிடைக்கமாட்டாரா?


எந்த அ.தி.மு.க-வுக்கு நீங்கள் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லையே? அ.தி.மு.க என்ற கட்சியே இப்போது இல்லை.இப்போது இருப்பது ‘அ.தி.மு.க அம்மா’ கட்சியும், ‘அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா’ என்ற கட்சியும்.

‘அ.தி.மு.க அம்மா’ கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலா, அந்தக் கட்சியில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை. துணைப்பொதுச்செயலாளர் தினகரனை அந்தக் கட்சியைச் சேர்ந்த யாரோ சிலர் நீக்கிவிட்டார்கள்.

‘அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா’ கட்சியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், ‘அ.தி.மு.க அம்மா’ கட்சியில் இணைந்துவிட்டார். ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் தரவில்லை. அதனால் இந்த இணைப்பு அதிகாரபூர்வமானது அல்ல.

நிரந்தக் கட்சியே இல்லாதபோது நிரந்தரத் தலைவர் எப்படிக் கிடைப்பார்?

கழுகார் பதில்கள்!

ஏ.கணேசன், தூத்துக்குடி.

ஏழு வருடங்களுக்கு முன்பு கருணாநிதி சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவந்ததன் விளைவாகத்தான், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறாமல் போனார்களா?


தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்வி இடங்கள் 3,534. இதில் 2,314 இடங்களைக் கைப்பற்றியவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான். எனவே, மாநிலப் பாடத்திட்டம் என்பது முழுக்கவே குறைபாடு உடையது அல்ல. நீட் தேர்வு கேள்விகள், கேள்வி கேட்கும் முறைகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ முறைப்படி மட்டுமே இருந்ததுதான் சிக்கலே. ‘நீட் போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள தனியாகப் பயிற்சியும் தேவைப்படுகிறது’ என்பது சிலரின் குரல். மதிப்பெண்ணை மட்டுமே இலக்காக வைத்து சில பள்ளிகள், ப்ளஸ் 1 பாடத்தை நடத்தாமல் விட்டதும் மாணவர்களைப் பாதித்தது.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

‘மரணத்தில் சந்தேகம் உள்ளது’ என்று சொல்லி, ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுக்காமல் விடமாட்டார்கள் போல் இருக்கிறதே?

அப்படி ஒரு சம்பவம் எந்தக் காலத்திலும் நடக்காது. ஏனென்றால், அது சசிகலா குடும்பம் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல. அது பலரின் உணர்வுகளோடு தொடர்புடையது. உயர் அழுத்த மின்சாரக் கம்பியைத் தொடுவது போன்ற இந்த ஆபத்தான விஷயத்தைச் செய்ய எடப்பாடியோ, பன்னீரோ தயாராக இருக்க மாட்டார்கள்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

அ.தி.மு.க விவகாரத்தில் சுப்பிரமணியன் சுவாமியின் குரல் மட்டும் பி.ஜே.பி-யில் வித்தியாசமாக ஒலிக்கிறதே?


‘எடப்பாடி பதவி விலக வேண்டும்’, ‘தினகரன் பக்கம்தான் அ.தி.மு.க இருக்கிறது’ என்றெல்லாம் ட்வீட் போடுவதன் மூலமாக யாருக்கு என்ன சொல்ல விரும்புகிறாரோ சுவாமி? அடக்கடவுளே!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

‘துரோகச் சிந்தனை இல்லாதவரை முதல்வர் ஆக்குவோம்’ என்கிறாரே டி.டி.வி.தினகரன்?


முதல்வர் ஆக்கியபிறகுதானே துரோகச் சிந்தனையே முளைக்கும் டி.டி.வி?

படம்: என்.ஜி.மணிகண்டன்

கழுகார் பதில்கள்!

பி.ஆர்.பாண்டியன்,  தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்

கல்வி, விவசாயம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. செயல்படாத இந்த அரசிடமிருந்து தமிழகத்துக்கு விடிவுகாலம் எப்போது?

ல்வி, விவசாயத்தில் அடைந்துள்ள பின்னடைவு என்பது வெறும் ஆட்சி மாற்றத்தால் சரியாகிவிடாது. எடப்பாடி இடத்தில் தினகரன் வருவதாலோ, அல்லது அந்த இடத்துக்கு ஸ்டாலின் வந்துவிடுவதாலோ, தமிழ்நாடு முன்னேறிவிடாது. கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், சுகாதாரம், போக்குவரத்து ஆகிய அனைத்துத் துறைகளிலும் ஒரு அரசாங்கத்துக்குத் தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். எதனால் பிரச்னை, யாரால் பிரச்னை, எதன் மூலம் அரசால் இதனைத் தடுக்க முடியும் என்ற சிந்தனை அரசுக்கு வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்கள் இல்லாத அரசுகளாக இவை அமையும் வரை எதுவும் சாத்தியம் இல்லை. இந்தத் திட்டங்களில் அரசுக்கு இருக்கும் பொறுப்புகளை ஆட்சியாளர்கள் உணர்வதில்லை. பணம் வரும் டெண்டர்கள், மக்களை மகிழ்விக்கும் இலவசங்கள், கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்தான் பெரிய அரசியல் கட்சிகளின் போக்காக உள்ளது. இந்தப் போக்கு மாறாதவரை விடிவு காலம் கிடைக்காது.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 

கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!