Published:Updated:

“வழக்கும் வாய்ப்பூட்டு சட்டமும் என்னை வழிமறிக்க முடியாது!”

“வழக்கும் வாய்ப்பூட்டு சட்டமும் என்னை வழிமறிக்க முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
“வழக்கும் வாய்ப்பூட்டு சட்டமும் என்னை வழிமறிக்க முடியாது!”

கொந்தளிக்கும் நாஞ்சில் சம்பத்

“வழக்கும் வாய்ப்பூட்டு சட்டமும் என்னை வழிமறிக்க முடியாது!”

கொந்தளிக்கும் நாஞ்சில் சம்பத்

Published:Updated:
“வழக்கும் வாய்ப்பூட்டு சட்டமும் என்னை வழிமறிக்க முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
“வழக்கும் வாய்ப்பூட்டு சட்டமும் என்னை வழிமறிக்க முடியாது!”

பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனைத் தரக்குறைவாக விமர்சித்தார் என பி.ஜே.பி-யினர் ஒரே நாளில் பல இடங்களில் கொடுத்த புகார்களால், தற்போது தலைமறைவாக இருக்கிறார் நாஞ்சில் சம்பத். அவரைத் தொடர்புகொண்டோம்.

“வழக்குகளுக்குப் பயந்து நீங்கள் தலைமறைவாக இருப்பதாகச் சொல்கிறார்களே?’’

“பொதுவாழ்வில் சிலுவைகளைச் சுமந்திருக்கிறேன். தேச விரோதச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகிய அடக்குமுறை சட்டங்களை ருசி பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள எட்டு மத்திய சிறைச்சாலைகளில் ஏழு சிறைச்சாலைகளில் வாசம் செய்தவன் நான். அன்றைக்கு என் வீட்டை முற்றுகையிட்டு என்னைத் தாக்குவதற்கு ஒத்திகைப் பார்த்தார்கள். இதற்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய சதி இருப்பதாகக் கருதுகிறேன். வீட்டுக்கு முன்னால், கல்லெறிந்து கொடும்பாவி எரித்தது அராஜகம்.

பி.ஜே.பி-யில் உள்ளவர்களைக் கொள்கை ரீதியாக எதிர்க்கிறேனே தவிர, அவர்களுக்கும் எனக்கும் வேறொரு விரோதம் இல்லை. ஆனால், ஒரே நாளில் தமிழ்நாட்டில் உள்ள பல காவல்நிலையங்களில் என் மீது பிணையில் வெளியே வரமுடியாத வழக்குகளைப் பதிவுசெய்துள்ளார்கள். அதிலும், பெண் வன்கொடுமை சட்டம் என் மீது ஏவப்பட்டுள்ளது. பொய் வழக்குப் பதிந்து தனி டீம் அமைத்து என்னைக் கைதுசெய்யத் துடிக்கிறார்கள். இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டுமென்று நீதிமன்றத்தில் மனு செய்துள்ளேன். அந்தத் தீர்ப்புக்காக, இப்போது மறைந்திருக்கிறேன்.” (இந்த பேட்டிக்குப் பிறகு நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.)

“வழக்கும் வாய்ப்பூட்டு சட்டமும் என்னை வழிமறிக்க முடியாது!”

‘‘இத்தனை வழக்குகள் உங்கள் மீது பாய்வதற்குக் காரணம் என்ன?’’

‘‘நான் ஒரு கூர்மையான விமர்சகன். நேர்மையான விமர்சகன். உண்மையை உரத்தக் குரலில் எடுத்துச் சொல்கிறவன். அ.தி.மு.க என்ற மகத்தான இயக்கத்தை உயிர்ப்புடன் மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய வல்லமை இன்றைக்கு தினகரனுக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கைக்குச் சிறகுகள் தயாரிக்க ஒரு பிரசாரகன் என்ற நிலையில் உழைக்கிறேன். இதற்காக என் மீது இவ்வளவு பகை பாராட்ட என்ன தேவை இருக்கிறது என்று புரியவில்லை.’’

‘‘வழக்குகளைப் பாய்ச்சி உங்களைத் தங்கள் பக்கம் கொண்டுவர எடப்பாடி அரசு திட்டமிடுகிறது என்று நினைக்கிறீர்களா?’’

‘‘வழக்குகளோ, வாய்ப்பூட்டுச் சட்டங்களோ என்னை வழிமறிக்க முடியாது. மரணவாசல்களைக் கடந்தே நான் இதுவரை வந்துள்ளேன். அதனால், இந்த வழக்குகளுக்காகக் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன்.’’

‘‘கொள்கைரீதியாக விமர்சனம் செய்பவர்களைக் குறிவைக்கும் போக்கு அதிகரித்துவிட்டதா?’’

‘‘கர்நாடகாவில் அதுதானே நடந்துள்ளது. கொள்கைரீதியாக விமர்சனம் செய்பவர்களை வெட்டி சாய்த்துவிடுவது என்றுதானே இவர்கள் முடிவெடுத்துள்ளார்கள். இந்தியா முழுவதும் இதே நிலை தொடர்கிறது. இது நாட்டுக்கே கேடு என்றுதான் சொல்லவேண்டும்.’’

‘‘அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா, தினகரனை நீக்கியுள்ளார்களே?’’

‘‘இது பொதுக்குழு கூட்டம் இல்லை... கட்சிக் கூட்டம் என்று கழகத் துணைப் பொதுச்செயலாளர் தினகரனே சொல்லியுள்ளார். அ.தி.மு.க சட்டவிதிப்படி, பொதுச்செயலாளரால்தான் பொதுக்குழுவைக் கூட்ட முடியும். எனவே, அது பொதுக்குழு கூட்டமே அல்ல. அதன் தீர்மானங்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை.’’

‘‘எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கலைப்பதற்காக தி.மு.க-வுடன் தினகரன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?’’

‘‘நான், பத்து நாள்களுக்கு மேலாக தமிழகத்திலேயே இல்லை. எனவே, இதுகுறித்து தினகரனிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.’’

- அ.சையது அபுதாஹிர்
படம்: கே.ராஜசேகரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism