Published:Updated:

“அவருக்கு ஒன்றும் ஆகாது... என்னை வந்து பார்ப்பார்!” - பரோலை மறுத்த சசிகலா

“அவருக்கு ஒன்றும் ஆகாது... என்னை வந்து பார்ப்பார்!” - பரோலை மறுத்த சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
“அவருக்கு ஒன்றும் ஆகாது... என்னை வந்து பார்ப்பார்!” - பரோலை மறுத்த சசிகலா

“அவருக்கு ஒன்றும் ஆகாது... என்னை வந்து பார்ப்பார்!” - பரோலை மறுத்த சசிகலா

“அவருக்கு ஒன்றும் ஆகாது... என்னை வந்து பார்ப்பார்!” - பரோலை மறுத்த சசிகலா

“அவருக்கு ஒன்றும் ஆகாது... என்னை வந்து பார்ப்பார்!” - பரோலை மறுத்த சசிகலா

Published:Updated:
“அவருக்கு ஒன்றும் ஆகாது... என்னை வந்து பார்ப்பார்!” - பரோலை மறுத்த சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
“அவருக்கு ஒன்றும் ஆகாது... என்னை வந்து பார்ப்பார்!” - பரோலை மறுத்த சசிகலா

டராசன் எப்போதும் ஒரு மாயமான். அவருடைய அறிக்கைகள், அவரைப் பற்றிய செய்திகள், அவரது நடவடிக்கைகள், அவர் பேசும் பேச்சுகள் எல்லாமே மர்மமாக இருக்கும். திடீரென ஒரு நாள் களத்தில் தென்படும் நேரத்தில் எதையாவது அதிரடியாகக் கொளுத்திவிடுவார். அதே வேகத்தில் காணாமலும் போய்விடுவார். அ.தி.மு.க-வில் உச்சகட்ட பரபரப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், நடராசன் மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு என்ன ஆனது?

“அவருக்கு ஒன்றும் ஆகாது... என்னை வந்து பார்ப்பார்!” - பரோலை மறுத்த சசிகலா

நடராசனின் உடல்நிலை பற்றி கடந்த பல மாதங்களாகவே மோசமான செய்திகள் வந்துகொண்டிருந்தன. ஆனால், நடராசன் தரப்பு அதைத் தீவிரமாக மறுத்து வந்தது. வழக்கம்போல், நடராசன் மவுனமாக இருந்தார். தன் உடல்நிலை பற்றி எதையும் அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஜெயலலிதாவின் உடல், ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, அங்கு சிறிதுநேரம் நின்றிருந்தார். அதன்பிறகு, இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நடராசன், அங்கே சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்தார். தஞ்சாவூரில் வருடா வருடம் நடத்தும் பொங்கல் விழாவை இந்த ஆண்டும் சிறப்பாக நடத்தினார். அதில் பேசிய அவர், “நாங்கள் குடும்ப ஆட்சிதான் நடத்துவோம்...” என்றார். அதுதான் அந்தக் குடும்பத்தில் அடுத்து வந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆரம்பமாக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன்பிறகு, பிப்ரவரி 5-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடராசன். அன்றுதான் அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆளும்கட்சியின் சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்திருந்தார். அந்த நேரத்தில் நடராசன் மருத்துவமனையில் இருந்தது, பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனால், அவருக்கு இருக்கும் பிரச்னைகள் பற்றி வெளியில் தெரியவில்லை. அதன்பிறகு சில நாள்கள் கழித்து மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அப்போதுதான் அவருக்கு சிறுநீரகங்களும், கல்லீரலும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ‘உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’ என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதற்காக, தமிழக அரசின் உறுப்பு தானம் பெறும் திட்டத்திலும் நடராசன் பதிவுசெய்து வைத்திருந்தார். ஆனால், அவருக்குப் பொருத்தமான உறுப்புகள் தானமாகக் கிடைப்பதில் சிக்கல் நீடித்துவந்தது. இதற்கிடையில், குற்றாலத்தில் அவருடைய தம்பி ராமச்சந்திரனுக்குச் சொந்தமான ரிசார்ட்டில் தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சை பெற்றார். அந்த நேரத்தில், ஏப்ரல் 15-ம் தேதியன்று சசிகலாவின் அண்ணன் விநோதகனின் மகன் மகாதேவன் மரணமடைந்தார். உடல் தளர்ந்த நிலையில்தான் அங்கிருந்து கிளம்பி இறுதி அஞ்சலிக்கு நடராசன் வந்தார்.

“அவருக்கு ஒன்றும் ஆகாது... என்னை வந்து பார்ப்பார்!” - பரோலை மறுத்த சசிகலா

சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனனின் மனைவி சந்தானலெட்சுமி ஜூலை 27-ம் தேதி காலமானார். நடராசன் அந்தத் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அப்போதும் அவர் குற்றாலத்தில்தான் இருந்தார். அதன்பிறகு, கேரளா சென்று ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சை எடுத்துக்கொண்டார் நடராசன். அங்கு, 20 நாள்களுக்கு மேலாகத் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற நடராசன், ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னை திரும்பினார். இந்த நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதையடுத்து அன்று இரவு சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய கல்லீரல் மற்றும் கிட்னிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு இப்போது டயாலிசிஸ் நடந்துகொண்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் சொல்கிறார்கள். மேலும், இப்போது அவருடைய உறவினர்கள் மூலம் உறுப்பு தானம் கிடைத்துள்ளதால், விரைவில் அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடராசனின் உடல்நிலையை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உலகப் புகழ்பெற்ற மருத்துவர் முகமது ரேலா கண்காணித்து வருகிறார்.

நடராசனின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதால், அவரைப் பார்ப்பதற்காக சசிகலா பரோல் கேட்டு வெளியில் வருவார் என்று செய்திகள் உலாவின. குடும்ப உறவினர்கள் சிலர், சசிகலாவைச் சிறையில் சந்தித்து பரோலுக்கு விண்ணப்பிப்பது குறித்துக் கேட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை நிராகரித்த சசிகலா, “இப்போதைக்கு பரோல் எதுவும் கேட்க வேண்டாம். நான் இப்போது சிறையில் இருந்து வெளியில் வருவதை விரும்பவில்லை. அவருக்கு ஒன்றும் ஆகாது. விரைவில் குணமடைந்து அவரே என்னை வந்து பார்ப்பார்” என்று சொல்லிவிட்டாராம்.

- ஜோ.ஸ்டாலின்
படங்கள்: ஆ.முத்துக்குமார், ப.சரவணகுமார்