Published:Updated:

“சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவதற்குள் நன்றி கெட்டவர் ஆகிவிட்டார் எடப்பாடி!”

“சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவதற்குள் நன்றி கெட்டவர் ஆகிவிட்டார் எடப்பாடி!”
பிரீமியம் ஸ்டோரி
“சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவதற்குள் நன்றி கெட்டவர் ஆகிவிட்டார் எடப்பாடி!”

அனல் கக்கும் தினகரன்

“சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவதற்குள் நன்றி கெட்டவர் ஆகிவிட்டார் எடப்பாடி!”

அனல் கக்கும் தினகரன்

Published:Updated:
“சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவதற்குள் நன்றி கெட்டவர் ஆகிவிட்டார் எடப்பாடி!”
பிரீமியம் ஸ்டோரி
“சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவதற்குள் நன்றி கெட்டவர் ஆகிவிட்டார் எடப்பாடி!”

டப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு எதிராக தன் ஆதரவாளர்கள் சென்னையிலும் பெங்களூரிலும் சட்டப் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்த திங்கள்கிழமையன்று டி.டி.வி.தினகரன் பரமக்குடியில் இருந்தார். இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு அஞ்சலி செலுத்த வந்த அவர், அதன்பிறகு மதுரையிலுள்ள சில கோயில்களுக்குச் சென்று கொண்டிருந்தார்.

தான் தங்கியிருந்த விடுதிக்கு இரவு வந்தவர், மிகுந்த கொந்தளிப்போடு செய்தியாளர்களிடம் பேசினார்.

‘‘தமிழக மக்களின் நலன் கருதி இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத் தயாராகிவிட்டோம். முதலமைச்சர் பழனிசாமியை மாற்றுவோம். தலையைக் கிள்ளி எறிந்துவிட்டு வேறு தலையை வைக்கலாம் என்று நினைத்தோம். அப்படி முடியாதபட்சத்தில் ஆட்சியைக் கலைத்துவிட முடிவெடுத்து விட்டோம்’’ என்றவரிடம் தனியாக சில கேள்விகளை முன் வைத்தோம்.

“சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவதற்குள் நன்றி கெட்டவர் ஆகிவிட்டார் எடப்பாடி!”

‘‘இரண்டு அணிகளும் சேர்ந்துதான் இந்தப் பொதுக்குழுவைக் கூட்டுவதாக அன்வர்ராஜா எம்.பி., கூறியுள்ளாரே?’’

‘‘அன்வர்ராஜா என்ன சட்ட வல்லுநரா? அவருக்கு எல்லாம் தெரியுமா? அவர் இரண்டு அணிகள் என்று சொல்வது ஓ.பன்னீர்செல்வத்துடன் உள்ள பத்து பேரையும், எடப்பாடியுடன் உள்ள சிலரையும்தான். தொண்ணூறு சதவிகிதம் பேர் எங்கள் பக்கம்தான் உள்ளார்கள். தலைமைக் கழக நிர்வாகி மகாலிங்கம் அழைத்தால் அது பொதுக்குழுவாகி விடுமா? பொதுச்செயலாளர்தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். இவர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை.’’

‘‘தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு நீங்கள் உதவுவதாக, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளாரே?’’

