Published:Updated:

127 அம்மா உணவகங்கள் திறப்பு!

127 அம்மா உணவகங்கள் திறப்பு!
127 அம்மா உணவகங்கள் திறப்பு!

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 127 வார்டுகளில் அம்மா உணவகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்," முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் 127 அம்மா உணவகங்களை வீடியோ கான்பரன்சிங் மூலமாகத் திறந்து வைத்தார்.

127 அம்மா உணவகங்கள் திறப்பு!

சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும் பணி நிமித்தமாக வந்து செல்பவர்களும் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் அதன் 200 வார்டுகளிலும் சுகாதார மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்குவதற்காக வார்டுக்கு ஒன்று வீதம் 200 சிற்றுண்டி உணவகங்கள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

##~~##
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் 15 மலிவு விலை சிற்றுண்டி உணவகங்களை 19.2.2013 அன்று சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் காலை 7 மணி முதல் 10 மணி வரை சிற்றுண்டியாக இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் என மலிவு விலையில் தரமானதாகவும் சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த அம்மா உணவகங்கள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பையும் பேராதரவையும் பெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு 24.02.2013 அன்று 24 வார்டுகளிலும், 6.3.2013 அன்று 34 வார்டுகளிலும், என இதுவரை மொத்தம் 73 அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் மீதமுள்ள 127 வார்டுகளில் அம்மா உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார். இதன் மூலம் சென்னை மாநகராட்சியில் வார்டுக்கு ஒன்று வீதம் மொத்தம் 200 அம்மா உணவகங்கள் இன்று முதல் செயல்படும்" என்று கூறப்பட்டுள்ளது.