‘‘எங்களுக்குப் போட்டியே தி.மு.க-தான், அதற்குமுன்பு இந்தத் துரோகிகளை அப்புறப்படுத்த வேண்டும், திண்டுக்கல் சீனிவாசன், எங்கே பதவி போய்விடுமோ என்று பயப்படுகிறார். அவரை இப்போது ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடச் சொல்லுங்கள், பார்ப்போம்! ஒருத்தரும் ஓட்டுப்போட மாட்டார்கள். அந்தப் பயத்தில்தான் உளறுகிறார். ஓ.பி.எஸ் யார்? எனக்கு பெரியகுளத்தில் தேர்தல் வேலை பார்த்தவர். அவரை முதல்வராகக் கொண்டு வந்தோம். அடுத்து, யாரென்றே தெரியாத எடப்பாடியைக் கொண்டு வந்தோம். இருவரும் நம்பிக்கை துரோகிகள் என்பதைத் தெரிந்து கொண்டோம், தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ள கட்சியை அழிக்க நினைக்கும் இந்தத் துரோகிகளை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். சில பேர் சாப்பிட்டதற்காக நன்றியோடு இருப்பார்கள். ஆனால், இந்த எடப்பாடி... சாப்பிட்டுவிட்டுக் கை கழுவுவதற்குள் நன்றி கெட்டவர் ஆகி விட்டார். பதவி இல்லாவிட்டால் இவர்களால் இருக்க முடியாது, தூக்கம் வராது. பதவிக்காக எதையும் செய்யத் துணிவார்கள்.’’

‘‘பி.ஜே.பி-யைச் சேர்ந்த ஹெச்.ராஜாவுக்குத் தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர் பதவியைக் கொடுக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறதே?’’

‘‘எடப்பாடியும், பன்னீரும் தங்களை வளர்த்துக்கொள்ள யாருக்கும் எந்தப் பதவியையும் கொடுக்கும் துரோகிகள். இது அம்மாவின் அரசே அல்ல. தங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவும், சம்பாதிக்கவும் எந்த நிலைக்கும் இவர்கள் செல்வார்கள். வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்தாலும், தங்களுக்கு ஆதாயம் என்றால் அவருக்கும் ஒரு பதவியைப் போட்டுக் கொடுப்பார்கள். என்னிடமே ஒரு அமைச்சர், ‘நாம் பி.ஜே.பி-க்குச் சாதகமாக இல்லையென்றால் சி.பி.ஐ ரெய்டு வருமே... குடும்பத்தோடு கூண்டில் நிற்க வைத்துவிடுவார்களே’ என்றார். அவர்களுக்கு மடியில் கனமிருப்பதால் வழியிலே பயமிருக்கிறது. ஆனால், தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்.’’

‘‘எடப்பாடிக்கும் பன்னீருக்கும் பின்னால் பி.ஜே.பி இருப்பதாகவும், அவர்கள் சொல்படி இவர்கள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறதே?’’

‘‘அவர்களுக்குப் பின்னால் பி.ஜே.பி இருக்கிறதா, காங்கிரஸ் இருக்கிறதா, கம்யூனிஸ்ட் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த இவர்களே நம்பிக்கை துரோகிகளாக இருக்கும்போது, நான் வேறு எந்தக் கட்சியையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இதுபோன்ற துரோகிகளை மற்றவர்கள் பயன்படுத்தத்தான் செய்வார்கள். கடந்த 2006-ம் ஆண்டில் தி.மு.க வெற்றி பெற்றபோது, ‘வழக்கு போட்டுவிடுவார்களோ’ என்று பயந்து தி.மு.க-வுக்குப் போகவும் தயாரானவர்தான் இதே ஓ.பி.எஸ். அதன் பின்பு தி.மு.க-வினருடன் நட்பை வளர்த்து தப்பித்துக் கொண்டார்.  இப்படிப்பட்ட துரோகிகளைக் கட்சியிலிருந்து விரட்டுவதுதான் என்னுடைய முதல் வேலை.’’

‘‘அ.தி.மு.க-வுக்குத் துரோகம் செய்பவர்கள் அழிந்து போவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு சொல்கிறாரே?’’

‘‘அப்படி என்றால் அவரும், எடப்பாடி தலைமையிலான துரோகிகளின் ஆட்சியில் இடம் பெற்றவர்களும்தான் அழிந்து போவார்கள். தொண்டர்கள் எல்லோரும் கட்சிக்கு உண்மையாகத்தான் இருக்கிறார்கள்.’’

- செ.சல்மான்
படங்கள்: அ.குரூஸ்தனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!